Showing posts with label மாங்குயிலே பூங்குயிலே. Show all posts
Showing posts with label மாங்குயிலே பூங்குயிலே. Show all posts

Monday, November 6, 2017

மாங்குயிலே பூங்குயிலே

மாங்குயிலே பூங்குயிலே

படம் : கரகாட்டக்காரன் (1990)
இசை : இளையராஜா
பாடியவர் : பாலசுப்ரமணியம்
வரிகள் : கங்கை அமரன்

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்து கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு

தொட்டு தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்து செம்பு
அத தொட்டெடுத்து தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு
இப்போ கிட்ட வந்து கெளருதடி என்ன படு ஜோரு
கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா பொண்ணு மனசே தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா
ஏறெடுத்து பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னை தேத்து
முத்தையன் படிக்கும் முத்திர கவிக்கு நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு

ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன்
யம்மா கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்
வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி
யம்மா இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டுக் கிளியே கொஞ்சி கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன் சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூ தாரேன்
கோபப்பட்டு பாத்தா யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரைச்சு பூசனும் எனக்கு முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்து கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

Wednesday, October 4, 2017

மாங்குயிலே பூங்குயிலே

மாங்குயிலே பூங்குயிலே

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு
எந்த நாளு.....
முத்து முத்துக் கண்ணாலே நான்
சுத்தி வந்தேன் பின்னாலே !!....

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு
எந்த நாளு.....
முத்து முத்துக் கண்ணாலே நான்
சுத்தி வந்தேன் பின்னாலே !!....

காலைத் தழுவி நிக்கும் கனகமணிக் கொலுசு யம்மா...
நானாக மாற இப்போ நெனக்குதம்மா மனசு....
உள்ளே இருக்குறீக வெளிய என்ன பேச்சு ஐயா...
ஒண்ணா புரியவில்ல மனசு எங்கே போச்சு ?...
இந்த மனசு நஞ்ச நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெத தான்
சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு
சொன்ன கத தான்
சொந்தக் கத தான்.....
தோளத் தொட்டு ஆள ஐயா
சொர்க்கத்துல சேர
மால வந்து ஏற பொண்ணு சம்மதத்தக் கூற....
சந்தனங்கரச்சுப் பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு மொத்தமும் ஒனக்கு !!....

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு
எந்த நாளு.....
முத்து முத்துக் கண்ணாலே நான்
சுத்தி வந்தேன் பின்னாலே !!....

மாமரத்து கீழ நின்னு மங்கையவ பாட
அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு ?...
பூமரத்துக் கீழிருந்து பொண்ணு அவ குளிக்க
அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு ?...
கன்னி மனசு ஒன்ன நெனச்சு
தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்
பொன்னை எடுத்து அள்ளிக் கொடுத்து வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்.....
கூரைப் பட்டுச் சேல யம்மா கூட ஒரு மால
வாங்கி வரும் வேள பொண்ணு வாசமுள்ள சோல....
தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு
தேடுது மனசு பாடுது வயசு !!!.....