மஞ்சள் மகிமை-நீராட்டும் ஆறாட்டும்-Tho.Paramasivan

  மஞ்சள் மகிமை-நீராட்டும் ஆறாட்டும்-Tho.Paramasivan


வெப்ப மண்டல உயிரினங்கள்

நீராடுவதில் பேரு விருப்பம் உடையன தமிழ்நாடு மண்டலத்தின் பகுதியாகும். எனவே, தமிழர்களும் நீராடுவதில் வெப்ப வேட்கையுடையவர்கள் சுனையிலும் அருவியிலும் ஆற்றிலும் கடலிலும் நீராடலைத் தமிழ் இலக்கியங்கள் பலபடப் பேசுகின்றன


நீராடல் வேறு, நீர் விளையாட்டு வேறு. ஆட்டனத்தி காவிரியில் நீர் விளையாடும் போது நீரோடு அடித்துச் செல்லப்பட அவன் மனைவி ஆதிமந்தி அவனைத் தேடிக் கண்டடைந்த கதையினைச் சிலப்பதிகாரம் பேசுகின்றது. அருவி நீர் அடித்துச் செல்லும் பெண்ணை இளைஞன் ஒருவன் காப்பாற்ற அவர்கள் இருவரும் காதலர்கள் ஆகின்றனர். இதனைப் 'புனல்தரு புணர்ச்சி' என்று அகப்பொருள் இலக்கியம் ஓர் உத்தியாகவே பேசுகின்றது.


குளித்தல்' என்ற சொல்லையே


நீராடுவதைக் குறிக்க இன்று தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர் இது பொருட்பிழையான சொல்லாகும். குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள்; சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் 'குளிர வைத்தல்' என்பதே அதன் பொருளாகும். 'குளிர்த்தல்' என்ற சொல்லையே நாம் குளித்தல் எனத் தவறாகப் பயன்படுத்துகிறோம். 'குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்கிறார் ஆண்டாள். அச்சிடப்பட்ட தமிழ் இலக்கியம் முழுவதிலும் இச்சொல்லை நாம் தவறாகவே பயன்படுத்தி வந்துள்ளோம். தமிழகத்தில் பெரும்பாலான உழைப்புச் சாதியார் மாலை அல்லது முன்னிரவு நேரத்தில் குளிக்கும் வழக்கமுடையவர் ஆவர். மாடு மேய்த்து மாலையில் திரும்பும் கண்ணனை அவன் தாய் யசோதை நீராட்டமைத்து வைத்தேன். ஆடி அமுது செய்' என்றழைப்பதாகப் பெரியாழ்வார் பாடுகின்றார்

ஆரிய நாகரிகத்தில் நெருப்புப் போன்று திராவிட நாகரிகத்தில் நீரும் நீராடலும் சடங்கியல் தகுதி உடையன மணமகளை அலரிப்பூவும் நெல்லும் இட்ட நீரால் மகப்பேறுடைய பெண்கள் நால்வர் நீராட்டும் வழக்கத்தினை அகநானூறு (86) குறிப்பிடுகின்றது. பெண்ணின் பூப்பு நீராட்டு அரசர்களின் வெற்றி நீராட்டு (விஜயாபிஷேகம்), இறந்தார்க்கு ஊரறிய 'நீர்மாலை' எடுத்து வந்து நீராட்டுதல் என்பனவெல்லாம் தமிழரின் வாழ்வியல் அசைவுகளாகும் தென் மாவட்டங்களில் புதுமணமக்கள் மலையாடுதல் அல்லது கடலாடுதல் என்பது ஒரு சடங்காகப் பின்பற்றப்படுகிறது


குளிக்கும்போது தமிழர்கள் பயன் திய சவுக்காரம் (சோட் ஏதேனும் உண்டோ என்ற கேள்வி எழுகின்றது. 'நுணுக்கிய மஞ்சளால்' குழந்தைகளைத் தேய்த்துக் குளிர்ப்பாட்டி குழந்தையின் நாக்கினையும் வழிக்கும் செய்தியை பெரியாழ்வார் குறிப்பிடுகின்றார். ஆடுமகள் மாதவி குளித்த முறையினை இளங்கோவடிகள்,


பத்துத் துவரினும் ஐந்து விரையினும்


முப்பத் திருவகை ஓமா லிகையினும் ஊறிய நன்னீர் உரைத்த நெய்வாசம்


நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டி


என நுட்பமாகக் குறிப்பிட்டுச் செல்கிறார். இந்த மூவகை நீராடலை உரையாசிரியரே விளக்குகின்றார்


பூவந்தி, திரிபலை, கருங்காலி, நாவல் முதலிய பத்துத் துவர்ப்புப் பொருள்களை ஊறவைத்த நீர் ஆடுமகளின் தோல் வனப்புக்காக கோட்டம், அகில், சந்தனம், முதலிய மணப் பொருள்கள் உடல் நறுமணத்திற்காக; இலவங்கம், கச்சோலம், இலாமிச்சம், தான்றி புன்னைத்தாது போன்ற முப்பத்திரண்டு வகை மூலிகைகள் ஊறிய நீர் நோயற்ற உடல்நலத்துக்காக,


தமிழர்களின் மருத்துவ அறிவினைக் காட்டும் இலக்கியப் பகுதி இது. ஆனாலும், பெரும்பாலும் பெண்கள் மஞ்சள் மட்டும் தேய்த்துக் குளி(ர்)ப்பதனையே

வழக்கமாகக் கொண்டிருந்தனர். நாட்டார் பாடல் ஒன்று, மதுரை மீனாட்சி


நாழி நறுக்கு மஞ்சள் நன்னாழிப் பச்சை மஞ்சள்


அரைச்சு வழிச்சாளாம் - மீனாள் - அஞ்சுவகைக் கிண்ணத்திலே தேய்ச்சுக் குளிச்சாளாம் - மீனாள் - தெப்பமெல்லாம் பூமணக்க


என்று அழகுணர்ச்சியுடன் தகவல் தருகின்றது.


கிருமிக் கொல்லியாக அறியப்பட்ட மஞ்சளும் வேப்பிலையும் தமிழர்களால் பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளன. பூப்பு நீராட்டு விழாவினை 'மஞ்சள் நீராட்டு' என்று குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. அம்மை நோய் கண்டு மீண்டவர்களை, முதற்குளியலில் மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்த கலவையினையே தேய்த்துக் குளி(ர்)ப்பாட்டுகின்றனர். பத்திருபது நாட்கள் குளி(ர்)க்காத அந்த உடலில் எழுகின்ற நாற்றம் இந்தக் கலவையால் நீக்கப்படுகின்றது. அத்துடன் மென்மையான அழுக்கு நீக்கியான பாசிப் பயற்றுப் பொடியினையும் பயன்படுத்துகின்றனர்


நீண்ட தலைமுடி உலர வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டுப் பெண்கள் நாள்தோறும் தலை


நீராடுவ தில்லை. சில நாட்களில் கழுத்தளவில் ஆன


அரைக் குளியலை மேற்கொள்கின்றனர். தலை நீராடுவதனை யாழ்ப்பாணத்தார் தோய்ந்து வந்தேன்'   என்ற பழந்தமிழ்ச்சொல்லால் வெளிப்படுத்துகின்றனர்


அழகான சிறிய வெண்கலக் கிண்ணங்களில் ஊற்றி வைப்பர். இதற்கு 'வால்கிண்ணம்' என்று பெயர். எண்ணெய் தேய்த்துக்

குழந்தைகளுக்குத் தேய்க்கும் எண்ணெயினை குளி(ர்)க்கும்போது புளியம்பழம் பீர்க்கங்காய் ஆகியவற்றின் கோதுகளைக் (நார்க்கூடுகளை) கொண்டு உடல் தேய்க்கும் வழக்கம் அண்மைக்காலம் வரை வழக்கிலிருந்தது. ஆண்கள் பெரும்பாலும் சிகைக்காய்த் துகளையே தேய்த்து வந்துள்ளனர் கொட்டைப் பூந்திக்காயினை ஊறவைத்து நுரை வரும் பக்குவத்தில் தேய்ப்பதும் உண்டு

விளையாட்டுப் பிள்ளைகளுக்கு வியர்வையும் உடல் வெப்பமும் ஒரு பொருட்டாவதில்லை. எனவே, குழந்தைகள் குளி(ர்)ப்பதை விரும்புவதில்லை. இளந்தாய்மார்கள் அவர்களோடு மன்றாட வேண்டும். இந்தத் தாய்மனநிலையினைப்


பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் 'நீராடற் பருவம் என்று ஓர் உறுப்பாக்கி வைத்துள்ளனர், தமிழ் இலக்கியவாதிகள்


நீ பிறந்த திருவோணம்


இன்றுநீ நீராடவேண்டும் எம்பிரான்! ஓடாதே வாராய்


என்று இளந்தாயாகி 'மன்றாடும்' பெரியாழ்வாரின் பாசுரம் ஆணையும் பெண்ணாக்கும் உணர்வு வல்லமை கொண்டதாகும். கலவியாடலைச் சுனையாடல் என்ற குறிப்புச் சொல்லால் சுட்டுவது தமிழ் உரையாசிரியர் வழக்கு. கருவுற்ற பெண்ணைக்


குளியாமல் இருக்கிறாள்' எனக் குறிப்பால் உணர்த்துவது நாட்டார்


பேச்சு வழக்கமாகும்


பழந்தமிழ் மரபில் மஞ்சள் நீராட்டு என்ற சொல் பூப்பு நீராட்டினை மட்டும் குறிப்பதன்று. போர்க்காலம் செல்லும் வீரர்கள் மஞ்சள் நீராட்டு செய்து அல்லது மஞ்சள் உடை உடுத்துச் செல்லுவர். அது இறப்பினை எதிர்கொள்ளும் வீரவுணர்வினையும் தியாக உணர்வினையும் குறிக்கும். இவ்வழக்கத்தின் தொல்லெச்சமாகவே அரக்கனை அழிக்கச் செல்லும் தாய்த் தெய்வத்தின் 'சாமியாடி' (பிரதிநிதி)


மஞ்சள் நீராடி மஞ்சள் உடை உடுத்திச் செல்கிறார் சைவ, வைணவப் பெருஞ்சமய நெறிகள்


கிளர்ந்தெழுந்தபோது அவை நாட்டார் மரபின் வலிமையான அடிக்கூறுகளைத் தன்வயமாக்கிக் கொண்டன. அவற்றில் ஒன்று, நீராடல் ஆகும். வெப்ப மண்டல மனிதர்களைப் போலவே அவர்கள் வழிபடும் சிவன், திருமால் ஆகிய தெய்வங்களும் நாள்தோறும்


குளிர்)க்கின்றன. இதற்குத் 'திருமஞ்சனம் ஆடல்' என்று பெயர். வட இந்தியக் கோயில்களில் திருமேனிகளை நாள்தோறும் திருமஞ்சனம் ஆட்டுவதாகத் தெரியவில்லை. அவை வெப்ப மண்டலத்திற்கு வெளியே இருப்பதே காரணமாகும். மேலும், அவை பெரும்பாலும் சுதையினால் ஆனவை. தமிழ்நாட்டில் மூலத்திருமேனி சுதையில் அமைந்திருந்தால் திருவிழா (உற்சவ)த்


திருமேனிக்குத் திருமஞ்சனம் செய்வது வழக்கம் கோயில்கள் பெருவளர்ச்சி பெற்ற காலத்தில்


கோயில்களில் திருமஞ்சனநீர் எடுத்து வரத் தனிப்பணியாளர்கள் மஞ்சனக்காரர்' என்ற பெயரில் அமர்த்தப்பட்டனர். மதுரைக் கோயிலுக்கருகில் இன்றும் மஞ்சனக்காரர் தெரு' அமைந்திருக்கின்றது. தெய்வத் திருமேனிகளை நீராட்டுவதோடு திருமுழுக்கும் செய்வதுண்டு. அதனை வடமொழியில் 'அபிஷேகம்' என்பர். 'பஞ்ச கௌவியம்' எனப்படும் ஆனைந்து - கொண்டு சிவத்திருமேனிகளை முழுக்காட்டுவது மரபு. 'ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல் என்பதோடு 'பால் நெய்யாடுவர் பாலைத் துறையரோ என்றும் அப்பர் திருமுழுக்காட்டினைக் குறிப்பிடுகின்றார் கையில் கனலேந்திச் சுடலையில் ஆடும் சிவனுக்குத் திருமுழுக்கு உவப்பானது என்பது சைவர்களின் மரபு.


பால் + தயிர் + நெய் + முத்திரம் + சாணம் 'ஆறாட்டு' (தீர்த்தவாரி) என்ற சொல்லைக்


கேட்டவுடன் கேரள மாநிலத்தில் திருச்சூரில் யானை ஊர்வலத்துடன் நடைபெறும் ஆறாட்டுத் திருவிழாவே நினைவுக்கு வரும் தமிழ் நாட்டிலும் குளம் ஆறு கடல் முதலிய நீர்த்துறைகளுக்குத் திருமேனிகளை எடுத்துச் சென்று நீராட்டும் வழக்கம் உள்ளது. இந்த ஆறாட்டு பெரும்பாலும் தைப்பூச நாளிலும் மாசி மகத்திலும் நடைபெறுகின்றது. தமிழகத்தின் ஆற்றங்கரைகள் அனைத்திலும் ஒன்றிரண்டு தைப்பூச மண்டபங்கள் அல்லது துறைகள் உள்ளன. அழகர்கோயில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் தலையருவித் திருவிழாவில் இறைத்திருமேனியை அருவி நீரில் அமர வைத்து நீராட்டுகின்றனர்.


தமிழக நாட்டார் தெய்வங்களுக்கும் ஆறாட்டு செய்வதுண்டு. நவராத்திரி விழாவில் அரக்கனைக் கொன்றழித்துத் திரும்பி, குருதிப்பலி பெற்ற பின், தாய்த் தெய்வம் கோயிலுக்குள் செல்லும். மறுநாள்


அருகிலுள்ள நீர்த்துறைக்குத் தனியாக இடுப்பில் குடத்துடன் சென்று ஆறாடி, குடத்தில் நீர் எடுத்துத் திரும்பும். பெருந்தெய்வக் கோயில்களின் ஆறாட்டு ஆடம்பரம் நிறைந்த விழாவாகும். தாய்த் தெய்வக் கோயில்களில் அது சினம் தீர்ந்த' கதையாகும் கங்கையாடுதல் இராமேசுவரக் கடலாடுதல் ஆகியவை பாவங்களைப் போக்கும் என்பது வைதீகர்களின் நம்பிக்கை. திராவிட

நாகரிகத்தில் அது உடலையும் நினைப்பையும் மறுமுறையும்


உயிர்ப்பித்துக் கொள்ளும் நோக்கமுடையதாகும்

. "திருவெண்காட்டு


முக்குளத்து நீரில் குளி(ர்)த்தால் தீவினைகள் சேர மாட்டா' 

என்பதுசம்பந்தரின் கருத்தாகும். ஆனால் அப்பரோ,


கங்கை யாடிலென் காவிரி யாடிலென் பொங்குதண் குமரித் துறைபுகுந் தாடிலென் எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே


என்று அந்த நம்பிக்கைகளை மறுத்துரைக்கிறார் வைதீகத்திற்கும் சைவத்துக்குமான முரண்பாடு இது.


ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் பரவியிருந்த சமண மதம் கரைந்து போனதற்குப் பண்பாட்டளவிலான காரணங்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று, கடுந்துறவு நெறியினை மேற்கொண்ட சமணத் (திகம்பரத் துறவிகள் நீராடுவதில்லை என்பதும் ஆகும்


தாலியின் சரித்திரம் ------ கோலம்

No comments:

Post a Comment