மஞ்சள் மகிமை-அதிர்ச்சி மதிப்பீடு-தொ.பரமசிவன்

மஞ்சள் மகிமை-அதிர்ச்சி மதிப்பீடு-தொ.பரமசிவன் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் கிழக்கு முகவை மாவட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, நடந்த நிகழ்வு இது மங்கலம் என்னும் பெயரிலான சிற்றூர். இருநூறு வீடுகள் இருக்கும் மருத்துவர் தச்சர் சாதிக்காரர்கள் வறண்டுபோன தவிர மற்றவர்கள் காட்டோடையும் ஒரே குட்டிச் சுவர்களில் நின்ற ஓர் அக்கிரகாரமும் ஊரின் பழைமையைச் சொல்லிக்கொண்டிருக்கும். கிட்டத்தட்ட ஆண்கள் அனைவருமே குடிகாரர்கள்; மனைவியை அடிப்பவர்கள். மாலை நேரங்களில் ஊர்ப் பெண்கள் அழுகிற ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும் இந்தநிலையில் இரண்டு பிள்ளைகளின் தாயான பெண்ணொருத்தி, குடிகாரக் கணவனின் கொடுமை தாங்காமல் அரளி விதையை அரைத்துக் குடித்து இறந்து போனாள். அந்த ஊர்க்காரர்களுக்கே இந்தக் கொடுமையைத் தாங்க முடியவில்லை இழவு வீட்டிற்கு வந்த ஆண்களும் பெண்களும் குடிகாரக் கணவனைச் சுற்றிநின்று வைது தீர்த்தனர். குற்ற உணர்வோடு அவன் அழுதுகொண்டே தலையைக் குனிந்தபடி இருந்தான். மேலும் மேலும் வைதார்கள். இதைப் பார்த்த மற்ற பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சி தன்னுடைய குடிகாரக் கணவனும் இப்படி அவமானப்பட வேண்டும் என்று மனத்துக்குள் ஒரு பழிவாங்கும் உணர்வு பதினைந்து நாள் கழித்து மற்றொரு பெண் இறந்து போனாள். அவள் கணவனுக்கும் இந்த அவமானமெல்லாம் கிடைத்தது அடுத்தடுத்த பதினைந்து நாள், இருபத்தைந்து நாட்களில் ஐந்தாறு பெண்கள் இதே மாதிரிப் போய்ச் சேர்ந்தார்கள் பக்கத்து ஊர்க்காரர்களுக்குச்சந்தேகம் வந்துவிட்டது மங்கலத்துக்காரர்கள் மனைவியைக் கொன்றுவிட்டு இப்படி நாடகமாடுகிறார்கள் என்று நினைத்தார்கள். அந்த ஊருக்குப் பெண் கொடுக்கவும் எடுக்கவும் வர மறுத்தார்கள். இரண்டு மூன்று திருமணங்கள் தடைப்பட்டுப் போயின. ஊரிலுள்ள எஞ்சிய குடிகார ஆண்களுக்கு இது பெருத்த அவமானமாயிற்று. இந்தத் தற்கொலை உணர்வு கொண்ட பெண்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார்கள். குடிப்பழக்கத்தை நிறுத்துவது என்றா? இல்லை. இனி எந்தப் பெண்ணாவது அரளி விதை தின்று தற்கொலை செய்து கொண்டால் அவளை மரியாதையாக அடக்கம் செய்வதில்லை. செத்துப் போன வெறிநாயைப் போல ஓலைப் பாயில் கிடத்தி தெருத்தெருவாக இழுத்துச்சென்று அதன் பின்னரே அடக்கம் செய்யவேண்டுமென்று முடிவெடுத்தனர். அந்தப் பகுதியில் ஒரு வழக்கமுண்டு; ஒரு நாய்க்கு வெறி பிடித்துவிட்டது என்றால், சிறு பிள்ளைகளை ஏவிவிடுவார்கள். பத்து இருபது பிள்ளைகள் அந்த வெறிநாயை விரட்டி விரட்டிக் கல்லால் அடித்துக் கொல்வார்கள், கொல்லப்பட்ட நாயை ஓலைப் பாயில் கிடத்தி ஆரவாரத்துடன் ஊரைச் சுற்றி வருவார்கள். மல்லாந்த கால்களோடு பிளந்த வாயோடு அந்த நாய் ஓலைப்பாயில் கிடக்கும். அதன் பின்னரே ஊருக்கு வெளியிலே கொண்டுசென்று புதைப்பார்கள். ஊரின் இந்த முடிவு பெண்களுக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது பிளந்த வாயோடும் கலைந்த தலையோடும் விலகிக் கிடக்கும் துணியோடும் தாங்கள் ஓலைப் பாயில் கிடத்தப் பட்டுத் தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்படும் காட்சி அவர்களின் கற்பனையில் விரிந்தது. இறந்தபிறகும் இப்படியோர் அவமானத்தைச் சந்திக்க அவர்களது மான உணர்ச்சி இடம் தரவில்லை பிறகென்ன அந்த ஊரிலிருந்தே அரளி விதை காணாமல் போய்விட்டது அதிர்ச்சி மதிப்பீடு அதிர்ச்சி மருத்துவம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம், சிற்றூர்ப் புறங்களில் அது இப்படித்தான் எதிர்வினையாற்றும் என்று நமக்குத் தெரியாமல் போயிற்று நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னரே அந்தப் பக்கம் போயிருந்தேன். மங்கலத்தார் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தேன். குடிகாரக் கணவர்களின் ஒன்றிரண்டு எண்ணிக்கையில் ஒன்றுகூடக் பிள்ளைகள் பத்தாவது வகுப்பு வரை படித்திருக்கிறார்கள் என்பதைத் தவிர குறையவில்லை . படைப்பிலக்கியங்களும் பண்பாட்டு வெளிப்பாடும் -----நில அபகரிப்புப்பண்பாடு

No comments:

Post a Comment