மஞ்சள் மகிமை-மீனாட்சிப்பட்டிணம்-Tho.Paramasivan
பட்டணந்தான் போகலாமடி
பொம்பள பணம் காசு தேடலாமடி இது திரைப்படப்பாடல். இந்தப் பாட்டின் உண்மையான என்ன நகரங்களில் தொழில் வளர்ச்சி வேலை பழைய பொருள் வாய்ப்பு தொழிலாளர் பெருக்கம், போக்குவரத்து வசதிகள், பணப்புழக்கம் எல்லாம் இருக்கும் அங்கே வாழ்க்கைக்கு எல்லாவிதமான உத்தரவாதமும் உண்டு என்பது. பல ஊர்கள் இணைந்து நாடுகள் உண்டாகிறபோதே நகரங்கள் பிறந்துவிடுகின்றன. எனவே உலகெங்கிலும் உள்ள நகரங்களைப் பற்றிய அறிவு மனிதனின் பொது அறிவு, வளர்ச்சிக்குத் துணை செய்கின்றது
மனித நாகரிக வளர்ச்சியில் குறிப்பிடத் தகுந்த ஒரு கட்டம் நகரங்களை உருவாக்கியதாகும். வாணிகத்திற்கான நெடுஞ்சாலைகள் சந்திக்குமிடங்களில் அரசியல் தலைமைகள் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தும் இடங்களாக நகரங்கள் உருவாயின. நீர் ஊர்திகள் வளர்ச்சி பெற்று கடல் வாணிகம் வளர்ந்தபோது துறைமுக நகரங்கள் உருவாயின. உலகெங்கிலும் நகரங்கள் உருவான கதை இது.
உலகின் பழைய நகரங்கள் அனைத்தையும் பாருங்கள் அவை ஏதேனுமோர் ஆற்றங்கரையில் அல்லது கடற்கரையில் அல்லது குன்றுகள் சூழ அமைந்திருக்கும். உலகின் பழைய நகரங்களில் ஒன்றான மதுரையும் அப்படியே. பரங்குன்றம் மலை, பசுமலை, சமணமலை, நாகமலை, அழகர்மலை, ஆனைமலை என்று குன்றுகள் சூழ வைகை ஆற்றங்கரையில் உருவான கோட்டை நகரந்தான் மதுரை.
காலப்போக்கில் பழைய நகரங்கள் அழிந்துபோகப் புதிய நகரங்கள் உருவாயின. அவ்வாறு கரைந்து போகாமல் தம்மை இன்றளவும் நிலைநிறுத்திக்கொண்ட நகரங்கள் மிகச் சிலவே. தமிழ்நாட்டில்
மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இரண்டு நகரங்களும் குறைந்தது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுக் கால வரலாறு உடையனவாக இன்றளவும் விளங்குகின்றன தனிச்சிறப்புகள் கொண்ட நகரமாகும் இவை இரண்டிலும் மதுரை தமிழ்நாட்டின் பழங்கால நெடுஞ்சாலைகளும் புதிய நெடுஞ்சாலைகளும் தென் தமிழ்நாட்டில் சந்திக்கும் மதுரை மையப் புள்ளியாக அமைந்திருக்கின்றது.வரலாற்றுக்கு முற்பட்ட மனிதன் வாழ்ந்த தடயங்கள் மதுரைக்கருகிலுள்ள சிவரக்கோட்டையிலும்
துவரிமான் கற்காலத்தைத் கற்கருவிகள் தாண்டி வந்த இன்றும் நாகரிக கிடைக்கின்றன மனிதர் வாழ்ந்த அடையாளங்களான ஈமத் தாழிகள் மதுரை நகரத்திற்கு உள்ளேயே கோவலன்பொட்டல், பழங்காநத்தம், அனுப்பானடி, தத்தனேரி ஆகிய இடங்களில் கிடைக்கின்றன. கிறித்துவுக்கு முற்பட்ட காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள் தமிழ் நாட்டிலேயே மதுரையைச் சுற்றித்தான் திருப்பரங்குன்றம் கொங்கர்புளியங்குளம் திருவாதவூர் அழகர்கோயில், அரிட்டாபட்டி, ஆனைமலை ஆகிய இடங்களில் அதிக மாகக் கிடைக்கின்றன. இவையெல்லாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்கள் நாகரிகம் கண்ட பகுதிகளில் ஒன்றாக மதுரை இருந்ததற்கான சான்றுகள் ஆகும்
மதுரை நகரத்தின் பழைய பெயர்குறித்து
ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கருத்துகளைச் சொல்கிறார்கள் புராணங்கள் பல கதைகளைச் சொல்கின்றன. கிறித்துவுக்கு முற்பட்ட காலக் கல்வெட்டுகளில் 'மத்திரை' என்ற பெயர் காணப்படுகிறது கி.பி.750 முதல் 900வரையுள்ள கல்வெட்டு களில் மதுரை என்பதற்குப் பதிலாக 'மதிரை' என்ற பெயரே காணப்படுகிறது. பாமர மக்கள் வழக்கிலோ இது ‘மருதை' ஆகும். குதிரை, பேச்சு வழக்கில் குருதை ஆனது போல மதிரையே பேச்சு வழக்கில் மருதை ஆனது என்று கூறுகின்றனர். இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது
உலகில் பழைய நகரங்கள் திட்டமிட்டு அமைக்கப் பட்டவை ரோம், வெனீசு, மொகஞ்சோதரோ ஆகியவற்றைப் போல மதுரையும் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரமாகும். 'மதுரை நகரம் தாமரைப் பூப்போன்றது. அதன் தெருக்கள் தாமரைப்பூவின் இதழ்களைப் போன்றவை. இதழ்களுக்கு நடுவே அமைந்திருக்கும் பொட்டினைப்போலக் கோயில் அமைந்திருக்கிறது' எனப் பரிபாடல் இலக்கியம் பாராட்டுகின்றது. மாசி வீதிகளின் சந்திப்பில் மிகப்பெரிய தேரினைத் திருப்புவதற்கு வசதியாக வடம்போக்கித் தெருக்கள் அமைக்கப்பட்டிருப்பதும் தேர்வடங்களில் ஒன்றிரண்டை அத்தெருக்களுக்குள் கொண்டு சென்று மக்கள் இழுப்பதும் இன்றளவும் காணமுடியும் நேராக அமைந்த மொகஞ்சோதரோ தெருக்களைப் போல அல்லாமல்
மதுரை நகரத்துத் தெருக்கள் சற்றே வளைந்தவையாகும்.
தமிழ்நாட்டின் கோட்டை நகரங்கள் நிறைய நீர் வசதிகளைக் கொண்டவையாக இருக்கும். மதுரைக் கோட்டையும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. வடபுறத்தில் வைகை ஆற்றை எல்லையாகக் கொண்டிருந்தது அதன் மேற்குப் புறத்தில் மாடக்குளம் என்னும் மிகப்பெரிய குளம் இருந்தது. வைகையாற்றில் இருந்து ஒரு நீர்க்கால் பிரிக்கப்பட்டு 'கிருதமாலை' என்னும் பெயரோடு கோட்டையின் மேற்கு, தெற்குச் சுவர்களை ஒட்டி ஓடிக் கொண்டிருந்தது வாசலையொட்டியும் கோட்டையின் வடக்கு வெளிப்புறத்தில் வாசலையொட்டியும் தெப்பக்குளங்கள் இருந்தன கோட்டையின் உள்ளே கிழக்கு இரண்டு மேற்குப் புறத்தில் ஒரு தெப்பக்குளமும் கோட்டையின் நடுவில் அமைந்த கோவிலுக்குள் ஒரு தெப்பக்குளமும், ஆக இரண்டு இருந்தன. இவை தவிரப் பல கிணறுகளும் இருந்திருக்கின்றன. கோட்டையின் மழைநீர் வடிகாலாகக் கிருதமாலை நதியும் பயன்பட்டிருக்கின்றன வைகை ஆறும்
தமிழ் இலக்கியம் காலந்தோறும் தவறாது பாடும் நகரம் மதுரையாகும். இலக்கியங்கள் பாடும் பழையாறை, பூம்புகார் போன்ற பழைய நகரங்கள் அழிந்து போயின. தஞ்சை, கருவூர்(கரூர்), காஞ்சி போன்ற நகரங்கள் சிதைந்து அளவில் சுருங்கிப் போயின. மதுரை நகரம் மட்டும் சித்திரத்துப் பூப்போல வாடாமல் இருக்கிறது
அரசர்களாலும் பக்தர்களாலும் இலக்கியங்களாலும்
கொண்டாடப்பட்ட நகரங்களில் மதுரையும் ஒன்று. இத்தோடு எளிய மக்களின் நாவில் அன்றாடம் ஒலிக்கின்ற தாலாட்டு, ஒப்பாரி, ஆட்டப்பாடல்கள், பழமொழி, விடுகதைகள் ஆகியவற்றிலும் தவறாது பேசப்படும் நகரம் மதுரையாகும். இந்தப் பெருமை தமிழ்நாட்டின் பிற நகரங்களுக்குக் கிடைத்ததில்லை
நகரத்தில் தலைமைத் தெய்வமான மீனாட்சி 'மதுரைக்கு அரசி' என்பது நாட்டு மக்களின் நம்பிக்கை. இன்றளவும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி தெய்வம் திருமணத்திற்குமுன் பட்டாபிஷேகம் செய்யப்பெற்று, செங்கோல் ஏந்தி மதுரை நகரத்து விதிகளில் திக்குவிசயம் செய்கின்றது. திருமணம் நடந்த பின்னரும் சுந்தரேசர் இராணியின் கணவராகவே கருதப்படுகிறார்; அரசராகக் கருதப்படுவதில்லை. இந்திய வரலாற்றில் எந்தப் பெண் தெய்வமும் இப்படியொரு தனிச் சிறப்பைப் பெற்றதில்லை. புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட திருவிழாவாக இது இருந்தாலும் வரலாற்றுக்கு பெண்களும் முற்பட்ட முடிசூடி நினைப்பூட்டுகிறது காலத்தில் ஆண்ட திராவிட நிகழ்வினை நாகரிகத்தில் இது நமக்கு
தமிழ்மொழி வளர்ச்சியில் மதுரை நகரம் தொடர்ந்து கணிசமான பங்கு வகித்துவந்துள்ளது. தமிழ்நாட்டு அரச மரபினரில் பாண்டியரே பழைய மரபினர் என்பது வரலாற்று அறிஞர் கொள்கை. பாண்டியர் சங்கம் வைத்துத் தமிழ் மொழியினை வளர்த்த னர் என்று செப்பேடுகளும் இலக்கியங்களும் கூறுகின்றன. சங்க இலக்கியப் புலவர்களில் மதுரையைச் சேர்ந்தவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர். பத்துப்பாட்டில் ஒன்றான 'மதுரைக் காஞ்சி' மதுரை நகரத்தை மட்டுமே பாடுகின்றது. எட்டுத்தொகையில் ஒன்றான பரிபாடல் மதுரையினையும் அதனைச் சுற்றியுள்ள
பகுதிகளையும் பாடுகின்றது. சிலப்பதிகாரக் காப்பியம் மதுரை நகரத்தை மிக விரிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. தேவார மூவரும் ஆழ்வார்களும் மதுரை நகரத்தைப் பாடியுள்ளனர் திருவாசகமோ சிவபெருமான் கூலியாளாக வந்து 'மதுரை' மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்படிபட்ட கதையைப் பாடுகின்றது சிவபெருமான் மதுரையில் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டியதனைத் திருவிளையாடற் புராணம் பேசுகிறது. மதுரை நகரத்தின் மீது எழுந்த சிற்றிலக்கியங்கள் நூற்றுக் கணக்கானவை. சங்க இலக்கியப் புலவர்களில் கணிசமானோர் மதுரை நகரத்துப் புலவர்களாகவே இருந்திருப்பதும் வரலாற்று உண்மையாகும் இருபதாம் நூற்றாண்டிலும் தமிழாராய்ச்சிக்குக் களமான தமிழ்ச்சங்கம் தொடங்கப்பெற்றது மதுரையில் நகரத்துத் பாண்டித்துரை தேவரால் தெருப்பெயர்கள் இன்னமும் இவ்வூரின்
மதுரை பழைமையினையும் காட்டுகின்றன
நகர அமைப்பினையும் தெளிவாகக்
வாழைக்காய் பேட்டை
நெல்பேட்டை
வணிகப் பெருமை
தவிட்டுச்சந்தை,
வெற்றிலைப்பேட்டை காட்டும் இடப்பெயர்களைக் காண்பதோடு சித்திரக்காரர் எழுத்தாணிக்காரர், தென்னோலைக்காரர் எனக் கலைஞர்கள் வாழ்ந்த இடங்களையும் நம்மால் இந்நகரத்தில் பெருமையோடு காணமுடிகிறது பழந்தமிழரின் கலைத் திறனையும் நீர் மேலாண்மைத் திறனையும் தெளிவாகக் காட்டுகிறது மதுரை. 1000 அடி நீளம், 980 அடி அகலம் 20 அடி ஆழமுடைய மாரியம்மன் தெப்பக்குளத்தின் அலைகற்களோடு கூடிய கற்சுவர்களும் படிக்கட்டுகளும் தமிழர்களின் பொறியியல்
என நுண்ணறிவுக்கு அடையாளமாகும். அதன் சுற்றுச்சுவர்களும் சுவரில் அமைந்த சிலைகளும் கலைத்திறனுக்குச் சான்று.
நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை மதுரை நகரம் தன் நீர்வளத்தைப் பாதுகாத்ததற்கான அடையாளங்கள் நிறைய இருக்கின்றன. பழைய கல்வெட்டுக்களில் மாடக்குளக்கீழ் மதுரை என்றே குறிப்பிடப்படுகின்றது. மதுரையைச் சுற்றியிருந்த பெரிய குளங்கள் மட்டும் அல்ல, மதுரையின் வடதிசையில் ஓடிய வைகை நதியும் தென்திசையில் ஓடிய கிருதமாலை நதியும் ஊருக்குக் கிழக்கே ஓடிய கால்வாய்களும் மதுரையின் நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாத்தன. மதுரை நகருக்குள் குடிநீர் வழங்கும் மூலங்களாக பெருமாள் தெப்பக்குளம் எழுகடல் தெப்பக்குளம் கிருஷ்ணராயர் தெப்பக்குளம் மைனாத் தெப்பக்குளம் ஆகியவை இருந்தன இவையன்றிக் கோயிலுக்குள்ளும் குளம் இருந்தது. ஆற்று நீராலும் மழை நீராலும் இவை நிரம்பியிருந்தன
இன்று சுற்றுச்சூழல் சீர்கேட்டிலும் நீருக்கான மூலவளங்களை அழித்ததிலும் மதுரை தன் பொலிவினை இழந்து நிற்கிறது ஊருக்குள்ளிருந்த குளங்கள் மூடப் பட்டுள்ளன. நீரைச் சேமித்து வைக்கும் ஆதாரங்கள் எவையும் இல்லை. வணிகக் கழிவுகளும் மருத்துவமனைக் கழிவுகளும் வைகை ஆற்றைக் கூவமாக்கிவிட்டன நகரத்தின் காற்றும் எண்ணெய்ப் புகையினால் மாசுபட்டு விட்டது
நம் முன்னோர்கள் அரிய கலைச் செல்வங்களையும் இலக்கியங்களையும் மட்டும் நமக்குச் சொத்தாக விட்டு விட்டுப் போகவில்லை தூய்மையான காற்றையும் நீரையும் நெடிய மரங்களையும் வளங்களை உருவாக்கும் மூல வளங்களாக நமக்குத் தந்து சென்றனர். நாளைய தலைமுறையினை மறந்து நம் தலைமுறையினை மட்டும் நினைத்தால் இயற்கை நம்மைப் பழிவாங்கும் என்பதற்கு இன்றைய மதுரை நகரம் ஓர் உதாரணம் ஆகும்
இன்றளவும் மதுரையே தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமாகக் கருதப்படுகிறது. மதுரையைக் காப்பாற்றுவது நம் பண்பாட்டைக் காப்பாற்றுவதாகும்.
பெண் என்னும் சுமைதாங்கி----பண்பாட்டின் வாழ்வியல்
No comments:
Post a Comment