மஞ்சள் மகிமை -தொன்மையா தொடர்ச்சியா?-Tho.Paramasivan

 மஞ்சள் மகிமை -தொன்மையா தொடர்ச்சியா?-Tho.Paramasivan தொ.பரமசிவன், 


பிறந்து வளர்ந்த ஊரில் இருந்து 29 ஆண்டுகள் விலகி நின்ற என்னைப் பார்த்து அந்த 85 வயது முதியவர் கேட்டார்: “பேரப்புள்ள நீ அந்த வகையறா


எப்படிக் கண்டுபிடிச்சீங்க, தாத்தா


“அதான், அந்தக் காது காட்டிக் குடுத்திட்டில்லா” பொக்கை வாய்


கொள்ளாத சிரிப்பு அவருக்கு


ஆம்! எங்கள் குடும்ப மூதாதையர்களிலே யாரோ ஒருவருக்குக் காது மடல் நீளம். என் தாத்தா, பெரியப்பா, அப்பா அவர்களின் பிள்ளைகள் பேரக் குழந்தைகள் என எல்லோருக்கும் அந்த சாதியச் சமூகங்களிலேயே கூர்மையான


அடையாளம் உண்டு. உயிரணுத் தொடர்ச்சி என்பது


அக்கறையோடு கவனிக்கப்பட்டு தொன்மை உயிர்க் வருகின்றது கூடத்தின் எல்லா இதன் பெயர் வகையான அசைவுகளுக்குமான தொடர்ச்சி உயிரியலின் தந்தை கிரகாம்


மெண்டல் இருந்திருந்தால் இன்னும் விரிவாகப் பேசியிருப்பார். இந்தத் தொடர்ச்சி என்பது உடல் சார்ந்தது மட்டு மன்று; மக்கள்


திரளின் எல்லா வகையான அசைவு களிலும் அதன் இயக்கங்களிலும் உள்ளார்ந்ததாக இயங்கிக் கொண்டே இருக்கும். உணவு, உடை, மொழி கலை வெளிப்பாடுகள் என்பவற்றோடு கருத்தியல் தளத்திலும் இந்தத் தொடர்ச்சி உண்டு. முதுமைக்கு மரியாதை தருவது என்பது, வேர்களுக்குத் தரும் மரியாதை ஆகும். கண்ணுக்குப் புலப்படாத வேர்களே உயிர்க்கூட்டத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. வெட்டுப்பட்ட அடிமரங்கள்கூடத் தளிர்ப்பது வேர்களின் சக்தியால்தான்

தொன்மை அல்லது பழமை என்பது, 'கவைக்கு உதவாதது அப்பாவித்தனமானது, மூடநம்பிக்கை கொண்டது. மாறிவரும் உலகத்தைப் பார்க்க மறுப்பது கட்டுப் பெட்டித்தனமானது. சமகாலச் சமூகத்தால் பரிதாபத்தோடு மன்னிக்கப்பட வேண்டியது', இந்தச் சமூக உளவியல் அடிமைப்பட்ட நாடுகளில் மட்டுமே நடைமுறைச் சாத்தியமாகும். நம்முடைய நாட்டில் இது எப்படிச் சாத்தியமாகிறது காலனிய ஆட்சிக்கால அடிமை மனநிலை இன்னமும் நம்மை விட்டுப் போகவில்லை என்பதைத்தானே தெருவெல்லாம் சிதறிக் கிடக்கும் ஆங்கில வழிப் பள்ளிகள் காட்டிக்கொண்டு நிற்கின்றன. ஆனபோதும்கூடத் தொன்மை அல்லது பழமை என்பதனை நம்மால் சுருக்கிப் பார்க்க இயலாது


பண்பாடு  என்பது தொன்மையான அசைவுகளின் தொடர்ச்சியாகும் உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த இது அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்குக் காட்டுகின்ற வெளிப்பாடுகள். புதர் என்பதன் முந்திய வடிவமான அறுகம்புல், தூறு என்பதனை வெளிக்காட்டும் மூங்கில் (பெரும்புல் வகை) விழுதுகளாக வெளியினை நிரப்பும் ஆலமரம் என்பவையே தொன்மையும் பண்பாடும் என்ன என்று நமக்கு இயற்கை உணர்த்தும் பாடங்கள்.


 ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாது' 


என்ற வாழ்த்து மரபு கண்ட

என்பது மக்கள் கூட்டத்தார் பண்பாடுமிக்கவர்கள்.


பெர்லினைச் சேர்ந்த டாக்டர் ஜேகோர் 19ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் ஆதிச்சநல்லூரில் தங்கத்தால் ஆன நெற்றிப் பட்டத்தைக் கண்டெடுத்தார் இன்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில், சில சாதிகளில் இது மணமகளுக்குத் தாய்மாமன் அணிவிக்கும் நெற்றிப் பட்டம் என்பது கள ஆய்வு செய்தவர்களுக்குத் தெரியும். அப்படியானால் ஆதிச்சநல்லூர் பண்பாட்டுத் தொடர்ச்சி நம்மிடம் உயிரோடு ஆதிச்சநல்லூரில் தாய்த் இருக்கிறது என்பதுதானே தெய்வத்தின் வெண்கலச் உண்மை சிற்பம்

கண்டெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 90 விழுக்காடாக அம்மன் கோவில்கள்தானே இருக்கின்றன. ஆற்றல் மிகுந்த தாய்த் தெய்வ வழிபாடுதான் தமிழர்களின் உறுதியாகிக்கொண்டிருக்கிறது. பண்பாடு என்பது இன்றளவும்


பண்பாடு என்பது சொல்லும் சொல் அல்லாத (non-verbal ) மரபுகளும் சார்ந்தது, மரபு என்பது பண்பாட்டின் வேர்களாகும். 'கன்னு வந்து பயிர மேஞ்சுதாம் இவன்)


கழுதய பிடிச்சி காத அறுத்தானாம்' என்பது இன்றும் தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் கேட்கக்கூடிய


சொலவடை (சொல் அடை). இந்தச் சொலவடை பல நூற்றாண்டுக் கால மரபின் தொடர்ச்சியாகும்


உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேய கழுதை செவி அரிந்தற்றால்


என்பது முத்தொள்ளாயிரப் பாடல் அடியாகும். 'பழி ஓர் இடம், பாவம் ஓர் இடம்' என்பதுதான் இதன் கருத்தாகும் அப்படியென்றால் பழந்தமிழன் பயன்படுத்திய ஒரு சொல் வழக்கினை நிகழ்காலத் தமிழர்களும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதுதானே உண்மை


நகர்ப்புறத் தமிழர்களுக்கு மறந்து போய்விட்ட வழக்கங்கள் சில கிராமப்புறத்துத் தமிழர்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றிலே ஒன்று வீட்டு விழாக்களிலும் ஊர்க்கோவில் விழாக்களிலும் மண்ணைப் புதிது செய்தல் என்பதாகும். அதாவது சுவரை வெள்ளையடிப்பதுபோல நிலத்தை என்ன செய்வது என்ற கேள்விக்கான விடையாக இது அமைகின்றது. 'புதுமணல் புரப்புதல்' என்பது வீடு அல்லது விழாக்களம் என்பதன் முன்னால் புதிய மணலைப் பரப்புவதாகும். 'தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம் என்று நெடுநல்வாடை இந்த வழக்கத்தைக் குறிக்கின்றது.


சங்க இலக்கியக் காலத்திலுள்ள மக்கட் பெயர்கள் சில இன்றும் தொடர்ந்து இடப்படுவதே தொடர்பினைக் காட்டுகின்றது அக்காலச் கண்ணன் சமூகத்தின் குமரன் பி் முருகன்,

சாத்தன், காரி, நாகன், நாக முதலிய பெயர்கள் சங்க காலம் தொடங்கிப் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இடப்படுவதே 'மரபு' என்ற சொல்லை விளக்கப் போதுமானதாகும்


ஒரு காலத்தில் சமண பௌத்த சமயங்களும் பின்னர் சைவ வைணவ மதங்களும் தமிழ்நாட்டுச் சமய வாழ்விலும் அரசியலிலும் பெரும் சூறாவளியை உருவாக்கிக் காட்டின. இருந்தபோதும் இன்றுவரை தமிழர்களை ஆயுதம் ஏந்திய தாய்த் தெய்வங்களின் வழிபாட்டிலிருந்து அப்புறப்படுத்த இயலவில்லை. தமிழகத்தில் அம்மன் கோயில்கள்தான் எண்ணிக்கையிலும் மிகுதி, அவைதாம் உயிர்ப்போடும் விளங்குகின்றன


'மாமோட்டுத் துணங்கையஞ் செல்வி', 'பழையோள்', 'காடுகெழு செல்வி, 'கானமர் செல்வி', 'கடல்கெழு செல்வி என்று சங்க இலக்கியங்கள் தாய்த் தெய்வத்தைப் பலபடப் பேசுகின்றன தொல்காப்பியர் கூறும் திணைநிலைத் தெய்வங்களான ஆண் தெய்வங்களில் வருணனும் இந்திரனும் அப்போதே காணாமல் போய்விட்டனர்


திருமண விருந்துகளில் இனிப்புணவாகப் வழங்கப்படுவதுகூட சங்க கால உணவு மரபின் பாயசம் தொடர்ச்சிதான். அதனை ' உளுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை' என்று சங்க இலக்கியம் குறிப்பிடும் ஒரு பெண் தாய்மையில் கனிகிறாள்


(முழுமையடைகிறாள்) என்பதே பூப்பு என்ற சொல் உணர்த்தும் அக்காலத் தமிழர்களின் பண்பாட்டு வெளிப்பாடாகும் இயற்கையான கருச்சிதைவினை ‘காய் விழுந்தது' என்றே நெல்லை மாவட்டத்தில் குறிப்பிடுகின்றனர் பூப்புக்கும் கனிவுக்கும் இடையிலான இந்தச் சொல் தாய்மை குறித்த தமிழ்ப் பண்பாட்டின் மதிப்பீட்டிற்கான அடையாளமாக இருந்து வருகிறது


கலாச்சாரம் என்பது பொருள் உற்பத்தி சார்ந்தது. அந்த உற்பத்தி எதுவாகவும் இருக்கலாம். மனித இன மறு உற்பத்தி வரை.

 'பால் பலவூறுக பகடு பல சிறக்க' என்ற ஐங்குறு நூற்றின் வாழ்த்துப் பாடலை வாசித்துக்கொண்டிருக்கும் நள்ளிரவுப் பொழுதில் இராப்பாடி அந்த வாழ்த்தினைப் 'பட்டி பெருக பால்பானை பொங்க' என்று தன்னுடைய மொழியில் தெருவெல்லாம் வழங்கிக்கொண்டு போகிறான்


உலகமயமாக்கக் காலத்தில் வாழுகின்ற நமக்குத் 'தொன்மை' மரபு


வழிப்பட்ட


சமூக விழுமியங்கள் எல்லாம் தேவையற்றவையாகிவிட்டன. நமக்கு 'யுனெஸ்கோ ' தெரியும். அதற்கு


அடித்தளமான


பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி


என்ற மணிமேகலை ஆசிரியரின் சிந்தனை விளங்காது வறுமையினால் வருகின்ற பசிக்குப் பொருளாதாரக் காரணங்களைக் கண்டறிய முயலும் காலம் நம்முடையது. பசியினை ஒரு சமூக நோயாகவும் (பசிப்பிணி) தொடரும் பசியினை அழிவு சக்தியாகவும் (அற்றார் அழிபசி) அடையாளம் காட்டிய வள்ளுவர் நமக்குக் கல்லில் வடித்துக் கதை படிக்க' மட்டும்தான்.


மஞ்சள் மகிமை

#விரும்புக
#பகிர்க
#கருத்திடுக
#பின்னொற்றுக
#ஆதரிக்க

No comments:

Post a Comment