மஞ்சள் மகிமை-நில அபகரிப்புப் பண்பாடு-Tho.Paramasivan

மஞ்சள் மகிமை-நில அபகரிப்புப் பண்பாடு-Tho.Paramasivan


தமிழகத்தின் மிகத் தொன்மையான திருக்கோவிலூர், இவ்வூர் தென்பெண்ணை அமைந்துள்ளது வள்ளல்களில் ஊர்களில் ஆற்றின் ஒன்று கரையில் ஒருவனான மலையமான் திருமுடிக்காரியின் தலைநகரம் சங்க இலக்கியத்தில் இதற்குக் கோவனூர் என்று பெயர். இந்நகரத்தை அதியமான் அவரிடமிருந்து கைப்பற்றினான். அதனைப் பரணர் பாடியுள்ளார். இச்செய்தியை அவ்வையார் தன் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடுகிறார் அன்றும் பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ முரண்மிகு கோவனூர் நூறிநின் அரண்டு திகிரி ஏந்திய தோளே என்பது ஔவையாரின் புறப்பாடலாகும். தென்பெண்ணை ஆற்றங்கரையிலுள்ள பாறையொன்றின் மீது அமர்ந்து உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்தார் என்பது அக்கால வழக்காகும். இதனை முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்றும் பதிவு சங்ககாலப்புலவராகிய கபிலர் செய்துள்ளது வருபுனல் பெண்ணை தென்கரையுள்ளது தீர்த்தத் துறையது தெய்வக் கவிதை செஞ்சொற்கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலையற்கு உதவி பெண்ணை அலைபுனல் அழுவத்து அந்தரிக்சம் செல மினல் புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக் கனல் புகும் கபிலக் கல்லது என்று குறிப்பிடுகின்றது, அப்பாடல் வடிவிலான கல்வெட்டு இன்னமும் ஆற்றின் நடுவேயுள்ள பெரும் பாறையினை அவ்வூர் மக்கள் கபிலக்கல் என்றே குறிப்பிடுகின்றனர் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினர் இவ்வூரில் ஆய்வுசெய்து, சங்ககாலக் குடியிருப்புத் தடயங்களை வெளிப்படுத்தினர். நீர் வடிகால் போன்ற சுடுமண் குழாய்களைக் கண்டுபிடித்தனர். இந்தத் திருக்கோவிலூர் நூற்றெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும் பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவலூர் தொழுது போற்று நெஞ்சே என்று பாடுகின்றார் திருமங்கை ஆழ்வார். இவ்வூரிலுள்ள திருமால் கோவில் இறைவனின் பெயர், உலகளந்த பெருமாள் ஆகும். இது குறித்துச் வருகிறது சுவையான கதையொன்று வைணவ மரபில் வழங்கி முதலாழ்வார்கள் காலத்தில் மழையும் குளிருமான இராப்பொழுதொன்றில், ஒரு வீட்டின் புறத்தேயுள்ள இடைகழியில் (திண்ணையில்) அடியார் ஒருவர் வந்து தங்கினார். சற்றுநேரம் கழித்து மற்றொருவர் வந்து 'நானும் உள்ளே வரலாமா' என்று கேட்கிறார் இங்கே 'ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று அவரையும் சேர்த்துக்கொள்கின்றார். இன்னும் சற்றுநேரம் கழித்து, இந்த மூவருக்கும் நடுவில் நான்காவதாக ஒருவர் புகுந்துவிட்டார். இடநெருக்கடியினாலே திணறிய மூவரும் உள்ளே புகுந்த நான்காமவரை இருட்டிலே கண்டறிய முடியவில்லை மூவரும் ஆளுக்கொரு பாசுரம் பாடிய "மூவருமே முதலாழ்வார்கள் எனப்படும் பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் ஆவர். இக்கதையினை இழை இழையாகப் பிரித்துக் காணவேண்டும். அந்த இடைகழி முதலில் வந்த மூவருக்கும் உரிமையானதல்ல வல்லடியாக உள்ளே புகுந்த நான்காமவருக்கும் உரிமையானதல்லை கடைசியில் அந்த இடம் அவ்வூரின் உலகளந்த பெருமாளுக்கு உரிமையாயிற்று. இது எப்படி நியாயமாகும் வைணவம் இதை நியாயப்படுத்த ஒரு கதையினைக் கற்பித்தது முன்னொரு காலத்தில் மாவலி என்ற மன்னன் உலகிலுள்ள நிலம் முழுவதும் தமக்கே சொந்தமென்று இறுமாப்புடன் வாழ்ந்து வந்தான். அவனது செருக்கை அடக்க நினைத்த பெருமாள், வாமனன் என்னும் குள்ள வடிவில் (பிராமணனாகி) சென்று, தவம் செய்வதற்கு மூன்றடி நிலம் வேண்டுமென்று கேட்டார் மாவலியும் தருவதற்கு உடன்பட்டான் உடனே வாமனனாக வந்த திருமால், அந்தத் திருமேனியைக் காட்டினார். விண்ணளவு உயர்ந்த திருமேனியினால், தனக்கு வேண்டிய நிலத்தை எடுக்க முயன்றார். மாவலியின் நிலம் முழுவதையும் இரண்டடியால் அளந்து முடித்துவிட்டார். மூன்றாவது அடி நிலத்துக்காகத் தூக்கிய திருவடியை எங்கே வைப்பது என்று மாவலியைக் கேட்டார். அவன் 'என் தலைமீது வையுங்கள்' என்றான் அவன் தலைமீது வைத்து அழுத்தினார்; அவன் காணாமல் போனான் உலகம் முழுவதும் திருமாலுக்குச் சொந்தமாயிற்று. குள்ளப்பூதமாக நிலம் கேட்டுவிட்டு, விண்ணளவு திருமேனியினாலும் கால்களாலும் நிலத்தை அளப்பது உயர்ந்த எந்த வகையில் நியாயம்? இந்த திருவிக்கிரம அவதாரத்திற்கே உலகளந்த பெருமாள் எனப் பெயர். திருக்கோயிலூர் கோயில் கருவறையில் உலகளந்த பெருமாள் திருக்கோலம் அமைந்துள்ளது. தூக்கிய திருவடி, தரைக்கு மேலாகப் பத்தடி உயரத்தில் உள்ளது. இதே அளவுள்ள திருமேனியுடன் காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாள் திருக்கோயில் இரண்டு உள்ளன பொதுவாகத் தமிழ்நாட்டில் திருமால் திருமேனிகள் நின்ற, இருந்த கிடந்த கோலத்தில் மட்டுமே காணப்படும் விதிவிலக்காக தொண்டை மண்டலத்தில் மட்டும் உலகளந்த பெருமாள் திருமேனிகள் காணப்படுகின்றன. இதனை அரசியல் வரலாற்றுப் பின்னணியில் நோக்க வேண்டும். கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிய பல்லவர்கள் தமிழ் அரசமரபினர் அல்லர் வன்முறையாலே நிலத்தைக் கைப்பற்றினாலும் அவர்கள் தமிழ் மக்களுக்கு 'வம்ப மன்னர்' மட்டுமே ஆவர். தங்களைப் பேரரச மரபினோடு பண்பாட்டு அளவில் இணைத்துக்கொள்ள, அவர்கள் திருமால் உலகளந்த கதையினைப் பயன்படுத்தினர். பல்லவர்களாக அறியப்பட்ட முதல் மன்னன் சிம்ம விஷ்ணு என்னும் வைணவப் பெயர் உடையவன் ஆவான் நிலத்தை அளக்கக்கூடிய அதிகாரம் அரசுக்கு மட்டுமே இன்றளவும் உண்டு. இந்த அதிகாரத்தை ஆண்டவனின் பெயரால், தங்களுக்கு உரியதாக ஆக்கிக்கொள்ளப் பல்லவ மன்னர்கள் திருமால் உலகளந்த கதையைப் பயன்படுத்தினர். இந்த அதிகாரப் பறிப்பைப் பண்பாட்டு அளவில், சமரசம் செய்துகொள்ளவே திருக்கோவிலூர் இடைகழிக் கதை பிறந்தது. அடுத்தவர் நிலத்தை அபகரிக்கும் முயற்சி ஆண்டவன் பெயரால் செய்யப்பட்டது என்பதையே இடைகழிக் கதை விளக்குகிறது மாவலி கதையிலும் இடைகழிக் கதையிலும் அடுத்தவர் நிலம் அபகரிக்கப்பட்டது என்பதே இறுதி நிகழ்வாகும். இந்தப் பண்பாட்டு அடிப்படையில்தான் சமண, பௌத்த வழிபாட்டு இடங்களைப் பக்தி இயக்க எழுச்சியின்போது பறித்துக்கொண்டன இவ்வாறு சைவ வைணவ பறிக்கப்பட்ட மதங்கள் கோயில்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிகப்பலவாகும். திருக்கோவிலூர் கோயிலும் அந்த வரிசையில் ஒன்றாகச் சேர்கின்றது. புதிய அரசு மரபினரான பல்லவர்கள் உலகளந்த கதையினைக் கொண்டாடினர். சேர, சோழ, பாண்டியர் ஆண்ட தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படவில்லை இக்கதையும் திருமேனியும் எனவே நில அபகரிப்பானது, இப்பண்பாட்டுப் நாள்தோறும் செய்தியாகிற தமிழ்நாட்டில் பின்புலத்தையும் நாம் நோக்கவேண்டும்.
அதிர்ச்சி மதிப்பீடு-----பெயரிடுதல் என் சுதந்திரம்

No comments:

Post a Comment