மஞ்சள் மகிமை-Tho.Paramasivan
மஞ்சள் பூசிக் குளிப்பதும் மஞ்சள்
கயிறு அணிவதும் பெண்ணுக்குரிய
முக்கிய மான செய்திகளாகும். மஞ்சள் என்பது பெண்ணோடும் மங்களகரம்' என்பதோடும் இணைத்துப் பேசப்படுகிறது
ஆனால் மஞ்சள் ஆரோக்கியம்
தொடர்பான ஒரு பொருளாகவே தமிழர் வாழ்வில் முன்பு
இருந்துள்ளது. கிருமி எதிர்ப்புச் சக்தி, மஞ்சளில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
நோக்கி யசோதை நுணுக்கிய
மஞ்சளால்' கண்ணனை நீராட்டுவது பற்றிப் பெரியாழ்வார் பாசுரம் பேசுகிறது
பூசுமஞ்சளில் புகழ் பெற்றது 'விறலி
மஞ்சள்' ஆகும். விறல் என்றால் முகம். விறலி என்றால் முகபாவங்கள் காட்டி நடிக்கிற நடனமாடுகிற பெண்ணைக் குறிக்கும். அன்று கூத்தாடிப் பெண்கள் அன்றைய விளக்கொளியில் நாட்டியமடினர் அவர்களது முகம் துடிப்பாகத் தெரிய மஞ்சள் அரைத்து முகத்தில் பூசிக்கொண்டனர் விறலியர் காலப்போக்கில் குடும்பப் மட்டும் பெண்களும் பூசிய பூசத் மஞ்சளைக் தொடங்கினர் விறலியரை மதியாத நம் சமூகம் விறலி மஞ்சளை மட்டும் கொண்டாடத் தொடங்கியது; இன்றும் கொண்டாடி வருகிறது விறலி மலை என்பதுதான் இன்று விராலிமலை என்று ஆனது என்பது கூடுதல் செய்தியாகும்
புதுவிசை, 10 ஜூலை 2007
#விரும்புக
#பகிர்க
#கருத்திடுக
#பின்னொற்றுக
#ஆதரிக்க
No comments:
Post a Comment