மஞ்சள் மகிமை-உணவும் குறியீடுகளும்-Tho.Paramasivan
தண்ணீரும் உணவும் மனித உடலை
வளர்ப்பன. உணவு என்பது இயற்கையும் செயற்கையும் ஆகிய பொருட்களால் ஆனது மனிதகுலத்தில் மக்கள் இனங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே உணவு நெறிகள் உண்டு. எளிதில் கிடைப்பது பச்சையாக உண்பது சமைத்து உண்பது விதிக்கப்பட்டவற்றை உண்பது, விதிக்கப்பட்ட நேரத்தில் உண்பது விதிக்கப்பட்ட முறையில் உண்பது, விதிக்கப்பட்ட சடங்கியல் அசைவுகளோடு உண்பது என மக்கள் திரள்களின் உணவுப் பழக்கவழக்கங்களைப் பல்வேறு வகையில் அணுகலாம். இதற்கு எதிர்நிலையாக விலக்கப்பட்ட முறை, உணவு, காலம் அளவு பொருட்கள் என்றும் மனிதர்களின் உணவுப் பழக்கவழக்கங்களைப் பகுத்துக் காண முடியும்
கருவுற்ற பெண்ணைத் தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது சுற்றியுள்ளவர்களுக்குப் பழம் கொடுப்பது தமிழ் மக்களின் வழக்கமாகும். நெல்லை மாவட்டத்தில் இச்சடங்கிற்குப் 'பழம் போடுதல்' என்றே பெயர். இங்கே பழம் என்பது பிறக்கப் போகும் குழந்தையின் முழுமையான வளர்ச்சியைக் குறிக்கும் குறியீடாகும்
கீரை வகைகள் மனித உணவின் ஒரு பகுதியானாலும் எல்லாக் காலத்திலும் அவை காய் கனிகளைவிட மலிவாகக் கிடைப்பனவாகும் வேளாண்மையின் கீரை வளர்ப்பு என்பது ஒரு காலத்தில் ஒரு பகுதியாகக் கருதப்படவில்லை காட்டுப்போக்கில் தானே முளைத்துக் கிடக்கும் கீரை வகைகளையே மக்கள் பெரும்பாலும் உணவிற்குப் பயன்படுத்தியுள்ளனர் உணவின்றி வாடிய மக்களின் கடைசி உணவாகக் கீரை அமைகின்றது. அதாவது கீரை ஏழ்மையின் சின்னமாக அமைகின்றது வறுமைப்பட்ட மக்களே கீரையினை உணவாகக் கொண்டனர் என்பதனைச் சங்க இலக்கியம் இரண்டு இடங்களில்
குறிப்பிடுகின்றது. எனவேதான், இன்றளவும் கோயில்களில் கீரை தெய்வங்களுக்கு உணவாகப் படைக்கப்படுவதில்லை. ஏனென்றால் தெய்வங்கள் ஏழ்மையானவை அல்ல; எல்லாச் செல்வங்களையும் மக்களுக்கு அருளுவனவாகும்
தரைக்குக் கீழாக விளையும் கிழங்கு வகைகள் வள்ளி, உள்ளி (வெங்காயம்), பூண்டு போன்றவற்றை ஆசாரப் பார்ப்பனர்கள் இன்றளவும் உண்பதில்லை. எனவே, பெருந்தெய்வக் கோயில்களில் அவை அனுமதிக்கப் படுவதில்லை . அவை பிறப்பினால் கீழ்ப்பட்டவை' என்ற பார்ப்பனக் கருத்தியலே அதன் குறியீடாகும்
பயறு வகைகள் பனிக்காலத்தில் புன்செய் மண்ணில் விளைபவையாகும். அவற்றை நுகரும் மக்களாலும் அவை இறப்பின் அல்லது இழப்பின் குறியீடாகவே கருதப்படுகின்றன. 'பயறு அவித்தல்' என்ற சொல்லாட்சி தென் மாவட்டங்களில் இழப்பினைக் குறிப்பதாகும்
குறிப்பிட்ட பறவை அல்லது விலங்கினைக் குலக்குறிச் சின்னமாக உடைய மக்கள் அவற்றின் இறைச்சியை உண்ணுவதில்லை. அது குலமுதல்வரைக் கொன்று உண்ணுவதாகும் என்ற நம்பிக்கையே இதன் அடிப்படை. பெரும்பாலும் தெய்வத்திற்குப் பலியிடும் பறவைகள் அல்லது விலங்குகள் ஆணாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதியாகும். பெண் உயிரி விலக்கப்பட்டது என்பதே இதன் குறியீடாகும்
உண்டு முடித்தபின் உண்ணும் 'தாம்பூலம்' (வெற்றிலை, பாக்கு) மகிழ்ச்சியின் குறியீடாகும். இறந்தவர்களின் வாயில், வெற்றிலை பாக்கு வைத்து அனுப்புதல் அவர்கள் மகிழ்ச்சியாக மறுஉலகப் பயணம் செய்கிறார்கள் என்பதன் குறியீடாகும்
பழைய இனக்குழுக்களின் நம்பிக்கைகள் செறிந்து முற்றுகிறபோது அவை குறியீடுகளாக வளர்ந்து நிலை பெற்றுவிடும். இந்தக் குறியீடுகளில் பிற்காலத்தில் அதிகாரம் குறுக்குவெட்டாகப் பாய்ந்து இவற்றை ஊதிப் பெருக்க வைக்கும். எடுத்துக்காட்டாக, வைதீகச்
சார்புக்கு ஆட்பட்ட மக்கள் புலால் உணவை உண்ட கலத்தில் இலையில் மோர்ச்சோறு உண்ண மாட்டார்கள்
ஆனால், குறியீடுகள் அனைத்தும் இனக்குழுச் சமூகங்களில்
அதிகாரச் சார்பின்றிப் பிறந்தவை என்பதே மனிதகுல வரலாறு
காட்டும் உண்மையாகும்
No comments:
Post a Comment