Wednesday, October 4, 2017

மாங்குயிலே பூங்குயிலே

மாங்குயிலே பூங்குயிலே

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு
எந்த நாளு.....
முத்து முத்துக் கண்ணாலே நான்
சுத்தி வந்தேன் பின்னாலே !!....

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு
எந்த நாளு.....
முத்து முத்துக் கண்ணாலே நான்
சுத்தி வந்தேன் பின்னாலே !!....

காலைத் தழுவி நிக்கும் கனகமணிக் கொலுசு யம்மா...
நானாக மாற இப்போ நெனக்குதம்மா மனசு....
உள்ளே இருக்குறீக வெளிய என்ன பேச்சு ஐயா...
ஒண்ணா புரியவில்ல மனசு எங்கே போச்சு ?...
இந்த மனசு நஞ்ச நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெத தான்
சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு
சொன்ன கத தான்
சொந்தக் கத தான்.....
தோளத் தொட்டு ஆள ஐயா
சொர்க்கத்துல சேர
மால வந்து ஏற பொண்ணு சம்மதத்தக் கூற....
சந்தனங்கரச்சுப் பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு மொத்தமும் ஒனக்கு !!....

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு
எந்த நாளு.....
முத்து முத்துக் கண்ணாலே நான்
சுத்தி வந்தேன் பின்னாலே !!....

மாமரத்து கீழ நின்னு மங்கையவ பாட
அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு ?...
பூமரத்துக் கீழிருந்து பொண்ணு அவ குளிக்க
அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு ?...
கன்னி மனசு ஒன்ன நெனச்சு
தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்
பொன்னை எடுத்து அள்ளிக் கொடுத்து வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்.....
கூரைப் பட்டுச் சேல யம்மா கூட ஒரு மால
வாங்கி வரும் வேள பொண்ணு வாசமுள்ள சோல....
தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு
தேடுது மனசு பாடுது வயசு !!!.....

             

No comments:

Post a Comment