மஞ்சள் மகிமை-சடங்கியல் வாழ்வு -Tho.Paramasivan
இந்த விண்வெளியுகத்திலும் மனித சமூகத்தால் சடங்குகளிலிருந்து விடுபட முடியவில்லை. பழைய சடங்குகள் கால ஓட்டத்தில் மறைந்து போனாலும் அவற்றின் அடிப்படையில் புதிய சடங்குகள் தோன்றி விடுகின்றன. நவீனகால அரசு எந்திரங்கள் கூடச் சடங்குகளை உதறித்தள்ள முடியவில்லை
நவீனகாலச் சடங்குகளை மரபு சார்ந்தவை, நம்பிக்கை சார்ந்தவை என இரண்டு வகையாகப் பகுக்கலாம். பொதுவாக, சடங்குகளின் அடிப்படை நம்பிக்கை சார்ந்த தாகும். இந்த நம்பிக்கை யில் பெரும்பாலானவை தொல்பழங்காலத்திலிருந்து வருபவை. சாதி சமயம் ஆகிய இரண்டின் எல்லைக்கு வெளியே நின்று உயிர்வாழும் சடங்குகளே மிகப் பெரும்பான்மையானவையாகும். பிறப்பு, பூப்பு, திருமணம், புதுமனை, இறப்பு, தொடர்பான சடங்குகள் ஒரு தனிமனிதனை மையமிட்டுக் குடும்ப அசைவுகளோடும் சமூக இயக்கத்தோடும் தங்களை இணைத்துக் கொள்கின்றன. இவையன்றி உள்வட்டத் திருமண அமைப்புடைய குழுக்களின் அசைவாகப் பல சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. தொல்பழைய நம்பிக்கைகள் மட்டுமல்லாமல் சடங்குகளில் அரசியல், வரலாற்றின் துணுக்குகளும் சமூகத் துணுக்குகளும் உட்பொதிந்து காணப்படுவதும் உண்டு.
எடுத்துக்காட்டாகத் அரசாணிக்கால் (அரசு திருமண நடைபெறும் என்பது அரசதிகாரத்தின் அனுமதி பெற்றுத் திருமணங்கள் நடத்தப்பட்டதின் எச்சப்பாடாகும். சில சாதிகளில் திருமணத்தின் போதும் வேறு சில சாதிகளில் இறப்புச் சடங்கின் தொடர்பாகவும் நடைபெறும் பட்டம் கட்டுதல் என்பது அரசதிகாரத்துடன் தொடர்புடையது ஆதிச்சநல்லூர் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தாலான நெற்றிப்பட்டங்கள் இறப்புச் சடங்கின் வீடுகளில் ஆணைக் கால்) நாட்டுதல் போது
பயன்படுத்தப்பட்டவையாகும். திருமண நிகழ்வின் போதும் இறப்புச் சடங்கின்போதும் பிற சாதிக்குழு உறுப்பினருக்கு அளிக்கப்படும் மரியாதை சமூக வரலாற்றோடு தொடர்புடையதாகும். இந்தப் பிறசாதியார் சேவைச் சாதியாராகவும் அமையலாம், அதுவல்லாத பிற சாதிக்காரர்களாகவும் அமையலாம்
சடங்குகள் தொடர்பாகத் தமிழ்நாட்டில் கனமான ஆய்வுகள் வளரவில்லை, (விதி விலக்கு ஆ. சிவசுப்பிரமணியனின் மந்திரமும் சடங்குகளும்,) ஏனென்றால் சடங்குகளின் பொருண்மை விளக்கம் என்பது சமூக வரலாற்றில் பல இயங்குதளங்கள் சார்ந்து மந்திர நம்பிக்கைகளின் அடிப்படையிலும் மானிடவியல் நோக்கிலும் சாதித் திரள்களுக்கு இடையிலான உறவுகளின் அடிப்படையிலும் பொருண்மை விளக்கம் பெறுகின்றன
எடுத்துக்காட்டாக சொல்லாடல்கள் எண் மந்திர குறித்த சடங்குகள் நம்பிக்கையின் அல்லது அடிப்படையில் அமைந்தவை. சொல்லுக்கு மந்திர ஆற்றல் உள்ளது என்பதனை உலகின் பலசமயங்கள் ஏற்றுக்கொள்கின்றன. இந்த வகையிலே வாழ்த்துச் சொற்கள் மகிழ்ச்சியையும் வசவுச் சொற்கள் சினத்தையும் உண்டாக்குகின்றன
மங்கலச் சொல்லால் இலக்கியத்தைத் தொடங்கவேண்டும் என்ற இலக்கிய மரபு இதன் வழி வருவதாகும். ஒரு
சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல் (chanting or repeating )ஓதுதல் எனப்படும். மந்திரங்கள் ஓதைப்படுபவை. ஓதப்படும் முறை, ஓதும் மனிதன், காலம் ஆகியவை சார்ந்து உலகியல் நிகழ்வுகளைச் சொல்லின் மந்திர ஆற்றல் கட்டுப்படுத்தும் என்பது நம்பிக்கையாகும் பொலிக, பொலிக, பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்" என்பது நம்மாழ்வார் பாசுரம்
மூன்று, ஏழு, பதினெட்டு, இருபத்தொன்று, நூறு, நூற்றெட்டு ஆகிய எண்கள் சார்ந்த புனிதம் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது. தனிமனித வாழ்வுச் சடங்குகள் மனிதன் கருவில் இருக்கும்போதே தொடங்கிவிடுகின்றன. கருக்கொண்ட பெண்ணை
"ஈருயிர்க்காரி” என்று அழைப்பர். சில சாதிகளில் குறிப்பாகப் பிராமணர்களிடம் வளைகாப்பு சடங்கில் அவளுக்கும் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் சேர்த்து இரண்டுமுறை தீர்த்தம் வழங்கப்படுகிறது வைணவப் பிராமணர்கள் இதனையே குழந்தைக்குரிய 'வைணவத் தீட்சை' என நம்புகின்றனர். ஸ்மார்த்தப் பார்ப்பனர்களின் வளைகாப்புச் சடங்கு ஒரு போலித் திருமணம் போலவே நடத்தப்படுகின்றது அதாவது ஒரு பெண்ணைத் தாயாக்கிய பின்னரே அவளைத் திருமணம் செய்யும் உரிமையினை ஆண் மகன் அடைகிறான் என்னும் புராதன கால நம்பிக்கையின் எச்சப்பாடாகும் இது இன்னும் சில சாதியாரிடம் மகப்பேற்றிற்கு அழைத்து வரப்படும் பெண்ணின் வயிற்றில் பழங்களை வைத்துக் கட்டும் வழக்கம் உள்ளது இச் சடங்கிற்கு 'மடிநிரப்புதல்' என்று பெயர். இதே சடங்கு கோவில்களிலும் நிகழ்த்தப்படுகின்றது. திருக்கலியாணம் முடிந்த ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் முளைவிட்ட பயிர் வகைகளைத் தாய்த் தெய்வத்தின் வயிற்றைச் சுற்றிக்கட்டி
வாழ்த்துப்பாடும் மரபு இருந்துவருகின்றது. குழந்தையின் தலைமயிரை முதன்முறையாக மழிக்கும் வழக்கம் தமிழகத்தில் எல்லா மதத்தினரிடமும் ஒரு சடங்காக நிதழ்த்தப்படுகின்றது. தாய்மாமன் மடியில் குழந்தையை இருத்திக் கோயில் வளாகத்தில் நிகழ்த்தப்படும் சடங்கில் பங்கேற்க வந்தவர்களுக்கு உணவளிப்பதற்குப் பதிலாக இனிப்பு கலந்து ஊறவைத்த காதரிசி வழங்கப்படுகிறது குழந்தை தின்பண்டங்களிலிருந்து அரிசி உணவிற்கு அடையாளப்படுத்துகின்றது எனலாம். மாறுவதை இது
திராவிடச் சாதிகளில் பூப்புச்சடங்கு மிக விரிவானது. இது இரண்டு வகைப்படும். பூப்பு நிகழ்ந்தவுடன் தீட்டுக் கழிப்புச் சடங்கு ; மற்றொன்று இந்நிகழ்வினை ஊருக்கு அறிவிக்கும் சடங்கு
மது பண்பாட்டில் மருத்துவம்-----ஏக ஆதிபத்தியத்தின் வேர்கள்
No comments:
Post a Comment