Showing posts with label lyrics. Show all posts
Showing posts with label lyrics. Show all posts

Friday, April 13, 2018

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
- உன் நரம்போடு தான் பின்னி வளரனும்
தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி

வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க
உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ
வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பி விடாதே

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா

Tuesday, March 6, 2018

செம்பூவே பூவே

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

அந்திச் சூரியனும் ஊரில் சாய மேகம் வந்து கச்சை ஆக
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டின் காதல் குற்றாலம்
தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான்
சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைவளை கீறியதோ

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சில் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே
மின்னியது தாமரை வண்டு தொடும் நாளிலா
பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலா
முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
நாணத்தாலோராடை சூடிக்கொள்வேன் நானே
பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையலின் ரகசியமே

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ
ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

Thursday, December 21, 2017

உன்னைப் பார்த்து

உன்னைப் பார்த்து

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ?
வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ ?

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

Saturday, December 9, 2017

பொன்வானம் பன்னீர்

பொன்வானம் பன்னீர்

MOVIE : INDRU NEE NAALAI NAAN
MUSIC : ILAYARAAJA
SINGER : S JANAKI

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா…
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

Monday, November 27, 2017

அடி ராக்கோழி கூவும்

அடி ராக்கோழி கூவும்

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு
அந்த ஏற்ககாடு ஊட்டி போல
குளிர் ஏராளம் ஏறிப்போச்சு
குளிர் அடிக்க அடிக்க
கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க
கட்டிப் புடிக்க புடிக்க வா மாமா
அடி ஆத்தி ஆடு
சுதி ஏத்திப் பாடு

அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

தட்டி தட்டி தவுல மெல்ல தட்டி
விடியும் வர கச்சேரி வெக்கலாமா
பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம்
நீ வித்தைகள காட்டாம நிக்கலாமா

கட்டி கட்டி இறுக உன்ன கட்டி
அழகுருக்கும் கொஞ்சாமல் செல்லலாமா
என்ன வேணும் என் எண்ணங்கள நானும்
உங்கிட்ட வந்து காத்தோடு சொல்லலாமா

அடி நீ என்ன கேட்டாலும் தாரேன்
அந்த தோப்போறம் வான்னாலும் வாறேன்

விடிஞ்சாலும் மாமா
விடமாட்டேன் ஆம்மா

அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசா..ங்கம் ஆகிப்போச்சு

கொஞ்சி கொஞ்சி மடியில் உன்னக் கொஞ்சி
கலந்திருக்க வந்தாச்சு திருநாளு
கன்னி தோளு கை தொட்டு கொஞ்சும் ஆளு
என் வள்ளிக்குப்பம் கொண்டாடும் வடிவேலு

சுத்திச்சுத்தி நிதமும் என்ன சுத்தி
புடிச்சுப்புட்டே இந்நேரம் வல வீசி
மெத்தப் போட உன் மந்திரத்திலாட
நான் ஒத்துக்கிட்டேன் வாயேண்டி மகராசி

நிலா எம்மேல தீயாட்டம் காயும்
இப்போ உம்மேல எம்மேனி சாயும்

அடி ஆத்தி ஆடு
சுதி ஏத்திப் பாடு

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

குளிர் அடிக்க அடிக்க
கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க
கட்டிப் புடிக்க புடிக்க வாம்மா வா
அடி ஆத்தி ஆடு
சுதி ஏத்திப் பாடு
அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு...

Friday, November 24, 2017

உன்னிடத்தில் என்னை

உன்னிடத்தில் என்னை

படம் : அவளுக்கென்று ஒரு மனம் (1971)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்,ராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர் : எஸ்.ஜானகி

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை
உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை
உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை
உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்

காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது
காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது
இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்
தடுத்தால் கூட தருவேன்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை
உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்

வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
இனி ஒரு பிரிவேது அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
இருவர் நிலையும் சிலையே

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை
உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்

ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன உள்ளம் அருகே வந்தது
கூடல் கொள்ள மன்னன உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
காலையில் கனவுகள் எங்கே

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை
உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை
உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்

ஆசை அதிகம் வச்சு

ஆசை அதிகம் வச்சு

ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி...

ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி...

பெ: சின்னப்பொன்னு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் புது வெள்ளிரதம் நான்
கன்னுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு செந்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாபத் தேரேறலாம்
அடி ஆத்தாடி ஆம்புட்டும் நீ காணலாம்
இது பூ சூடும் பொன் மாலை தான் என் செல்லகுட்டி....

ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி...

பெ: சின்ன சிட்டு நான் ஒரு சிங்கார பூ நான்
தங்க தட்டி நான் நல்ல தாளம் பூ நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான் மேகம் நான்
என் மச்சானே என்னோடு நீராடலாம்
என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலை  தான் என் செல்லகுட்டி...

ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி...

அடுத்தாத்து அம்புஜத்தை

அடுத்தாத்து அம்புஜத்தை

Movie :  Ethir Neechal
Singer : Tms , Susheela
Music  : MSV

பெ: அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா … ஏன்னா
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா
அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பொடவயை வாங்கிக்கிறா
பட்டு பொடவயை வாங்கிக்கிறா
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா

ஆ: அடுத்தாத்து சங்கதியெல்லம் நமக்கேண்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி.. பட்டூ…
அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
மூன்றெழுத மூணு ஷோவும் பாத்தது நீதாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கேதடி… பட்டூ
புடவைக்கேதடி.
அடுத்தாத்து சங்கதியெல்லம் நமக்கேண்டி

பெ: உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு
உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு

ஆ: பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு

பெ: நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைனட்டுண்ண்டா நேக்கு
நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைனட்டுண்ண்டா நேக்கு
எட்டுக்கல்லு வேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு

ஆ: சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு
சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு

பெ: எப்போ இருந்தது இப்போ வர்ரதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு .. ம்,,கும்
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா

ஆ: ஏட்டிக்கு போட்டி பேசாதடி பட்டூ..ஊ….

பெ: பேசினா என்ன வைப்பேளா ஒரு குட்டு…ஊ…

ஆ: ஆத்திரம் வந்த பொல்லாதவண்டி கிட்டு..ஊ..

பெ: என்னத்த செய்வேள்

ஆ: சொன்னத்த செய்வேன்

பெ: வேரென்ன செய்வேள்

ஆ: : அடக்கி வைப்பேன்

பெ: அதுக்கும் மேலே

ஆ: ம்ம்….. பல்ல உடைப்பேன்

பெ : ஆ…ஆ..ஆ.ஆ….
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா

ஆ: பட்டூ.. அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி
பட்டு நமக்கேண்டி , பட்டு நமக்கேண்டி....

மனதில் ஒரே ஒரு

மனதில் ஒரே ஒரு

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

குழலூதும் கண்ணனின் வண்ண மேனி
கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி
வலை வீசும் கனவிலே வந்து போவான்
கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்
தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு
சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
ல ல ல ல ல ல ல

மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்
ஆண்பிள்ளை பணிந்துவிடக் கூடாது பெண்ணே
கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

மானே தேனே கட்டிப்புடி

மானே தேனே கட்டிப்புடி

மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி...
மல்லிக வாசனை மந்திரம் போடுது
மன்மத ராசனின் மய்யலை தேடுது !!....

மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி...
மல்லிக வாசனை மந்திரம் போடுது
மன்மத ராசனின் மய்யலை தேடுது !!....
நாணல் பூவை போல உள்ளம் வாடிடுமே
நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே....
கோடை மேகம் போல உன்னை தேடி வந்தேன்
ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன் !....
கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான்
மம்மதன் அள்ளி வச்சான்
ஆத்தோரம் ….. காத்தாடுது
காத்தோடு …… பூவாடுது
பூவோடு ……… தேன் பாயுது
தேனோட ……… தேன் சேருது
அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான் வா வா வா வா !!...

மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி...
மல்லிக வாசனை மந்திரம் போடுது
மன்மத ராசனின் மய்யலை தேடுது !!....

அன்னம் கூட தோற்கும் நடையாடுதடி
ஏ.. அம்பு கூட தோற்கும் விழி பாடுதடி !....
காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன்
மாமன் மேலே ஆசை
கொண்டு ஓடி வந்தேன்...
உள்ளத்த மெள்ள தான் அள்ள வந்தா
அம்மம்மா என்ன சுகம் !....
ஊரோரம் ………. தோப்பானது
தோப்போரம் …….. நீரானது
நீரோட ……… நீர்சேருது
ஆனந்தம் …….. தான் பாடுது
கன்னமும் கண்களில் சொன்னது என்னடியோ… வா வா வா வா !!!.
மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி...
மல்லிக வாசனை மந்திரம் போடுது
மன்மத ராசனின் மய்யலை தேடுது !!....

Thursday, November 23, 2017

காதலின் பொன்

காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்

காதலின் பொன் வீதியில்
நானோரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்

திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை
நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக

இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம்போல
என் மனதினிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக
காதலின் பொன் வீதியில்...

விழி ஓரங்களில் சில நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்
அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையா...கும்

அந்தக் கலைகளிலும் பல புதுமை உண்டு
அதைப் பழகுவதே பேரின்பம்
இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை
இனி காலம் எல்லாம் உன் சொந்தம் !

காதலின் பொன் வீ...தியில் காதலன் பண்பா...டினான் ..

Wednesday, November 22, 2017

என் கேள்விக்கென்ன

என் கேள்விக்கென்ன

TMS: என் கேள்விக்கென்ன பதில்
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி

PS: ஓஹோஹோஹோ...ஹோ ஹொ...

TMS: என் கேள்விக்கென்ன பதில்
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி

PS: ஓஹோஹோஹோ...
பூவையர் உள்ளத்தில்
இந்த மௌனம் சம்மதமே
பூவையர் உள்ளத்தில்
இந்த மௌனம் சம்மதமே
சம்மதம் என்றேதான்
அந்த ஜாடை சொல்லிடுமே
சம்மதம் என்றேதான்
அந்த ஜாடை சொல்லிடுமே
வரவேண்டும் நல்ல துணை
தரவேண்டும் வாழ்வுதனை
நிலையாகும் உறவு முறை
பெறவேண்டும் இறுதிவரை

என் கேள்விக்கென்ன பதில்
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலை கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி

TMS: புன்னகை அள்ளி வர
நடை போடும் பொன்மயிலே
புன்னகை அள்ளி வர
நடை போடும் பொன்மயிலே
அன்பெனும் பள்ளியிலே
புது மாணவியானவளே
அன்பெனும் பள்ளியிலே
புது மாணவியானவளே
விழி தானே சொல்லித் தரும்
மனம் தானே எழுதி வரும்
ஒரு நாளில் பழகி விடும்
உடல் தானே துள்ளி விழும்

என் கேள்விக்கென்ன பதில்
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி

PS: ஓஹோஹோஹோ...

TMS: அனுபவம் உண்டானால்
இந்த ரகசியம் புரியதோ
PS: பெண்மையின் சன்னதியில்
வந்து பார்த்தால் தெரியாதோ
TMS: அலை போலே குழல் அசைய
PS: இலை போலே நடை பயில
TMS: வளை ஓசை இசை கொடுக்க
PS: வருவேனே இணைந்திருக்க

TMS: என் கேள்விக்கென்ன பதில்
PS:: என் கேள்விக்கென்ன பதில்
TMS: உன் பார்வைக்கென்ன பொருள்
PS: மணமாலை கொண்டு வரும்
TMS, ப்ஸ்: திரு நாளும் என்று வரும்.....

பொன்னெழில் பூத்தது

பொன்னெழில் பூத்தது

பொன்னெழில் பூத்தது தலைவா வா....
வெண் பனி தூவும் இறைவா வா !...
உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா !!...

பொன்னெழில் பூத்தது தலைவா வா....
வெண் பனி தூவும் இறைவா வா !...
உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா !!...

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்....
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன் !..
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டுக் கை படப் பாடுகிறேன் !!....

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில் !...
என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல் !!...

முன்னம் என் உள்ளத்தில்
முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே....
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே ?...
கிண்ணம் நிரம்பிடச் செங்கனிச் சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே ?...

பொன்னெழில் பூத்தது தலைவா வா....
வெண் பனி தூவும் இறைவா வா !...
உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா !!...

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு....
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு !...
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு !!...

என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ...
என்னிடம் கோபம் கொள்ளுவதோ ?...
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ !!!....

பொன்னெழில் பூத்தது தலைவா வா....
வெண் பனி தூவும் இறைவா வா !...
உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா !!...