மஞ்சள் மகிமை-ஏக ஆதிபத்தியத்தின் வேர்கள்-Tho.Paramasivan

மஞ்சள் மகிமை-ஏக ஆதிபத்தியத்தின் வேர்கள்-Tho.Paramasivan


தமிழ்ச்சாதிக்கு எழுத்துவழி அறியப் பட்ட வரலாறு 23 நூற்றாண்டுகளாக உள்ளது. கி.மு. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படும் ஆதிச்சநல்லூர் நாகரிகத்தில்' எழுத்துக்கள் வழங்கியதற்கான சான்றுகள் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. இந்த நெடிய வரலாற்றின் திருப்புமுனைகளை விரிவாகவும் மாகவும் நோக்கும்போது நமக்குச் சில பாடங்கள் கிடைக்கின்றன. நிகழ்காலத் தமிழன் தன்னுடைய எதிர் காலத்தை ஒழுங்குசெய்ய ஒரு போதும் இந்தப் பாடத்தைப் படிப்பதில்லை ஆனால் அறியப்பட்ட இந்த 23 நூற்றாண்டு வரலாற்றுக்குள்ளாகத் தமிழன் நிறையவே பண்டைத் தமிழன் சாதனை இயற்கை நிகழ்த்தியுள்ளான் வளங்களை குறிப்பாகப் நேர்மையாகவும் சரியாகவும் பயன்படுத்தியுள்ளான் தன்னுடைய கலை உணர்வுகளுடன், தானே உருவாக்கிய தொழில் நுட்பத்தின் வாயிலாக இனத்திற்கும் அவன் படைத்த குறைவானதல்ல கலைக்கருவிகள் ஓர் உலகின் எந்த எடுத்துக்காட்டைச் சொல்வதானால், இன்றளவும் காணக்கிடைக்கும் கல்நாயனங்கள் (நாதசுரங்கள்) உலகின் வன்மையான பொருளான கருங்கல்லையும் மென்மையான பொருளான இசையையும் ஒன்றுசேர்த்த விந்தையாகும். ஆயினும் வரலாற்றுக் கணக்கிலே ஐந்தொகை போட்டுப் பார்த்தால் தமிழனுக்கு நட்டக் கணக்குத்தான் மிஞ்சுகிறது கிறித்துவுக்கு முன்னும்பின்னுமான தமிழ்நாட்டில் அரசு என்னும் இரண்டு நூற்றாண்டுகளில் நிறுவனம் அரும்புகின்றது. இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் தோன்றிவிட்டனர். இருப்பினும் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளும் இவர்களின் கைகளில் இல்லை. பெருவாரியான தமிழ் மக்கள் இனக்குழுத் தலைமையின் கீழும் குறுநிலத் தலைவர்களின் கீழுமே இருந்தனர். இந்த இனக்குழு வாழ்க்கையின் உயர்ந்த விழுமியங்களில், இயற்கையைத் தோழமை கொண்டதும் கூடிப்பகிர்ந்துண்டதும் குறிப்பிடத்தக்கனவாகும். எட்டுத் தொகை நூலான நற்றிணையில் ஒரு பாடலின் கருத்து நம்மை வியக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது தலைவன், முற்றத்தில் நிற்கும் தலைவியை நெருங்குகிறான். தலைவி நாணுகிறாள். அதற்கான காரணத்தையும் கூறுகிறாள், "தலைவனே! எனக்கு வெட்கமாக இருக்கிறது, ஏன் தெரியுமா! நீ என்னைத் தழுவ முற்படுகின்ற இந்த இடத்திற்கு நிழல்தரும் புன்னைமரம், என்னுடைய தமக்கை. உடன்பிறந்தவள் முன்னிலையில் யாராவது தன் காதலனைத் தழுவுவார்களா? சின்ன வயதிலே என் அன்னை , புன்னைக்காயை மண்ணில் மறைத்துவைத்து விளையாடுவாளாம். ஒருநாள், புதைத்த புன்னைக் காயைக் காணவில்லை. அந்த இடத்தில் நெய்யையும் பாலையும் அவள் ஊற்றி வளர்த்தாளாம். என் அன்னை எனக்குச் சொன்னாள் அதுதான் இந்த மரம். ஆகவே இம்மரம் என் அன்னைக்கு முதல் பிள்ளை; எனக்கு அக்காள்! மூத்தவள் பார்த்திருக்க இளையவள் காதலனுடன் சிரித்திருக்கலாமா? எனக்கு வெட்கமாய் இருக்கிறது விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முளை அகைய, நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று அன்னை கூறினள், புன்னையது நலனேஅம்ம! நாணுதும் நும்மோடு நகையே - நற்றிணை 172, இப்பாடல் நமக்குச் சொல்லும் செய்தியாவது நாள்தோறும் பார்க்கின்ற மரம், செடி, கொடிகளும் பிற உயிரினங்களும் இரத்த உறவினரைப்போல மக்களால் கருத இம்மாறாத விழுமியங்களே அறம் ட்டன எனக் என்பதாகும் கூறப்பட்டது காலத்திற்கேற்பவும் அதிகாரத்திற் கேற்பவும் மாறிவரும் ஆரிய ‘தர்மக் கோட்பாடு' இவர்களிடம் இல்லை. இந்த அறத்தின் அடிப்படையில் இவர்களது தெய்வ நம்பிக்கை இருந்தது. இது பிறப்புவழியிலான உயிர்ச் சமத்துவத்தைக் குலைக்கவில்லை வெளியில் இருந்துவந்து இச்சமூகத்தை முதலில் பாதித்த கருத்தியல்கள் சமணமும் பவுத்தமும் ஆகும். ஆரிய வருணக் கோட்பாட்டிற்கு எதிராகப் பிறந்த இந்த மெய்யியல்கள் தமிழகத்திற்கு ஆரியர்களின் வருகைக்கு முன்னரே தமிழ்நாட்டைத் தொட்டிருந்தன. அவர்களை வடநாட்டிலிருந்து பின்தொடர்ந்து தாக்கிவந்த 'வைதிகம் தமிழ்நாட்டில் உருவாகிக்கொண்டிருந்த அரசு அதிகாரத்திற்கு அருகில் வந்துநின்றது. சமண, பவுத்தங்கள் வணிகப் பெருவழிகளிலும் சிற்றூர்களிலும் கால்கொண்டிருந்தன. வைதிக மதம் தமிழக நகரங்களில், அரசு அதிகாரத்திற்கு அருகில் அமர்ந்தது. தமிழ் வேந்தர்கள் மக்களைத் தரப்படுத்தும் வைதிகத்தின் முன்பு மண்டியிட்டனர். அரசனே! உனது தலை வேதம் ஓதுவார் முன் தாழ்வாகட்டும் என்னும் பொருள்பட இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் எந்துகை எதிரே என்னும் புறநானூற்றுப் பாடல் (புறம்: 6 அமைந்துள்ளது. இதைப்போல மற்றொரு பாடலில் நின் முன்னோர் எல்லாம் பார்ப்பார் நோவன செய்யார்(புறம்:43) என்று மன்னனிடம் பாடுகிறார் வட்டாட்டத்தில் கரவான வட்டுக்காயம்பட்ட சங்க இலக்கியக்காலப் வேலைசெய்து பார்ப்பனப் புலவர் பார்ப்பனர்கள் சோழ ஒருவர் கோயில் பூசாரிகள் அல்லர். அவர்கள் வேதம் என்னும் எழுதாச் சொல்லையே (மனப்பாடம் செய்யப்பட்ட வேத சூத்திரங்களையே) கடவுள் போலக் கொண்டவர்கள் அவர்களுக்கு உருவ வழிபாடு ஏற்புடையதன்று. ஏனென்றால் மனிதர்களைப்போல உணர்வும் இயக்கமும் உடைய கடவுளை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இன்று வரையும் வேதத்தையே கடவுள் போல (கடவுளாக அல்ல) ஸ்மார்த்தப் பிராமணர்கள் கொள்கின்றனர். அதாவது 'ஸ்மிருதி' எனப்படும் வேதநூற்பாக்களையே இவர்கள் கடவுளாகக்கொண்டாடுகின்றனர். இவர்களுக்கு மாறாக சிவப்பிராமணர்களும் வைணவப் பிராமணர்களும், கையும் காலும் கண்ணும் உடம்பும் கொண்ட கடவுள்களைக் கொண்டாடுகின்றனர். கோயில்கள் தனி நிறுவனமானபோது சிறு கோயில்கள் ஓரறைக் கோயில் திறவுகோலும், நீர்க் குடங்களும் பூசாரிகளான பார்ப்பனர்களிடமே இருந்தன. 'குட கொண்டு கோயில் புகுவார்', 'குடமும் குச்சியும் கொண்டு எனவரும் கல்வெட்டுச் செய்திகள் இதை உறுதி செய்கின்றன. உறுதியாக இவர்கள் வேதப் பார்ப்பனர்கள் அல்லர் ஆனால் கெட்ட காலம் பக்தி இயக்கக் காலத்தில்கூட பல்லவர்களும் பாண்டியர்களும் ஸ்மார்த்தப் பிராமாணர்களுக்கே மரியாதை கொடுக்கத் தொடங்கினர். அரசுகளின் எழுச்சியோடு பக்தி இயக்க எழுச்சியாகப் பெருங்கோயில்களும் பெருகத் தொடங்கின. தேவதானம் என்பது கோயில்சார்ந்த சைவ, வைணவப் பிராமணர்களுக்குக் கொடுத்த தானங்களைக்குறித்த சொல்லாகும் இவர்களுக்குக் கொடுத்த பிரம்மதேய விருத்தி தானங்களைவிட என்ற தமிழ் வேந்தர்கள் பெயரில் வேதம் ஓதும் பார்ப்பனர்களுக்கே ஆன்மீக மரியாதை கொடுத்தார்கள். வளமிக்க நன்செய் நிலங்களை மற்றவர்களிடமிருந்து பறித்து வேதம் ஓதுபவர்களுக்குக் கொடுத்தனர். இது குறித்த செப்பேடுகளும் கல்வெட்டுகளும் 'பொதுநீக்கி' என்ற சொல்லோடு அமைந்துள்ளன அதாவது மற்றவர்களுக்குள்ளை உரிமையை நீக்கிவிட்டு அரசன் இவர்களுக்கு அவ்வுரிமையைக் கொடுத்துள்ளான். இக்காலத்திய அரசுகளின் வளர்ச்சி நிலவுரிமையின் அடிப்படையிலானது பழைய நன்செய் நிலங்களும் கால்வாய்களால் உருவாக்கப்பட்ட புதிய நன்செய் நிலங்களும் புதிய பார்ப்பனர், வேளாளர் கூட்டணியின் கைகளுக்கு மாறின. இதனால் அரசதிகாரம் என்பது தமிழ்நாட்டில் வேளாளர்களின் நில உரிமையோடு, பார்ப்பனர்களின் ஆன்மீக அதிகாரத்தின் மீதும் அமைந்தது ஏன் இந்த ஒற்றை ஆன்மீகக் கருத்தை மன்னர்கள் ஆதரித்தனர் நாட்டார் மரபு சார்ந்த பல்வேறு தெய்வங்கள் என்ற பன்முகத்தன்மையை நிராகரித்து "ஒரே கடவுள்' என்ற கோட்பாடு மன்னனுக்குப் பிடித்தது. ஏனெனில் பல தலைவர்கள் என்பது மறுக்கப்பட்டு ஒரே அரசன் என்பது அவர்களுக்குத் தேவை வேறு வகையில் சொல்வதானால் ஏக ஆதிபத்தியம் என்பதை ஆதரிக்கும் கருத்தியலாக வைதிகம் இருந்ததால் அதை மன்னர்கள் போற்றிப்புரந்தார்கள் ஒப்புரவு 1: முதுவேனில்
சடங்கியல் வாழ்வு -----கூலமும் கூலியும்

No comments:

Post a Comment