மஞ்சள் மகிமை-சமூக வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள்-Tho.Paramasivan

 மஞ்சள் மகிமை-சமூக வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள்-Tho.Paramasivan


திருவிழாக்கள் என்பது சமூக அசைவுகளில் ஒன்று ஆகும். திருவிழாக்கள் இல்லாமல் ஒரு சமூகம் இயங்க இயலாது. சுடுவெயிலில் நடப்பவன் மரத்து நிழலில் தங்கி அடுத்து நடப்பதற்கான உடல் மன சேர்த்துக்கொள்வதுபோலத் திருவிழா என்பது வலிமையினைச் ஒரு சமூக இளைப்பாறுதல்' நிகழ்வு ஆகும். ஆடுதல், பாடுதல், கூடிக் களித்தல் கூடி உண்ணுதல் ஆகிய அசைவுகளும் தொடர்ந்து வரும் அவற்றின் நினைவுகளும் ஒரு சமூகத்தைச் சோர்வின்றி இயங்கச் செய்கின்றன இதுவே திருவிழாவின் பொருள் என்று சொல்லலாம்


இன்று நாம் திருவிழா என்பதனைத் திருவள்ளுவர் 'சிறப்பு' என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். அதாவது 'பொது அல்லாத' ஒரு சமூக நிகழ்வு என்று அதற்குப் பொருள். திருவிழா என்பது குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரம் சார்ந்த ஒரு கொண்டாட்டமாகும் மணவிழா, பிறந்தநாள் விழா, மூத்தோர் வழிபாடு போன்ற வீட்டு விழாக்களுக்கு நாளும் நேரமும் தனித்தனியாகவே அமைந்துள்ளன சமூகத் திருவிழாக்களுக்கு அவை ஒரே நேரத்தில் அமைய வேண்டும்


ஊர், சாதி, சடங்குகள், தெய்வங்கள் ஆகிய அளவு கோல்களை முன்னிறுத்தி நடைபெறும் திருவிழாக்களையே பொதுவாக நாம் திருவிழாக்கள் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்த எல்லைகளைத் தாண்டி ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவதோடு ஒரே நிலப்பகுதியில் வாழும் மக்கள் திரள் கொண்டாடும் விழாக்களே உண்மையான திருவிழாக்களாகும். இந்தத் திருவிழாக்கள் அந்தந்த நிலப்பகுதியின் பருவநிலை சார்ந்தே பெரும்பாலும் அமைகின்றன. இந்தப் பருவ நிலைகள் என்பன குறிப்பிட்ட மொழி பேசும் அந்த மக்களின் நாட்காட்டி முறையின்படி வரையறுக்கப்பட்டதாகும்.

இந்த வகையில் தமிழர்களுக்குச் சாதியும் மதமும் கடந்த திருவிழாவாக இன்று எஞ்சி நிற்பது 'தைப்பொங்கல்' திருவிழாவாகும். தைப்பொங்கல் திருவிழாவும் இன்று நாள் (விண்மீன்) மாறியுள்ளது. மகரசங்கராந்தி' என்ற பெயரில் ஆரியர்களின் சூரியக்கணக்கின்படி இத்திருவிழா இன்று தை மாதம் முதல் நாளில் கொண்டாடப் பெறுகின்றது ஆங்கிலேயர்களும் சூரியக் கணக்கினைப் பின்பற்றுபவர்கள் என்பதால் தைப்பொங்கல் அவர்களின் நாட்காட்டிப்படி எப்போதும் சனவரி 14ஆம் நாளில் வருகின்றது. திராவிடர்கள் நாட்காட்டி அல்லது முறையினைக் பழந்தமிழர்கள் கொண்டவராவர் சந்திர கணக்கு திங்கள்' என்ற


தமிழ்ச்சொல் அதனால்தான் சந்திரனையும் குறிக்கின்றது மாதத்தினையும் குறிக்கின்றது. சந்திரனுக்குரிய நாள் திங்கள்கிழமை என்றே பெயர் பெறுகின்றது. பழந்தமிழர்கள் ஒரு நாளினை அந்த நாளுக்குரிய விண்மீனைக் கொண்டே சித்திரை நாள், கார்த்திகை நாள் என்று அழைத்தனர் இன்றளவும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதியாரும் குழந்தைகளின் பிறந்த நாளை நட்சத்திரத்தினை (நாள்மீனை) கொண்டே கொண்டாடுகின்றனர் வேணாட்டு (திருவனந்தபுரத்து) அரச மரபினர் சித்திரைத் திருநாள், மூலம் திருநாள் என்று பிறந்தநாளின் பெயர் கொண்டே அழைக்கப்படுகின்றனர்


பக்தி இயக்கத்தின் எழுச்சிக்குப் பிறகு, ஆரிய நாகரிகத் தாக்கம் காரணமாகத் தமிழர்கள் சில நேரங்களில் சூரியக் கணக்கு முறையினையும் சில நேரங்களில் சந்திரக் கணக்கு முறையினையும் பின்பற்றத் தொடங்கினார்கள் இதன் விளைவாகத் திங்கள் பிறப்பு நாள், மாதப்பிறப்பு நாளாக மாறிவிட்டது


பழந்தமிழர்களிடத்தில் முழு நிலவு நாளே மாதத்தின் (திங்களின்) தொடக்க நாளாக இருந்தது. ஆரியரின் சூரிய நாட்காட்டி முறையினைப் பின்பற்றியதால் அந்தத் திங்களுக்குரிய நாள் (நட்சத்திரம்) மாதத்தின் நடுவில் வருவதாயிற்று. கவிஞர் பாரதியார் தனது கட்டுரை ஒன்றில் அயன, விசுக் காலங்களைக் கணிப்பதில் 21

நாட்கள் பிழைபட்டுப் போனதாகவும் இதனால் திருவிழா நாட்கள் மாறி வருவதாகவும் இதனைத் திருத்த வேண்டு மெனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் சந்திர நாட்காட்டி (சாந்த்ரமானம்) சூரிய நாட்காட்டி முறையாக (சௌரமானம்) மாற்றப்பட்டதால் வந்த குழப்பம் இதுவாகும்


கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் தன்னுடைய திருப்பாவை முதற் பாட்டில்


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்


என்று மார்கழி முழு நிலவு நாளன்று பாவை நோன்பு தொடங்கியதாகக் குறிப்பிடுகின்றார். ஆனால், இன்று மார்கழி மாதத்தின் நடுவில்தான் முழுநிலவு நாள் வருகிறது. ஆண்டாளின் கணக்குப்படி மார்கழி முழுநிலவு நாளில் தொடங்கிய பாவை நோன்பு, தை முழு நிலவு நாளுக்கு முந்திய நாள் நிறைவடைகின்றது. மறுநாள் முழு நிலவு நாளாகிய தைப்பூசம் நாளாகும். அன்றுதான் ஆண்டாளின் கூற்றுப்படியே


பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து


குளிருகின்ற நாளாகும். அது பாவை நோன்பின் நிறைவான முப்பதாவது நாளாகும். இதுவே பழந்தமிழர்கள் கொண்டாடிய தைப்பொங்கல் திருநாள் ஆகும் தமிழ் நாட்டின் எல்லா ஆற்றங்கரைகளிலும் இன்றளவும் தைப்பூசத் துறைகளும் தைப்பூச மண்டபங்களும் காணப்படுவதே இதற்கு எடுத்துக்காட்டாகும் இவ்வகையான நிகழ்வுதான் கோயில் திருவிழாவாகக் கொண்டாடப் பெறுகின்றது சார்ந்து கேரளத்தில்


தைப்பூசம் போன்றே மாசி மாதத்துச் சிவராத்திரியும், பங்குனி மாதத்து உத்திரமும், சித்திரை மாதத்துச் சித்திரைத் திருவிழாவும், வைகாசி மாதத்து விசாகமும் முழுநிலவு நாட்களாகும்


இந்த முழு நிலவு நாட்களே தமிழர்களின் திருவிழா நாட்களாகும். இந்தத் திருவிழா நாட்களை எல்லாம் ஆரியச் செல்வாக்கினால் உருவான பக்தி இயக்கம் தனதாக்கிக் கொண்டது. இவற்றுள் மாசி மாதத்துச் சிவராத்திரி முழுநிலவு நாளைத் தமிழகத்து மக்கள் இன்றளவும் நாட்டார் தெய்வ வழிபாட்டிற்குரிய நாளாக வைத்துள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் புவியியல் அமைப்பில் வடமேற்குப் பருவ மழையோடு தென்மேற்குப் பருவ மழையினையும் பெறுகின்ற நிலப்பகுதிகளாகும். எனவே, இந்த மூன்று மாவட்டங்களிலும் பங்குனி மாதத்து உத்திர நாளே நாட்டார் தெய்வ வழிபாட்டிற்குரிய நாளாக ஆகிவிடுகின்றது திருஞானசம்பந்தரின் மயிலாப்பூர்ப் பதிகம் 'தைப்பூசம்', 'பங்குனி உத்திரம் ஆகிய இரண்டு நாட்களையும் பக்தி இயக்கம் தன்மயமாக்கிக் கொண்டதை உணர்த்துகின்ற சான்றாகும்


இதனுடன் குறிப்பிடத்தகுந்த மற்றொன்று வைகாசி மாதத்து விசாக நாள் ஆகும். அந்த நாள் புத்தர் பிறந்த நாளாகும். பின்னாளில் அது முருகனுக்கு (விசாகப் பெருமாளுக்கு உரியதாக ஆயிற்று. தென்கலை வைணவர்களுக்கு அது நம்மாழ்வார் பிறந்த நாளும் ஆகும்


திருவிழாக்கள் பொதுவாகத் தெய்வங்களைச் சார்த்தியே நடைபெறுகின்றன. (விடுதலை நாள், மே நாள் போன்ற சமயச் சார்பற்ற திருவிழாக்களைத் தமிழ்ச் சமூகம் இன்னமும் பண்பாட்டு ரீதியாக உள்வாங்கவில்லை.) தமிழ்நாட்டுத் திருவிழாக்களின் பொதுவான கால எல்லை தைமாதம் முதல் ஆடிமாதம் வரையே ஆகும். தமிழகம் வெப்ப மண்டலத்திலுள்ள நிலப்பகுதியாகும். எனவே, வேளாண்தொழில் சார்ந்த பணிகள் பெரும்பாலும் இல்லாத காலப்பகுதியே


தமிழ் நிலத்தின் மரபாகத்


தமிழர்களின் திருவிழாக் காலமாகின்றது. தமிழகத்து நாட்டார் தெய்வங்கள் (குறிப்பாகத் தாய்த் தெய்வங்கள்) இந்தக் அளவில்தான் கொண்டாடப்படுகின்றன கால


இந்த வரையறையினைத் தாண்டிய சில திருவிழாக்களும் தமிழ்நாட்டில் உண்டு கொண்டாடப்பெறும் தீபாவளி நாள் மன்னர்களின் காலத்தில் தெலுங்குப் இன்று பரவலாகக் என்பது விசயநகர பார்ப்பனர் வழியாகத்தமிழ்நாட்டுக்கு வந்த திருவிழா ஆகும். வடநாட்டில் இது சமண சமயத்தைச் சேர்ந்த திருநாள் ஆகின்றது. விசயநகர அரசு நாட்டார் பண்பாட்டோடு சமரசம் செய்துகொள்ள நேர்ந்தபோது நவராத்திரித் திருவிழாவினைப் (தசரா) பெரிதுபடுத்தியது.


எருமைத்தலை அரக்கனை ஆயுதம் ஏந்திப் போரிட்டு அழித்த கன்னட நிலப்பகுதிக் கதை சிலப்பதிகாரக் காலத்திலேயே தமிழகத்தில் அறிமுகமாகியிருந்தது. அந்தக் கதையினை விசயநகர அரசமரபு (தந்தைத் கொண்டாடத் தொடங்கியபோது தெய்வச் சார்பு அல்லது ஆயுதம் ஏந்திய தமிழகத்தின் தாய்த் தெய்வங்களும் புத்துயிர் பெற்றன. இதன் விளைவாக வைதீகத்துக்கு மாற்றான திருவிழாக்களைத் தமிழ் நாட்டார் மரபு தனது வலிமையான பண்பாட்டுக் கொண்டிருக்கின்றது. அரசியல் கருவியாகக் காப்பாற்றிக் வரலாறும் சமூக வரலாறும் மாற்றங்களைச் சந்திக்கின்றபோது அம்மாற்றங்களின் பண்பாட்டு வெளிப்பாடாக இந்தத் திருவிழாக்களே அமையும்.


உணவும் குறியீடுகளும்-----மது பண்பாட்டில் மருத்துவம்

No comments:

Post a Comment