மஞ்சள் மகிமை-பெயரிடுதல் என் சுதந்திரம்-Tho.Paramasivan

 மஞ்சள் மகிமை-பெயரிடுதல் என் சுதந்திரம்-Tho.Paramasivan


கடந்த இருபது நூற்றாண்டுகளாக எவ்வெவ்வகையில், எவ்வெவ்வாறு எல்லாம் மனிதர்களுக்குப் பெயரிட்டு வழங்கினர் என்பதைக் காலவாரியாகக் காண்பது சுவையும் பயனும் தரும் முயற்சியாகும். ஒரு சமூகத்தின் ஆசைகளும் கடந்தகால நினைவுகளும் எதிர்பார்ப்புகளும் அழகுணர்ச்சியும் நம்பிக்கையும்


மனிதப் பெயரிடும் வழக்கத்தில் பொதிந்து கிடப்பதைக் காணலாம் இருபதாம் நூற்றாண்டுத் தமிழர்களின் பெயர் வழக்குகளில் காணப்படும் கூறுகளை முதலில் வரிசையிட்டுப் பார்க்கவேண்டும். தெலுங்கு கன்னடம் மொழிகள் பேசும் மலையாளம் சௌராட்டிரம் மக்கள் தமிழகத்தில் ஆகிய குடி புகுந்த அதனால் ஏற்பட்ட செல்வாக்கு ஒருபுறம் என்றால், வேதங்கள், இதிகாசங்கள் புராணங்களை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனியச் செல்வாக்கு இன்னொருபுறம்; தேசிய, திராவிட, பொதுவுடைமை இயக்கங்களின் செல்வாக்கு மற்றொரு புறம். இவற்றோடு பத்திரிகைகள், வானொலி தொலைக்காட்சி ஆகியவை ஸ, ஜ, ஷ, ஹ, ஸ்ரீ ஆகிய ஒலிகளின் மீது ஏற்படுத்தி வைத்திருக்கும் போலிக் கவர்ச்சி கிறித்துவமும் ஆங்கிலமும் கலந்து ஏற்படுத்திய தூய ஆங்கில அல்லது புதிய தமிழ்ப் பெயராக்கங்கள் என இக்காலத் தமிழரின் பெயரிடும் மரபு வேடிக்கைக் கோலங்கள் பலவற்றைக் காட்டி நிற்கிறது இந்த வேடிக்கைக் கோலங்களுக்கு நடுவில் கண்ணன், குமரன், முருகன் சாத்தன் ஆகிய மிகச்சில பெயர்களை மட்டும் தமிழர்கள் தம் மக்களுக்குத் தொடர்ந்து இட்டு வழங்குவது வியப்புக்குரியது.


கி.பி. 17ஆம் நூற்றாண்டுவரை தமிழ் மக்களின் இயற்பெயர்கள் பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து எழுத்துப் பெயர்களாகவே இருந்து வந்துள்ளன. அரசியல், சமூகம், ஆன்மிகம் ஆகிய துறைகளில் செல்வாக்குப் படைத்தவர்களை இயற்பெயர் இட்டு வழங்குவது மரியாதைக் குறைவு என்ற எண்ணமும் பல நூற்றாண்டுகளாகத் தமிழர்களுக்கு இருந்துள்ளது. ஏறைக்கோன், மலையமான், ஆவூர்கிழார், கோவூர்கிழார், அரிசில்கிழார், இளங்கோ , ஆருரன், கழுமலவூரன், வாதவூரடிகள், பெரியாழ்வார் முதலிய பெயர்களை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.


பக்தி இயக்கமாக எழுச்சிபெற்ற சைவமும் வைணவமும் தமிழர்களின் பெயரிடும் மரபைத் தலைகீழாக மாற்றின. அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்கள் விசயாலயன், ஆதித்தன், பராந்தகன் உத்தமன், இராசராசன், இராசேந்திரன், குலோத்துங்கன், விக்கிரமன் என்று வடமொழிப் பெயர்களைத் தங்களுக்குச் சூட்டிக்கொண்டு மகிழ்ச்சியடைந்தனர். கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் பெருகி வளர்ந்த பார்ப்பனியத்தின் செல்வாக்கிற்கு இந்தப் பெயரிடும் மரபுகளும் சான்றுகளாக நிற்கின்றன.


மற்றொரு புறத்தில் திருமுறைகளும் பாசுரங்களும் ஊட்டிய மொழி உணர்ச்சி மக்கள் பெயரிடும் மரபிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது. எடுத்த பாதம், மழலைச் சிலம்பு, நீறணி பவளக்குன்றம், உய்யநின்று ஆடுவான், கரியமால் அழகன், கரிய மாணிக்கம் எனத் தேவாரமும் ஆழ்வார் பாடல்களும் மக்கள் பெயர் வழக்குகளில் பதிவாயின ஆவூர்மூலங்கிழார், ஏணிச்சேரி, முடமோசியார் என ஊர்ப்பெயர் சாத்தி வழங்கும் மரபு வளர்ந்து தெய்வத் திருத்தலங்களின் பெயரையே மக்கள் பெயராக இடும் மரபு இக்காலத்தில்தான் உருவானது ஐயாறன் ஆருரன் திருமாலிருஞ்சோலை, கயிலாயன் எனத் திருத்தலப் பெயர்களை இடும் இந்த மரபும் காசி, திருப்பதி, பழநி, குற்றாலம், சிதம்பரம் என இன்றுவரை தொடர்ந்து ருவதைக் காணமுடியும்


சங்ககாலத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து இடம் பெற்றுவரும் பெயர்வழக்குகளாகப் பார்த்தால் கண்ணன் குமரன், சாத்தன் (சாத்தையா, சாத்தப்பன்), நாகன் (நாகப்பன், நாகராசன், நாகம்மாள்), மருதன் (மருதையன், மருதப்பன், மருதமுத்து ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.


அதேபோல் தமிழகத்தில் குறைந்தது ஐந்து நூற்றாண்டுக் காலம் செழித்து வளர்ந்திருந்த சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கும் தமிழ் மக்களின் பெயர்களில் இன்றளவும் தங்கியுள்ளது. குணம் என்ற முன்னடையோடு கூடிய பெயர்களும் பாலன் என்ற பின்னடையோடு கூடிய பெயர்களும் சமணக் கல்வெட்டுகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன குணசீலன் குணசேகரன் குணபாலன், தனசீலன், தனபாலன், சத்யபாலன் ஆகிய பெயர் வழக்குகள் சமணத்தின் தொல்லெச்சங்களாகும். நாகேந்திரன் ஜீவேந்திரன் ஆகிய பெயர் வழக்குகளும் அவ்வாறே வந்தன சாத்தனார் சாத்தையா வணங்கப்பெறும் என்னும் தெய்வங்களும் பெயர்களில் இன்றுவரை சமணமதத்தின் சிறு தெய்வங்களேயாகும். தர்மராஜன் என்ற பெயரும் அர்ச்சுனன் என்ற பெயரும் பாண்டவர்களைக் குறிப்பதல்ல. தர்மராஜன் என்ற பெயர் புத்தருக்கு வழங்கிய பெயராகும். அப்பர் தேவாரத்தில் இந்தப் பெயர் மார்க்கண்டனுக்கும் கூறப்படுகிறது. புத்தம், தம்மம், சங்கம் என்பது பௌத்தர்களின் மும்மைக் கோட்பாடாகும். அதேபோல் அர்ச்சுனன் என்ற பெயர் மருதன் என்ற தமிழ்ப் பெயரின் வடமொழிப் பெயர்ப்பேயாகும்.


தென்மாவட்டங்களில் இப்பொழுதும் வழங்கும் பெயர்களில் சோணை என்ற முன்னடைப் பெயரைப் பரவலாகக் காணலாம் சோணைமுத்து, சோணாசலம் என்பதாக இவை அமைகின்றன. 'பொன்' என்று பொருள்படும் பாலிமொழிச் சொல்லான 'சோனா' என்பதே இது. பாடலிபுத்திரத்தில் ஓடும் நதியினைச் சோனை (பொன்னி) நதி எனச் சங்க இலக்கியம் கூறும். 'தம்ம, அத்த' எனவ பாலிமொழிச் சொற்கள் வடமொழிகளில் 'தர்மம், அர்த்த' என்று வழங்கும். அதுபோலவே 'சோண' எனவரும் பாலிமொழிச் சொல் சுவர்ண சொர்ண (தங்கம்) என ஒலிமாற்றம் பெற்று வந்துள்ளது சோணைமுத்து என்ற பெயருக்குத் 'தங்கமுத்து' என்று பொருள் சோனாச்சலம் என்றால் 'தங்கமலை' என்று பொருள். அதேபோல் மண்ணாங்கட்டி, அகோரம், ஆபாசம், அமாவாசை, பிச்சை முதலிய

பெயர்கள் மந்திர நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்தவை. குழந்தைகளைத் தீய ஆவிகள் அண்டாது என்ற நம்பிக்கையில் இவை விரும்பி இடப்படுகின்றன இந்த நம்பிக்கை ஒடுக்கப்பட்ட சாதியரிடத்தேதான் வலுவாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது


என்பது


ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் பரவலாக வழங்கும் பெயர்களாக இன்றும் சிலவற்றை அடையாளம் காண்கிறோம். பலவேசம், கழுவன் விருமன், ஒச்சன், சுடலை, பேச்சி, பிச்சை, ஆண்டி முதலியவை பெரும்பாலும் சிறுதெய்வப் பெயர்களை ஒட்டி அமைந்தவை. இவை அரசியல் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் மட்டுமே வழங்கப்பெறும் பெயர்களாகும். அதாவது இவை 'கீழோர் மரபு சார்ந்த பெயர்களாக அறியப்படும் பெருந்தெய்வங்களின் பெயர்களையோ பெரியசாமி ராஜா என மேன்மைசுட்டும் பெயர்களையோ ஒடுக்கப்பட்ட சாதியினர் தம் பிள்ளைகளுக்கு இடமுடியாதவாறு பண்பாட்டு ஒடுக்குமுறை நிலவிய காலம் அது மேல்சாதியினர் அவர்களை வேலை ஏவும்போது இந்தப் பெயர்களால் அழைப்பது தங்களுக்குக் 'கௌரவக் குறைவு' என்று கருதினர். இவ்வகையான பெயர்


வழக்குகளும் அடையாளங்களும் 15ஆம் நூற்றாண்டுவரை இலக்கியங்களிலோ கல்வெட்டுகளிலோ காணப்படவில்லை வரலாற்றுப்போக்கில் பெயரிடும்முறையில் மேலோர், கீழோர் என்னும் பிரிவுகள் 15 ஆம் நூற்றாண்டில் பிறந்த விஜயநகரப் பேரரசு என்னும் இந்து சாம்ராஜ்யத்தினால் விளைந்தவை அவர்கள் வந்தபிறகு விஸ்வநாதன், திருமலை முதலிய பெயர்கள் வந்தன இன்றும் பரவலாக இப்பெயர்கள் இடப்படுகின்றன. ஆங்கிலேயர்கள் எவ்வாறு ராபர்ட்சன், ஜான்சன் பின்னடையாக இடுகின்றனரோ கண்ணப்பன் முத்தப்பன் பின்னடையாக இடும் என என சன் அதேபோல் அப்பன் உள்ளன வழக்குகள் பெயர்களைப் தமிழர்களும் பெயர்களைப் ஆனால் அவர்களைப்போல் குடும்பப் பெயர்களை இடும் வழக்கு நம்மிடம்

இல்லை. தஞ்சாவூர் பகுதி கள்ளர் மக்களிடையே மட்டுமே அந்த வழக்கு இருந்துவருகிறது. இந்துக் குடும்பங்கள் இன்றும் கிறித்துவப் பெயர்களை இடும்


வழக்கத்தை வைத்துள்ளன. உதாரணத்திற்கு அந்தோணியம்மாள் ஆரோக்கியம்மாள் என பெயர் வைத்துக்கொண்டு இந்துக்களாகவே உள்ளனர். அதே நேரத்தில் முன்பு முஸ்லிம்கள் இந்துப் பெயர் வழக்குகளைப் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு ராஜாமுகம்மது, முத்து முகம்மது எனப் பெயர்கள் வைத்துள்ளனர். தற்போது இந்தப் பெயர்கள் பரவலாக வைக்கப்படுவதில்லை. கத்தோலிக்கக் கிறித்துவர்களும் அருள், மலர் என தமிழ்ப் பெயர்களைத் தற்போது இடுகின்றனர். இன்று மக்கள் இஷ்டப்படி வடமொழிப் பெயர்களை இட்டு வருகின்றனர். ஷ, ஜ ஸ என ஒலிகள் வருவதுபோல் பெயர்களை வைக்கின்றனர். இது ஓர் ஏமாளித்தனமே தவிர வேறில்லை. அதேபோல் எண் ஜோதிடம் பார்த்துப் பெயரிடும் அபத்தமான வழக்குகளும் இன்று தமிழர்களிடத்தில் பரவலாகியுள்ளது.


என்னைப் பொருத்தவரை பெயர் இடுதல் என்பது சுதந்தரமான ஒரு விஷயம் எனது பேர்த்திக்கு 'மதுரா' எனப் பெயர் சூட்டியுள்ளனர்; அவர்கள் டெல்லியில் இருப்பதால் அவ்வாறு பெயர் வைத்துள்ளனர். நமக்கு ஊர்ப்பெயர் இடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு அப்பெயர் புதிதாக இருக்கிறது


த சண்டே இண்டியன்



நில அபகரிப்புப் பண்பாட

No comments:

Post a Comment