மஞ்சள் மகிமை-படைப்பிலக்கியங்களும் பண்பாட்டு வெளிப்பாடும்-Tho. Paramasivan

மஞ்சள் மகிமை-படைப்பிலக்கியங்களும் பண்பாட்டு வெளிப்பாடும்- Tho. Paramasivan பண்பாடு' என்பதனை ஒரு மொழியோடு மட்டும் சார்த்திப் பார்ப்பது இயற்கையாகாது. ஒரு நிலப்பகுதியில் தொட்டெடுத்த மொழிகளோடு உறவுடையதாகவே ஒரு மக்கள் திரளின் பண்பாடு அமையும். எனவே 'தமிழ்ப் பண்பாடு' என்ற சொல்லை விட "திராவிடப் பண்பாடு' என்ற சொல்லே பொருளுடையதாகும் தமிழோடு மட்டுமன்றி மலையாளம், துளு, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள் கூட்டத்தாருக்கும் இவை வழங்கும் நிலப்பகுதியினுள் அடங்கும் திருந்தாத மொழிகளைப் பேசும் மக்கள் கூட்டத்தாருக்கும் அடிப்படைக் கூறுகளில் ஒரு இடையே பொதுத்தன்மை பண்பாட்டின் நிலவுகின்றது அந்தவகையில் புழங்கு பொருள்சார் பண்பாடும் (meterial culture ) பெரும்பாலும் ஒத்ததாகவே அமையும் கருத்தியல் நிலையில் நிலத்தின் தன்மை, உற்பத்தி உறவுகள், புறநிலைத் தாக்குதல்கள், பருவகாலம் ஆகியவை சார்ந்து சிற்சில மாறுதல்களுடன் பண்பாட்டுக் கூறுகள் வெளிப்படும் மேலோட்டமாக எடுத்துக்காட்டுவதானால் கற்பு என்னும் கருத்தியல் வெளிப்பாட்டினை எடுத்துக் கொள்ளலாம் வள்ளி கீழ்வீழா வரைமிசைத்தேன் தொடா கொல்லை குரல்வாங்கி யீனா என்று பெண்ணின் கற்பினை இயற்கையே பாதுகாப்பதாகக் கலித்தொகை பாட்டு ஒன்று கூறும். அவள் கற்பு நெறி தவறும்போது இயற்கை தன் நிலை மாறித் தண்டிக்கும் என்பது இதன் கருத்து புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் தகழியின் 'செம்மீன்' நாவல் மீனவர் வாழ்க்கையின் பிற்புலத்தில் இதே கருத்தினை வெளிப்படுத்தியது நாவலை விட செம்மீன் திரைப்படத்தில் இக்கருத்து உயிர்ப்புடன் காட்சிப்படுத்தப்பட்டது திராவிடப் பண்பாட்டின் தனித்த கூறுகளில் ஒன்று முறைப்பெண், முறை மாப்பிள்ளை உறவாகும். நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான சாதித் திரள்களில் இது வலிமையான கூறாகும். சங்க இலக்கிய அகப்பாடல் தொகுதியில் இந்த வாழ்வியல் கூறுபற்றி ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த உறவு முறையின் பகுதியான மாமியார்- மருமகன் கூச்சம் சங்க இலக்கியங்களில் மறைமுகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றும் பெரும்பாலான சாதிகளில் இந்த உறவு முறை கூச்சம் நிரம்பியதாகவே உள்ளது. சங்க இலக்கிய அகத்திணை மாந்தர்களுள் தலைவியின் தாயான நற்றாயும் ஒருத்தியாவாள். ஆனால் நற்றாய் கூற்றுப் பாடல்களும் மருமகனான தலைவனைப் பற்றி எதுவும் பேசுவது இல்லை என்பது ஓர் இலக்கிய மரபாகப் பின்பற்றப்பட்டுள்ளது இந்த இலக்கிய மரபு வாழ்வியல் வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளிலிருந்து விளைந்ததாகும். வைதிகச் சார்புடைய பக்தி இலக்கியத்தில் இந்த மரபு மீறப்பட்டுள்ளதனை அப்பர் தேவாரப் பாடல் ஒன்றின் வழி அறிகின்றோம் உறவு பேய்க் கணம் உண்பது வெண்தலை உறைவது ஈமம் உடலில் ஓர் பெண் கொடி துறைகளார் கடல் தோணி புரத்துறை இறைவனார்க் கிவள் என்கண்டு அன்பாவதே என்பது அப்பாடல் திராவிட மண உறவுமுறையில் ஓர் ஆண் மகன் மனைவியைப் போல தன் உடன் பிறந்தவளுக்கும் அவள் கணவனுக்கும் கடமை உடையவன் ஆகிறான். இடர்படும் காலத்தில் வலியச்சென்று உடன்பிறந்தவளின் கணவனுக்கு உதவுவது சமூக வழக்கம் வடமொழிக் கதையான பாரதக் கதையில் அருச்சுனனுக்காகக் கண்ணன் தேரோட்டி உதவுகின்றான். தன் தங்கை சுபத்திரையின் கணவன் என்பதனால் கண்ணன் அவனுக்குச் செய்யும் உதவி இது மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின்மேல் முன்னங்குசென்று மோழை எழுவித்தவன் என்று தண்ண னை பெரியாழ்வார் இந்த உறவுமுறையின் பாடுகின்றார் இந்த அடிப்படையில் உறவுமுறையின் தொடர்ச்சியாகவே தாய்மாமன் என்பவர் ஒருவருக்குத் தந்தையினும் பெரிய மரியாதைக்குரிய வருகிறார் திரைப்படங்கள் அண்மைக்காலத் இவ்வுறவினைப் வணிகமயப்படுத்தியிருப்பதனைக் காண முடிகின்றது. தமிழ்த் பெருமளவு இருபதாம் நூற்றாண்டின் நாவல் சிறுகதை ஆகிய சமகாலப் படைப்பிலக்கியங்கள் இரண்டும் பெரும்பாலும் இதழ்கள் சார்ந்தே வளர்ந்துள்ளன. இவற்றிலும் கணிசமானவை மேற்சாதியினரால் தங்கள் சாதி அடையாளத்தோடும் சாதிய அடையாளமின்றியும் எழுதப்பட்டவை. அறுபதுகளின் தொடக்கப்பகுதிவரை கல்கி, மு.வ நா.பார்த்தசாரதி அகிலன் உள்ளிட்ட பெயர் படைப்பாளிகளின் ஆக்கங்களெல்லாம் பெற்ற இவ்வகையிலேயே அமைந்தன. தேர்ந்த கலைஞரான தி. ஜானகிராமனும் இந்த வரிசையிலிருந்து தப்பவில்லை . பண்பாடு என்பது வெகுமக்கள் திரள் சார்ந்தது. அடிப்படைப் பண்புகள் சிலவற்றுடனும் தனிக் கூறுகளுடனும் விளங்கும் இம்மக்கள் திரளை அடையாளப்படுத்தும் எழுத்துகள் இவர்களிடமிருந்து பிறக்கவில்லை. பண்பாட்டு வேர்களைக் கண்டு அவற்றின் வாழ்வினையும் வீழ்ச்சியினையும் அடையாளம் காட்டும் எழுத்துகள் அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்துதான் பிறந்தன. ஜெயகாந்தன் எழுத்துகளில் ஒரு பகுதியினை இந்த வகையினைச் சார்ந்ததாகக் கொள்ளலாம் இவ்வகையில் குறிப்பிட்டுச் சொல்லத்தகுந்த முதல் எழுத்தாக நீல பத்மநாபனின் 'தலைமுறைகள்' நாவலையே கொள்ள முடியும். மனித உறவுகளின் குடும்ப உறவுகளின்) மேன்மையினைச் சொல்லி அவற்றின் சிதைவினை அடையாளப்படுத்தும் எழுத்துகள் கரிசல் வட்டார எழுத்துக்களிலிருந்தே பிறந்தன எனவும் சொல்லலாம்க குறிப்பாகக் கி.ரா. வின் 'புறப்பாடு' என்ற சிறுகதை பெரும்பாலும் திறனாய்வாளர்களால் பேசப்படாத ஒரு மிகச்சிறந்த கதையாகும் மரணம் குறித்த நாட்டார் மரபுகளின் உணர்வுகளைப் புலப்படுத்தும் கதை இது. வேதம், வேதாந்தம், யோகம் என்று நகர்ப்புறம் சார்ந்த மேல் மத்தியதர வர்க்க ஆன்மீகச் சிந்தனைகளைச் சட்டென்று தூக்கியெறியும் ஆற்றல் மிகுந்த சிறுகதை. டி.எஸ். எலியட்டின் பாழ்நிலம் (The waste land ) கவிதையினைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய தமிழ்நாட்டுத் திறனாய்வாளர்களுக்கு இந்தச் சிறுகதை பிடிபடவே இல்லை . சாதலும் புதுவ தன்றே என்ற புறநானூற்றுச் சிந்தனையின் தொடர்ச்சியாக இக்கதையினைக் கொள்ள வேண்டும். பிறப்பினைப் போல இறப்பும் ஓர் இயல்பான நிகழ்வு என்பதே வெகுமக்கள் பண்பாட்டின் அடிக்கூறுகளில் ஒன்றாகும் இதனைப் புரிந்துகொள்ளாத காரணத்தால்தான் மகப்பேற்றினை ஒரு நோயாகவும் சூல்கொண்ட பெண்ணை ஒரு நோயாளியாகவும் கருதும் நவீன நாகரிகம் வேர்களை அடையாளம் காணமுடியாமல் தவிக்கின்ற எறது இதன் விளைவாகவே நகர்ப்புறங்களில் மகப்பேறு மனைகள் (Maternity Homes ) மகப்பேறு மருத்துவமனைகள் (Maternity Hospitals ) ஆகக் காட்சி தருகின்றன பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று, அதன் அசைவுகள் வட்டாரத் தன்மைகளோடு தன்மையானது சேர்ந்து பண்பாட்டளவில் வேறுபடுவதாகும் தமிழ் நாட்டில் வட்டாரத் ஓரளவே சிதைந்துள்ளது. எனவே அண்மைக் காலப் படைப்பிலக்கியங்களில் வட்டாரத் தன்மையுடன் வெளிவரும் நாவல், சிறுகதைகள் ஆகியன பண்பாட்டு வேர்களைத் தம்முள்ளே கொண்டிருக்கின்றன. புதுமைப் பித்தனே இம்மரபினைத் தொடங்கிவைத்தார்; எனினும் மிக அண்மைக் காலமாக இந்நெறி ஒரு மரபாகச் செழித்து வளருகின்றது. இமையத்தின் 'செடல்' நாவல் இதற்கு நல்ல உதாரணம். பண்பாடு என்பது பழைமையைக் கொண்டாடுவது அன்று உயிருள்ள வேர்களை மட்டும் அடையாளம் கண்டு பாதுகாப்பதாகும். ஏனென்றால் உயிருள்ள வேர்கள் இன்னமும் சமூக அசைவியக்கங்களை முன்னெடுத்துச் செல்கின்றன என்பதே அதற்குரிய காரணமாகும்.
கூலமும் கூலியும்-----அதிர்ச்சி மதிப்பீடு

No comments:

Post a Comment