மஞ்சள் மகிமை-மாலை-Tho.Paramasivan
மலர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது. அதுவும் தமிழ்நாட்டைப் போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் உலகத்துடன் ஆன இந்த உறவு விரிவானதாகவும் ஆழமானதாகவும் அமைந்துவிடுகின்றது
அரும்பு, மொட்டு, பூ, மலர் என்பவை மலரின் பருவத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாகும். இவற்றோடு 'பூ(வி)ரி' (தென்னம்பூரி), மடல் என்ற சொற்களும் இங்கே நினைக்கத் தகுந்தவை. இணர், தாது பொகுட்டு, அல்லி, புல்லி, தோடு, மடல் என்பவை பூவின் உறுப்புகளைக் குறிக்கும் பெயர்களாகும். பூ வகைகளாக நீர்ப்பூ நிலப்பூ, பொடிப்பூ, கோட்டுப்பூ (கொம்பிலே பூப்பது) என்பன பழைய பெயர்ப் பகுப்பு முறையாகும். விதிவிலக்காக, ஊமத்தை அன்றி எல்லா வகைப் பூக்களும் அழகுணர்ச்சி, மருத்துவப் பயன், உணவுப் பயன், சடங்கியல் மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தமிழர்களால் பயன்படுத்தப்படுகின்றன
பூத்தொடுப்பது அல்லது கட்டுவது என்பது தமிழ் நாட்டில் கலையாகவும் தொழிலாகவும் மதிக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொழிலாகக் கொண்ட சாதியார் தமிழகத்தில் 'பண்டாரம்' என்றும் கேரளத்தில் 'வாரியார்' என்றும் அழைக்கப்படுகின்றனர். கண்ணி தொடரி, பிணையல், மாலை, ஆரம், தார் என்பன கட்டப்பட்ட மலர்களைக் குறிக்கும் பூக்களும் கட்டப்பட்ட அரசர்களிடத்திலும் சமய எல்லைக்குள்ளும் பூக்களும் அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. சேரருக்குப் பனம்பூ மாலை வேப்பமாலை சோழருக்கு ஆத்தி மாலை, பாண்டியருக்கு ஆகியவை உரியன என்று தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்ச் சமய இலக்கியத்தில் 'மகிழ மாலை
நம்மாழ்வாருக்கு உரிய அடையாளமாகக்
இவையன்றி வழிபடு தெய்வங்களும் கருதப்படுகிறது ஒவ்வொரு பூவோடும்
மாலையோடும் சேர்த்தே அடையாளம் காட்டப்படுகின்றன. ஆத்தி கொன்றை பொன்னரளி நந்தியாவட்டை ஆகிய பூக்கள் சிவபெருமானோடு சேர்த்துப் பேசப்படுகின்றன. ஆனால், பக்தி இலக்கியங்கள் காட்டும் குறிப்பின்படி ஒருகாலத்தில் சிவபெருமானுக்கு இண்டைப்பூவும் வன்னிப்பூவும் ஊமத்தம்பூவும் கூடச் சூட்டப்பட்டன என்று தெரிகிறது. முருகன் என்னும் தெய்வம் கடப்பம் பூவோடு தொடர்புடையவனாகப் பேசப்படுகிறான் போரிலே வெற்றி பெற்ற பின்னர் அரசன் தன் வீரர்களுக்குப் பொன்னாலான சிறு தாமரை மலரைப் பரிசாக அளித்த செய்தி சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. இந்தப் பரிசளிப்பு விழாவினைப் பூக்கோள்' என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது
பூக்களால் கட்டப்பட்ட மாலைகளில் பல்வேறு வகையான வேறுபாடுகளை நாம் உணர முடிகிறது. நெருக்கமாகக் கட்டப்பட்ட பூமாலைக்குப் 'பிணையல்' என்று பெயர். சற்றே இடைவெளியுடன் கட்டப்பட்ட மாலைகளுக்குக் 'கண்ணி' என்று பெயர். கண்ணி என்பது இரண்டிரண்டு பூக்களால் கோர்க்கப்பட்ட மாலையாகும். கண்ணியைவிடச் சற்றே நெருக்கமாகக் கட்டப்பட்டது 'சரம்' ஆகும் தொடுக்கப்பட்ட பூச்சரத்திற்குத் தொடையல் என்று பெயர் மனைகளிலும் மண்டபங்களிலும்
அழகுக்காகத் தொங்கவிடும் மாலைகளுக்குத் 'தொங்கல்' என்று பெயர். தமிழர் வாழ்வியற் சடங்குகளின்போது அழகும் நம்பிக்கையும் கலந்த இட வகையில் பல்வேறு வகையான மாலைகள் பெறுகின்றன. சில நேரங்களில் பூக்களில்லாத மாலையும் சடங்கியல் தகுதி பெறுகின்றன. எருமைத் தலை அரக்கனை அழிக்கக் கிளம்பும் தாய்த் தெய்வத்திற்கு வெற்றிலை மாலையும், எலுமிச்சம் பழ மாலையும் அணிவிக்கப்பெறுகின்றன (பெண்கள் அணியும் தங்கத்திலான காசுமாலையும் இவ்வகையில்தான் சேர்த்தி; கேலி உணர்வோடு அணிவிக்கப்பெறும் முறுக்குமாலை பழமாலை ஆகியவற்றையும் இப்படியே கருத வேண்டும்
இவையன்றி மணமாலை, நீர்மாலை, பிணமாலை ஆகியவையும் தமிழர் வாழ்வில் இடம்பெற்றுள்ள மாலைகளாகும். பெண்ணைப் பூவாகக் கருதுவதும், பெண்ணின் உடல் மலர்ச்சியைப் 'பூப்பு' என்ற சொல்லால் குறிப்பிடுவதும், பெண் தெய்வங்களுக்குப் 'பூச்சொரிதல் என்ற விழா நடத்துவதும் தமிழர் பண்பாட்டின் மற்றொரு கூறாகும் மணமாலை என்பது மணத்துக்குரிய ஆணும் பெண்ணும்
தங்களின் இசைவினை மாலை மாற்றுவதனால் அடையாளப்படுத்துதலைக் குறிக்கும். நகரத்தார் சாதியிலும், வேறு சில சாதிகளிலும் தங்களின் குலதெய்வக் கோயிலில் சார்த்திக் களைந்த மாலைகளையே திருமண நாளில் மணமக்கள் மாற்றிக் கொள்ளுகிறார்கள். நீர்மாலை' என்பது பெற்றோருக்குப் பிள்ளைகள் செய்யும் நீர்ச்சடங்கினைக் குறிக்கும் சொல்லாகும். இறந்தவரைக் குளிர்ப்பாட்ட நீர்க்கரகம் ஏந்தி வரும் பிள்ளைகள் நீர்மாலை அதனை என்ற மாலையுடன்தான் சொல்லுக்கு நீரும் கொண்டு மாலையும் வருவர் என்பதே பொருளாகும். திருவிழாக்களில் இறைவன் அல்லது இறைவியின் அருளாற்றலை ஏந்திவரும் சாமியாடியும் கோயில் மாலையினையே அணிந்து வருகிறார் எனவே மாலை தலைமுறையினரோடான உறவுக்கும் என்பது புதிய முந்திய உறவுக்கும் தெய்வங்களோடு கூடிய உறவுக்கும் குறியீட்டு அடையாளமாகவே தமிழர்களால் கருதப்பட்டு வந்தது என்பதனை உணரலாம்
மணம் முடித்த பின் மறைந்துபோன தங்கள் இளவயதில் மங்கலப் பெண்ணாக குடும்பத்துப் பெண்களைத் திருநிலைப்படுத்தித் தெய்வமாக்குகின்றபோது அதற்கு 'மாலையம்மன்' என்ற பெயரையே இட்டு தமிழர்கள் வழங்கிவருவதும் நினைக்கத் தகுந்ததாகும். விதிவிலக்கான ஒரு செய்தியையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும் குழந்தை பிறக்கும்போது தாயின் கருப்பையிலுள்ள நஞ்சுக்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றியபடி பிறந்தால் அக் குழந்தைக்கு மாலை, மாலைசூடி, மாலையப்பன் என்று பெயரிடும் மரபும் தமிழ்நாட்டில்
வழக்கத்தில் இருந்து வருகிறது. அத்துடன் மாலை சூடிப் பிறந்த குழந்தை தாய்மாமனுக்கு ஆகாது என்ற நம்பிக்கையும் உள்ளது.
கோலம்-----பெண் என்னும் சுமைதாங்கி
No comments:
Post a Comment