மஞ்சள் மகிமை-தாலியின் சரித்திரம்-Tho.Paramasivan
தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றது. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் சகோதரி முறை பின்னால் மணமகனின் சகோதரி அல்லது கொண்டவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும் மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவர் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவிவரும் வழக்கம் இதுவே
மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய சாதியாரிடத்திலும்
சகோதரியானவர் மணமகனுக்குத் தாலிகட்டத் துணைசெய்கிறார். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு சாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையிலுள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில
ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்
ஒரு நூற்றாண்டுக்கு முன்வரை சில சாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வரமுடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது
மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியை(வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது
மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்
தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி, தாலாட்டு ஆகிய தாலி
சொற்களைக் கொண்டு 'தால்' என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம் நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளி லிருந்து (சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத்
தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா, இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன் தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே.
கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாதுரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும் தமிழ் ஆய்வறிஞர் மா இராசமாணிக்கனார் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது உறுதியுடன் என
எடுத்துக் கூறினர்.
தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு ஐந்து பொருள்களைப்பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதைச் சங்க இலக்கியங்கள் ஐம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின்
அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி
கட்டியிருந்ததான குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது எனவே தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை வீரத்தின் சின்னமாக கட்டிக்கொண்டால் குறிப்பிட்டுள்ளனர் ஆண் அதைப் தன் கழுத்தில் கோத்துக் புலிப்பல் தாலி என்று
புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி' (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார்' (புறநானூறு) இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து'
(திருத்தொண்டர் புராணம்)
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்படப் பல்வேறு இடங்களில் தோண்டியெடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி
எதுவும் கிடைக்கவில்லை .
தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார (கூடு) தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி), பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும்
ஒரு சாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. காலத்தில் உணவுசேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில சாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் ‘காரைக்கயிறு' என்னும் கறுப்புக்கயிறு கட்டிக்கொள் கின்றனர். கழுத்தில் காரை எலும்பையொட்டிக் கட்டப் படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற
இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக்கொள்வதாகும். இது மனிதகுல வரலாற்றில் ஏதோ ஒரு தொல்பழங்குடியினரின் கண்டு பிடிப்பாக இருக்க வேண்டும். கி.பி. பத்தாம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின்
கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம் தெய்வங்களுக்குத் அதன் தாலி பின்னரே கோயில்களிலும் பெண் அணிவிக்கப்பட்டது திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது தம் குலப்பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது
இந்தியச் முதன்முதலில் சிந்தனையாளர்களில் தாலியை தந்தை நிராகரித்து பேசவும் பெரியார்தான் எழுதவும் தொடங்கினார். அவரது தலைமையில் தாலியில்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர் 1968இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச்சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது
கடைசியாக ஒரு செய்தி: சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள் - குங்குமம் ஆகியவையும் கூட பேசப்படவே இல்லை
#விரும்புக
#பகிர்க
#கருத்திடுக
#பின்னொற்றுக
#ஆதரிக்க
No comments:
Post a Comment