மஞ்சள் மகிமை- மது பண்பாட்டில் மருத்துவம்-Tho.Paramasivan
பண்பாடு என்ற சொல்லை நாம் மிகச் சுருக்கமாகவே புரிந்துகொண்டிருக்கிறோம். உண்மையில் பண்பாடு தனிமனித ஒழுக்கம் சார்ந்ததன்று. பண்பாடு ஒரு சமூகத்தினுடைய வெளிப்பாடு, ஒரு மக்கள் திரள் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிற முறை சொல்லாலே செயலாலே கருத்தினாலே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிற முறைக்கு பண்பாடு என்று பெயர் நம்முடைய தெய்வங்கள், நம்முடைய இசை, நம்முடைய கலை, நம்முடைய உணவு, நம்முடைய உடை, நம்முடைய உடையை நாம் செய்கிற முறை, நம்முடைய உடையை நாம் உடுத்துகிற முறை எல்லாமே பண்பாடு சார்ந்த அசைவுகள் ஆகும்
பண்பாடு, ஒரு முழுமையான பொருள். இந்த முழுமை சார்ந்த பார்வை இல்லாது போன காரணத்தினாலும், ஒரு wholistic approach இல்லாதுபோன காரணத்தினாலும் பண்பாடு பற்றிய நமது பார்வை மிகவும் பலவீனமாக இருக்கிறது
பண்பாடு, நம்முடைய ரத்த ஓட்டத்தோடு கலந்த தாகும். அது நமது மூச்சுக்காற்றைப் போல நான் உங்கள் முன்னாலே மூச்சுவாங்கிக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கவில்லை. நாம் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது எப்போது தெரியுமென்றால், மூச்சிலே ஏற்படும்போது அதை உணர்கிறோம். ஏதேனும் அடைப்பு
பண்பாடு என்பதை அது மீறப்படுகிறபோது உணர்கிறோம். இன்னொரு கட்டமாக, தேவைப்படுகிற போதும் பண்பாட்டை உணர்வோம். நம் வீட்டிற்குத் தண்ணீர் போதாது என்கிறபோது வீட்டின் மண்ணிற்குக் கீழாகவே தண்ணீர் இருக்கிறதே என்று எனக்குத் தோன்றும்.
எனவே சமூகத் தேவை ஏற்படுகிறபோதும் நடைமுறை வாழ்க்கை மீறப்படுகிறபோதும் கவலைப்படுகிறோம் நாம் பண்பாட்டைப்
பற்றிக்கவலை படுகிறோம்
'உலகமயமாக்கம்' என்ற சொல்லை ஏன் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் உலகமயமாக்கம் என்றால் பொருளாதார நடவடிக்கை' என்றுதான் பத்திரிகை படிப்பவர்களும் மெத்தப்படித்தவர்களும் உண்மையில் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.
உலகமயமாக்கல் கலாச்சாரத் தாக்குதலாக இருக்கிறது. மிகப்பெரிய தொன்மையான கலாச்சாரமுடைய தமிழ் மொழி பேசுகிற மக்கள் மீதும் இந்தியாவில் மற்ற மொழி பேசுகின்ற மக்கள் மீதும் அது தன் மூலதனம் கொண்டு தொடுத்திருக்கிற கலாச்சார யுத்தம். இந்தக் கலாச்சார யுத்தத்தை நம்மீது தொடுத்திருப்பது யார் என்று கேட்டால் மிக, மிகப்பெரிய நம்பமுடியாத அளவிலான பன்னாட்டு மூலதனமே எனலாம்.
நூற்றைம்பது ஆண்டுகாலக் காலனி ஆட்சியிலே எதையெதை
எப்படிப் பார்க்கவேண்டும் என்கிற பார்வையை நாம் இழந்துபோயிருக்கிறோம். அதன் விளைவாக நாம் இன்று எப்படிக் கட்டப்பட்டிருக்கின்றோம்? இன்று இங்கு இருக்கிற, குறிப்பாக இருபத்தைந்து வயதுக்குக் கீழாக இருக்கிற இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் அவர்கள் உளவியல் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது? எதுஎது தேவையோ, அதையெல்லாம் தேவையில்லை என்கிறது எது மறக்கப்பட வேண்டியதோ அதையெல்லாம் நினைக்க வேண்டும் என்கிறது. எதையெல்லாம் மீற வேண்டும் என நினைக்கிறோமோ, அதற்கெல்லாம் அடங்கிப் போக வேண்டுமென்கிறது. உண்மையிலே கலாச்சார போலித்தனத்தால் நாம் கட்டப்பட்டிருக்கிறோம். பன்னாட்டு மூலதனம் இப்பொழுது என்ன செய்கிறது என்றால், தான் எந்தெந்த நாடுகளிலெல்லாம்
கொள்ளையடிக்கப்போகிறதோ அங்கெல்லாம் முதலில் பண்பாட்டு வன்முறையை ஏவுகிறது. வன்முறை என்றால் நமக்குத் தோன்றுவது
கத்தி, கம்பு, ஏ.கே.47. ஆனால் பண்பாட்டு வன்முறை மிகவும்
நுட்பமானது. இதற்கு உதாரணம் தரலாம் என நினைக்கிறேன் தினத்தந்தியிலே சுக்குக்கு என்ன பயன், மிளகுக்கு என்ன பயன் தூதுவளைக்கு என்ன பயன் என்று ஒரு சின்ன இடத்திலே போடுவார்கள், அதற்கு அவர்கள் தரும் பெயர் 'பாட்டி வைத்தியம் இதன் மரபுச் சொல் 'கை மருத்துவம்' அல்லது 'வீட்டு மருத்துவம் இச்சொல்லுக்குரிய பாரம்பரியமான அறிவுத் தொகுதி என்னுடைய வீட்டிலேயே பிறந்த எல்லாப் பெண் பிள்ளைகளுக்கும் பங்கிடப்பட்டிருக்கிறது முந்தைய சமுதாயத்திலே! என் சகோதரிக்கும் என் மனைவிக்கும் என் மகளுக்கும் அதில் சிறுதுளி தெரியும் அதை ஏன் பாட்டி வைத்தியம் என்று சொல்கிறார்களென்றால் அது ஒரு வன்முறையான சொல்லாடல், உங்கள் மேனியின் சிகப்பழகிற்கு என்று சொல்கிறார்களே? அதுவும் ஒரு பண்பாட்டு வன்முறைதான், அவ்வகையில் பாட்டி வைத்தியம்' என்ற சொல் ஒரு பண்பாட்டு வன்முறையாகும். ஏனென்றால் பாட்டி எப்படி சமகாலச் சமூகத்தோடு இயங்கிச் செல்ல முடியாதோ, அதுபோல இந்த மருத்துவமும் சமகாலச் சமூகத்தோடு இயங்கிச் செல்ல முடியாது. பாட்டி எப்படிப் பரிவோடு பார்க்கப்பட வேண்டியவளோ, அதுபோல இந்த மருத்துவமும் பார்க்கப்பட வேண்டியது; அவ்வளவுதான் பரிவோடு
இது என்னுடைய வைத்தியம். அது பாரம்பரியமான வேர்களை என்னிடத்திலே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. நாம் மிக ஆழமான வேர்களைக் கொண்ட ஆலமரம் போன்றவர்கள், நமது பண்பாட்டு வேர்கள் மிக வலுவானவை; நீளமானவை; மிகத் தொன்மையானவை, நம்மருகில் இருக்கும் ஆதிச்சநல்லூர்ப் பண்பாட்டிலிருந்து நமக்குச் சில செய்திகள் தெரிகின்றன அந்த வணங்கியிருக்கிறார்கள். வெண்கலம் பயன்படுத்தி கி.மு மக்கள் தாய்த் தெய்வத்தை பத்தாம் நூற்றாண்டளவில் இருக்கிறார்கள் உலோகவியலில் அவர்களுக்கிருந்த அறிவு தொல்லியல் ஆய்வாளர்களுக்குப் பெரும் வியப்பைத் தருகிற செய்தி
இந்தியாவினுடைய மற்ற பகுதிகளிலெல்லாம் இரும்புக்காலம் முடிந்து வெண்கலக்காலம் தொடங்குகிறது ஆனால் இங்கு இரும்புக்காலம் தோன்றுகிறபோதே வெண்கலக்காலம் தோன்றியிருக்கிறது. தொல்லியல் ஆய்வாளர்கள், இந்தியாவிலேயே இரும்பை உருக்குகிற தொழில்நுட்பம் தாமிரபரணிக் கரையைப் போல் எங்கும் சிறந்ததாக இல்லை என்கிறார்கள். வெண்கலம் என்ற கலப்பு உலோகத்தைச் செய்கிற முறைக்கு அவர்கள் பயன்படுத்திய உலைகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவர்கள் பயன்படுத்திய உலோகத்தை உருக்கி ஊற்றுகிற சுடுமண் வாய்களை நானும் நண்பர் லேனா குமார் போன்றவர்களும் வீரவநல்லூர்க்கருகில் கண்டுபிடித்திருக்கிறோம் அவர்கள் என்ன கலனை
(உருக்குவதற்கான பாத்திரம்) பயன்படுத்தினார்கள் அவர்கள் என்ன எரிபொருளைப் பயன்படுத்தினார்கள் வெப்பம் பற்றிய அவர்களின் அறிவு என்னவாக இருந்தது இவையெல்லாம் ஆராய்ந்து கண்டு பிடிக்கப்பட வேண்டியவையாகும்
நம்முடைய முன்னோர்கள், நமக்கு நல்ல வீட்டை, நல்ல காற்றை நல்ல மண்ணை இவை எல்லாவற்றையும்விட இவை பற்றிய அறிவையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். இதை உணரும்போதுதான் பண்பாடு பற்றிய
அடையாளங்களைப் புரிந்து கொள்கிறோம்.
இந்தப் பின்னணியில் நாம் மருத்துவம் பற்றிப் பேசலாம் பண்பாட்டில் மருத்துவம் மட்டும் இல்லை; நம்முடைய இசை, கலை நாடகங்கள், இலக்கியம், சிற்பம், சமயம், அந்தச் சமயம் சார்ந்த வாழ்வியல் விழுமியங்கள் இவையெல்லாம் சேர்ந்ததுதான் பண்பாடு மருத்துவம் என்ற சொல்லுக்குத் தமிழின் வேர்ச்சொல் "மரு இச்சொல்லுக்குத் தமிழில் 'மணம்' என்று பொருள். இந்தச் சொல் எப்படி வந்திருக்கக் கூடும்? தாவரங்களை வகைப்படுத்துகிறபோது மனிதன் அந்த மணங்களிலிருந்துதான் வகைப்படுத்தியிருக்க வேண்டும். மருக்கொழுந்து என்றால் மணமுள்ள கொழுந்து என்று அர்த்தம்.
இந்த மணம் தாவரங்களில் மட்டுமல்ல, அசைகின்ற உயிர் உலகத்திற்குக் கூட உண்டு. உதாரணமாக, புனுகுப் பூனை
எனவே இந்த ‘மரு' என்ற சொல், தாவரங்களை மணங்களினாலே அறிவதில் இருந்துதான் வந்திருக்கும் என நினைக்கிறேன். எனவே உணவாகட்டும், மருந்தாகட்டும், தாவரங்கள் எனும் நிலை உயிரிகளை அவற்றின் மணத்தைக் கொண்டே அறிவதென்பது மிகவும் நுட்பமானது
அறிவு என்பது எழுத்து மூலம் சார்ந்ததாகக் கருதக் கூடாது அப்படிக் கருத வைத்தது ஐரோப்பிய மெய்காண் முறைமை அதனால்தான் ஐரோப்பியர் எழுதத் தெரியாதவனெல்லாம் முட்டாள் என்று சொன்னார்கள் எழுத் தெரியாத நம் முன்னோர்களுடைய தாவரம் பற்றிய அறிவு பொய்யானதா அவர்களுடைய மருந்து பற்றிய அறிவு பொய்யானதா? உலகம் பற்றிய அறிவு, அவர்களது வாழ்வியல் விழுமியங்கள் பற்றிய தன்னுணர்ச்சி பொய்யானதா?
அறிவு என்பது எழுத்து மரபு சார்ந்தது எழுத்து வருபவனுக்குத்தான் அறிவு வரும் என்பது ஒரு பொய். எழுத்து பிறப்பதற்கு முன்னாலேயே அறிவு பிறந்தது. எழுதப்படிக்கத் தெரியாத ஒருவன், ஓர் அழகான சிற்பத்தை ஆக்க முடியும்; ஒரு நாற்காலியைச் செய்ய முடியும். இது எழுத்து மரபு பிறப்பதற்கு முன்னால் பிறந்த அறிவு இதைத்தான் கார்ல் மார்க்ஸ் தொகுக்கப்படாத அறிவு' என்று சொல்வார்
எப்பொழுது நீங்கள் எல்லாவற்றையும் புத்தகமாக பனுவலாக (textualize ) பண்ண விரும்புகிறீர்களோ, எழுத்து மூலம் கொள்ளை கொண்டு போய் 'இதுதான் இதுதான்' என்று சொல்கிறீர்களோ, அப்போது அது முடிந்துபோகிற விசயம். அ. மார்க்ஸ் கூறியதுபோல, சித்த மருத்துவ அறிவு ஏற்படுத்தப்பட்டதினாலே முடிந்துபோனது என்று நினைத்தால், நம்மைப்போல முட்டாள் யாரும் கிடையாது ஏனென்றால் அண்டம் பற்றிய, பூமியைப் பற்றிய நமது அறிவு இன்னும் முழுமையானதல்ல. அறியப்படாத மனிதரைப் போல அறியப்படாத தாவரங்கள், அறியப் படாத உயிரினங்கள் என நிறைய இருக்கின்றன. இவை பற்றிய அறிவு பெருகப் பெருக மனித வாழ்க்கை இன்னும் எளிமையாகும்; இன்னும் இனிமையாகும்
எனவே இந்த எழுத்து மரபுக்கு முந்திய காட்டு வாழ்விலிருந்தும், மணத்திலிருந்தும் பெற்ற மருத்துவ அறிவு என்பது மணங்களைக் கொண்டு தாவரங்களை வகைப்படுத்திய அறிவுதான். மனித உடம்பிலிருந்தே மனிதன் நிறைய விசயங்களைக் கற்றுக்கொண்டான் வெட்டுகின்ற ஆயுதத்தை குத்திக் கிழிக்கின்ற ஆயுதத்தை அரைக்கின்ற ஆயுதத்தை இவற்றையெல்லாம் மனிதன் தன் பல்வரிசையிலிருந்தே தெரிந்துகொண்டான். தன்னை முழுமையான ஒன்றாகக் கருதி, தன்னிலிருந்தே கற்றுக் கொண்ட விசயம். இப்படித்தான் மருத்துவ அறிவு தொடங்கியிருக்கிறது
மருத்துவ அறிவு ஏனைய அறிவைவிட கூர்மையானதாக இருக்க வேண்டும். "மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன்” என்பது சங்க இலக்கியம். நோயாளிக்கு அவன் விருப்பப்பட்டதைக் கொடுக்காமல் ஆய்ந்து ஆய்ந்து மருந்து கொடுத்தானே, எனவே ஆராய்ச்சி இந்த மருத்துவ உலகிலிருந்துதான் தொடங்குகிறது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் இது Professional Ethics என்று சொல்லக்கூடிய தொழில் சார்ந்த அறம். தமிழ்ச் சமூகத்தில் இது வேறு யாரையும்விட மருத்துவம் செய்பவருக்கே அவருடைய தொழில் சார்ந்த அறம் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
இந்த அறம் முன்னிலைப்படுத்தப்பட்ட காரணத்தினாலே தான் அரசுகள் எல்லாம் உருவாகிறபோது, சொத்துகளெல்லாம் பிறக்கிறபோது, ஆசைகள் உருவாகிற போது மருத்துவத்தை ஒரு தொழிலாக, ஒரு முழுநேரப் பணியாக யாரும் கையிலெடுத்திருக்க மாட்டார்கள். எனவேதான் துறவிகளின் சித்த மரபுக்கு முன்னாலே இங்கே சமண மரபு என்று ஒன்று இருந்தது
நாமெல்லாம் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களெல்லாம் சமணர்களாகத்தான் இருந்தோம் இன்றைக்கும் சமண மதத்தினுடைய தாக்கம் நம் வாழ்வில் உள்ளது. சமண மதம் நான்கே நான்கு விசயங்களைத்தான் வலியுறுத்தும் அந்த நான்கு என்னவென்றால்
சோற்றைக் கொடையாகக் கொடுப்பது (அன்னதானம்)கல்வியைக் கொடையாகக் கொடுப்பது (ஞானதானம்)
மருந்தைக் கொடையாகக் கொடுப்பது (ஔசத தானம்) அடைக்கலம் கொடுப்பது (அடைக்கல தானம்)
இந்த நான்கையும் கழித்துவிட்டுப் பார்த்தால் அந்த 'யுனெஸ்கோ' என்ற அமைப்பே இல்லை.
கல்வியைக் கொடையாகக் கொடு, மருந்தைக் கொடையாகக் கொடு. இப்படிச் சொன்னது, உலகத்திலேயே சமண மதம் ஒன்றுதான். அது வேதத்தை எதிர்த்த மதம்; வைதீகத்தை நிராகரித்த மதம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது திகம்பரத் துறவிகள் இருந்த மதம். அவர்கள் மருத்துவ ஏடுகளைத் தவிர வேறு எதையும் கையிலே வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் வாழ்ந்த குகைகளிலே குடிக்கத் தண்ணீர்க்குழி மட்டுமே உண்டு; குடிக்க டம்ளர்கூடக் கிடையாது. முழுநேர மருத்துவப் பணியாளராக, ஒரு நாளைக்கு ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு, பட்டினி கிடந்த துறவிகள் இருந்தனர். இந்த மருத்துவம் இப்படித்தான் பாதுகாக்கப்பட்டு வந்தது. இப்படித்தான் இருந்தனர் அந்த மருத்துவ அறிஞர்கள். ஆனால் நாம் இன்று சொல்வதுபோல அசையும் உயிர்களெல்லாம் அந்த மருத்துவத்தில் கிடையாது. ஏனென்றால் அவர்கள் புலால் உண்ணாத நோன்பிகள் ஆவர். அதேபோல உலோகங்கள் சார்ந்த மருத்துவமும் அவர்களிடம் இல்லை. அவர்கள் முழுக்க முழுக்க
மூலிகைகளைப் பயன்படுத்துகிற மருத்துவர்களாகவே இருந்தார்கள் இன்றைக்கும் அழிந்துவிட்ட சமணக் மாவட்டத்தில் இருக்கின்றன
இந்த மதத்தை வீழ்த்திவிட்டு வைதீகம் வந்தது. பாண்டிய அரசு சோழ அரசு என்ற இனக்குழுக்கள் கரைக்கப்பட்டு, பிற அரசுகள் உருவாகும்போது மருத்துவம் தொழிலாக ஆகிறது அதுவரை மருத்துவனும் விற்பனைக்குரிய ஆசிரியனும் பொருளன்று காசுபெறக்கூடாது மருந்து மருந்தும் விற்பனைக்குரிய பொருளன்று என்ற எண்ணம் கி.பி.ஏழாம் நூற்றாண்டுவரை இருந்தது. ஆம் நூற்றாண்டுவரை இன்னொரு நினைப்பும் இருந்தது. அது சோறு விற்கக் கூடாது; நெல் விற்கலாம்; அரிசி விற்கலாம். வைதீகம் தமிழ்நாட்டை முழுவதும் சோற்றுக்கட்டியினைச் சத்திரங்களில் வென்றெடுத்த விற்க பிறகே ஆரம்பித்தனர் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தண்ணீர் விற்கக் கூடாத பொருளாக இருந்தது. இது நம் பண்பாடு
எனவே, தமிழ்நாட்டில் அரசு இயந்திரம் உருவான போது, வைதீகம் அதற்குக் குறுக்குவெட்டாகப் பாய்ந்தது. ஏனென்றால் அதுதான் அரசுக்கு உவப்பான சித்தாந்தமாகும். அப்பொழுது மிகப்பெரிய சமூக நிறுவனமாகக் கோயில் உருவானது மாவட்ட ஆட்சித்தலைவரிடம் எவ்வளவு அதிகாரம் புதைந்துகிடக்கின்றதோ அவ்வளவு அதிகாரம் கோயிலிலே இருந்தது. கோயிலின் அதிகாரத்திலிருப்பவர்கள்; நாம் என்ன சாதி, நாம் எங்கே இருக்கலாம், எப்படி உடுத்தலாம் என்பனவற்றைத் தீர்மானித்தனர். மருத்துவத்தைச் செய்துவந்த சாதியினர் கோயிலுக்கு வெளியே
நிறுத்தப்பட்டார்கள், (அன்றைய கணக்குப்படி பார்த்தால், குலம்
அல்லது குடி; இன்றையக் கணக்குப்படி சாதி).
அதற்கு முன், அரசு உருவாகிறபோது அக்குடிகளின் நிலைமை என்ன என்று கேட்டால், உங்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கும் கி.பி.எட்டாம் நூற்றாண்டிலே மாறஞ்சடையன் என்கின்ற பாண்டியனுக்கு முதலமைச்சராக இருந்தவர் மருத்துவ சாதியைச் சார்ந்தவர். இவர் இறந்த பிறகு இவரது தம்பி முதலமைச்சராகிறார் இவர்கள் மானூருக்குப் பக்கத்திலே இருக்கிற களக்குடி எனும் ஊரைச் சார்ந்தவர்கள். இவரைப் பற்றியும் இவரது தம்பியைப் பற்றியும் பேசுகிற கல்வெட்டு மதுரை மாவட்டம் ஆனைமலை நரசிங்கப் பெருமாள் கோயிலில் இருக்கிறது. எனவே ஒரு காலத்தில் அரசனுக்கும் அரசதிகாரத்திற்கும் நெருக்கமாக மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள்
அதற்குப் பின் அரசதிகாரம் பெருகப் பெருக அரசுகள் பேரரசுகளாக மாற மாறக் கோவில்கள் துணை நிறுவனங்களாக ஆக மருத்துவம் செய்கிற சாதி வெளியில் வைக்கப்பட்டது. அப்புறம் வைதீகம் அரசைக் கையிலெடுத்துக் கொண்டது. இன்றைக்கும் போல அன்றைக்கும் எழுதப்படாத அதிகாரம் அதன் கையிலே இருந்தது மருத்துவக் காரணம் என்ற பெயரில் மருந்துப் பொருள்களின் மீது வரிவிதித்தனர் அரசர்கள்
இது நம் பண்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்
அ. மார்க்ஸ் சொன்னதுபோல, ஆக இரண்டு மேல்சாதியிலே யாரும் மருத்துவராகக் கூடாது, மருத்துவத் தொழில் செய்யக்கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு மற்ற எல்லாரும் தொடப்படாத சாதி இந்தத் தொடப்படாத சாதிக்காரனுக்கு எப்படி உடம்பைத் தொட்டு மருத்துவம் செய்வது? எனவே மருத்துவர்கள் பட்டுத் துணியைப் போட்டு ‘நாடி' பார்த்தனர்.
இன்னொரு செய்தி, சித்த மருத்துவத்தில் இரசவாதம் என்றும் ஆங்கிலத்திலே alchemy என்றும் சொல்லப்படுவது. கீழ் உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது. ஒரு பேரரசு உருவாகிறபோது அது பல நிகழ்வுகளைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும். அரசுகள் alchemy வளர்வதை விரும்பாது. ஏனென்றால், ஒருவன் இரும்பைத் தங்கமாக்குகிற நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டால் ஒரே நாளில் அந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட முடியும். எனவே அரசு அதை விரும்பாது. எனவே இந்த அரசியல் உருவானபோது alchemy முழுமையாக அரசினாலே தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருந்தது
சோழ அரசின் வீழ்ச்சிக்கு முக்கியமான
காரணங்களில் ஒன்று, அடித்தள மக்களைச் சார்ந்து நிற்கிற வணிக
குழுக்களை எதிர்ப்பு அது அரசுக்கு புறந்தள்ளியதாகும். இதனால் மக்களுடைய உருவானது மக்களுடைய எதிர்ப்பை அணிதிரட்டியவர்கள் சித்தர்கள். இவர்கள் நகர்ப்புறத்துக்கு வரவே இல்லை. எனவே இந்தச் சித்தர்களெல்லாம் கிராமப்புறத்துக்குப் போனார்கள். மருந்து அவர்களுக்கு ஒரு வலிமையான ஆயுதமாக இருந்தது, ஏனென்றால் மருத்துவனுக்கு மட்டும் எந்த நேரத்திலும் எங்கும் நடக்கின்ற உரிமையைச் சமுதாயம் அளித்திருந்தது. எனவே மக்களுடைய நம்பிக்கையை அவர்கள் பெற்றிருந்ததற்கு இந்த மருந்து எனும் ஆயுதம்தான் காரணம். சித்தர் மரபு வளர்ந்தபோதுதான் நஞ்சை மருந்தாகப் பயன்படுத்தக் கூடிய முறை பிறந்தது. அதற்கு முன் அது இருந்ததாகத் தெரியவில்லை சித்தர்களையும் மக்களையும் இணைத்தது மருந்து.
நாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிற காலம்வரைக்கும் சித்தர்களின் இலக்கியத்தை மதிக்கவே மாட்டார்கள் "ஆச்சு போச்சுன்று பாட்டு எழுதியிருக்கான் இதை கல்லூரி பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க முடியுமா என்பார்கள் இப்பொழுதுதான் கலக மரபு சித்தர்கள் என்று சொல்லி சித்தர் பாடல்களைக் கொஞ்சமாவது வைத்திருக்கிறார்கள்
மிகச்சில ஏடுகள் தவிர, 19 ஆம் நூற்றாண்டில் மக்களிடம் மனப்பாடமாக இருந்ததைப் பெற்றுத்தான் பெரும்பாலான சித்தர் பாடல்களை அச்சிட்டுவந்தார்கள். அதனாலேயே அதில் சில தவறுகள் எல்லாம் இருந்தன ஆயிலைத் (oil ) தடவுவாய் என்றெல்லாம் பாட்டிருக்கிறது. இந்த ஏடுகளெல்லாம் திருவாவடுதுறை மடத்திலேயோ, தருமபுரம் மடத்திலேயோ, குன்றக்குடி மடத்திலேயோ இருக்காது. இங்கெல்லாம் சங்க இலக்கியமிருக்கும். தேவாரம் இருக்கும். திருவாசகம் இருக்கும். ஆனால் மருத்துவ ஏடுகள் இருக்காது. ஏனென்றால் இவை மக்களிடமிருந்து பெறப்பட்டுத்தான் பதிப்பிக்கப் பெற்றன. இதற்குத் திருந்திய பதிப்பு கொண்டு வருவதற்கு ஒரு உ.வே. சாமிநாதய்யர்
கிடைக்கவில்லை ஏனென்றால் இவை மடங்களில்பாதுகாக்கப்படவில்லை ஆங்கிலம் தெரிந்தால் எல்லாம் தெரிந்துவிடும் என்கிற ஒரு கலாச்சார போலித்தன்மை நம் முதல் எதிரி இந்தப் போலித்தன்மையை முதலில் உடைக்க வேண்டும். இதை ஒரு வன்முறையாகக் கொண்டு வருகிறார்கள்
நான் முதலிலேயே கூறியபடி, இந்த
"பாட்டி வைத்தியம் என்ற சொல் ஒரு வன்முறை”.
நம்முடைய பாரம்பரியமான வேர்களை எல்லாம் அழித்தால்தான் (பண்பாடு என்பது ஆணிவேராகவும், பக்கவேர்களாகவும், சல்லி வேர்களாகவும் அமைந்தது. இதை அறுத்து எறிந்தால்தான்) பன்னாட்டு முதலாளிகளுக்கு எதையும் சந்தைப்படுத்த முடியும். எனவே ஆங்கில மருத்துவம் வருகிறபோதே அதிகாரத்தோடு வருகிறது. எதுவரைக்கும் அதிகாரத்தோடு வந்தது என்று கேட்டால் 1920 வரைக்கும் கீழ்சாதிக்காரர்கள் யாருமே மருத்துவராக முடியாது. அதுவரை மருத்துவக் கல்லூரியிலே சேர வேண்டுமானால் குறைந்தபட்சம் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது
ஆங்கில மருத்துவம் படிப்பதற்கு இது ஒரு முன் நிபந்தனை, இன்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட என்றெல்லாம் சொல்கிறோமே, இந்தச் சாதிகளிலே எத்தனை பேருக்கு அன்றைக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்கும்? 1920இல் பனகல் அரசரின் நீதிக்கட்சி அமைந்த பிறகுதான் அந்த ஆணையை நீக்கினார்கள். அதுவரை ஆங்கில மருத்துவம் என்பது மேல் சாதி அதிகாரத்தோடு கட்டப்பட்டிருந்தது. அதிகாரம் என்பதே இங்கு சாதி வழியாக கட்டப்பட்டது. நம்மால் இன்றைக்கும்கூட அதை முழுமையாக உடைத்து எறிய முடியவில்லை
சித்த மருத்துவம் நோயாளியை மதிக்கின்ற மருத்துவ முறையாகும்
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் மற்றிந்தாற் கூற்றே மருந்து
என்பது வள்ளுவர் கண்ட மருத்துவ நெறியாகும்.
நோயாளி மதிக்கப்பட வேண்டியவன்.
நோயாளிகளிடமிருந்து மருத்துவர் கற்றுக் கொள்ளக்
கூடிய விசயங்களும் இருக்கிறது. ஆங்கில மருத்துவம் நடைமுறையில் அதை ஏற்றுக்கொள்வதில்லை. மருத்துவரிடம் நோயாளி ஒரு கேள்வி கேட்டால் நோயாளியை ஆங்கில மருத்துவர் மதிப்பதில்லை. எனவே நோயாளி மதிக்கப்பட வேண்டியவன், அவனிடமிருந்து கற்றுக்கொள்ள விசயம் இருக்கிறது என்பதையும் நிராகரிக்கிறது அந்த மருத்துவம்
இயல்பான நிகழ்வுகளை, இல்லாத நோய்களை எல்லாம் கண்டுபிடிக்கிறார்கள். எப்படி? பிரசவம் ஓர் இயல்பான நிகழ்வு கருக்கொண்டிருக்கிற பெண்ணை ஓர் ஆங்கில மருத்துவரிடம் அழைத்துப்போனால் அந்தப் பெண்ணை மருத்துவர் ஒரு நோயாளியாகவே பார்க்கிறார். அப்படித்தான் அந்த மருத்துவமுறை, Еuropean Epistemology அவருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது அவரையறியாமலே அந்த மருத்துவ முறைக்கு அடிமையாய் இருக்கிறார். கருக்கொண்ட பெண்ணை நோயாளியாகப் பார்ப்பது மாபெரும் தவறு. கருக்கொள்ளுதல் இயல்பான நிகழ்வு. அது எப்படி நோயாகும்? மருத்துவர்கள் இல்லாமலேயே காலம் காலமாக எத்தனையோ மகப்பேறுகள் நடந்திருக்கின்றனவே.
கருக்கொண்டு நான்கு மாதமான பெண் ஆங்கில மருத்துவரிடம் போகும்போது, “வயித்துல பிள்ளை எப்படி இருக்கிறதோ"
என்று நினைத்துக்கொள்கிறாள். திரும்பிவரும்போது 'குழந்தை ' என்ற சொல்லை மறுத்து விட்டு 'baby ' என்ற சொல்லோடு வருகிறாள் இங்கு கொள்ளை அடிக்கப்பட்டது நம்முடைய காசு மட்டுமல்ல, நம்முடைய கலாச்சாரம்; நம்முடைய மொழி
பார வண்டி செய்கிற ஆசாரிக்கு அதனைப் பற்றி முழுமையான அறிவு உண்டு. என்ன மரத்தில் செய்ய வேண்டும், என்ன பட்டை போட வேண்டும், எவ்வளவு பாரம் தாங்கும், பட்டையினுடைய கனம் என்ன என்று பொருள் பற்றிய முழுமையான அறிவு உண்டு
பொருளுற்படுத்தி பற்றின இந்த முழுமையான அறிவு வேலைப்பிரிவினை (Division Of Labour ), சிறப்புப் பயிற்சி (Specialisation ) இவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது
மருந்து பற்றிய முழுமையான அறிவு ஆங்கில மருத்துவர்களுக்குக் கிடையாது. மருத்துவப் பிரதிநிதிகள் போய் மருத்துவரிடம் விளக்கிச் சொன்னால் உண்டு. பொருள் பற்றிய முழுமையான அறிவு இருக்கக் கூடாது என்பதிலே தெளிவாக இருக்கிறது; உலகமயமாக்கலுக்குப் பின்னணியில் இருக்கிற பன்னாட்டு மூலதனம்
நமக்குக் காய்ச்சல் வருகிறது நம்முடைய பாட்டி வீட்டிலே இருக்கிற சுக்கு, மிளகு இன்னும் சில பொருட்களை இன்னின்ன விகிதத்தில் என்று கலந்து குடிநீரிட்டுத் தருகிறார். இரண்டு நாட்களில் சரியாக வில்லையா? நிலவேம்பைச் சேர்த்துக்கொடு என்கிறார். பிணி பற்றிய அறிவு, எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்துப் பொருட்களைப் பற்றிய அறிவு நம்முடைய பாட்டிக்கு இருக்கிறது அவளே மருத்துவராக இருக்கிறார்; அவரே pharmachologist ஆக இருக்கிறார் அவரே நர்சாகவும் இருக்கிறார்
நம்மிடமிருந்த பொருள் பற்றிய இந்த அறிவைக் கொன்றழித்தது யார், இதை மீட்டெடுப்பது யார், மீட்டெடுப்பது எப்படி என்பது நம்முன்னுள்ள கேள்வி.
இந்தப் பாரம்பரியமான அறிவுத் தொகுதி, மருத்துவத்துறையில் மட்டுமன்று எல்லாத் திசைகளிலும் கொன்றழிக்கப்படுகிறது என்பதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன்
ஏனென்றால் வெப்பமண்டலம் பற்றிய அல்லது அண்டத்தின் இந்தப் பகுதியைப் பற்றிய மருத்துவம் வேண்டுமல்லவா இலக்கியமோ அறிவை உள்வாங்கிக்கொண்ட இசையோ இருந்திருக்க
இவையனைத்தும் இல்லாமல் போனதற்கான காரணம், இந்த மூலதனத்தினுடைய உள்ளார்ந்த சுரண்டல் தன்மை அப்படியென்றால் இதற்கு எதிராக நாம் என்ன செய்ய வேண்டும்!
நம்முடைய முன்னோர்கள் சமூகப்
பொறுப்புடையவர்கள் என்பதினால்தான் நமக்குச் சுத்தமான தாமிரபரணி நீரை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சமூகப் பொறுப்புடையவர்கள் என்பதினாலேதான் வயல்களிலே இரசாயன உரங்களை இடாமல், இயற்கை வளத்தை அப்படியே நம்கையில் தந்துவிட்டுப் போனார்கள் நாம்தான் ஃபாக்டம்பாசையும் யூரியாவையும் போட்டோம்; பூச்சி மருந்துகளைத் தெளித்தோம்.
Cultural Osmosis என்று சொல்லுவார்கள். ஒரு நல்ல உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் கோதுமை விளையாது. ரொட்டி கோதுமையில்
செய்யப்படுகிற உணவு ரொட்டியை ஐரோப்பியர் கொண்டு வந்தனர். ரொட்டி மட்டுமல்ல கேக், மக்ரூன் என்னென்னவோ கொண்டு வந்தனர். இந்த ரொட்டியை மட்டும், பிரசவித்த பெண்ணின் என இன்னும்
Postal natal உணவாக மாற்றிக்கொண்டார்கள் இல்லையா? அதற்குப் பெயர்தான் Cultural Osmosis கலாச்சாரத் தகவமைவு. இது நம் கலாச்சாரத்தின் பலமான அம்சம் இதையெல்லாம் நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்ற கவலையினை, அக்கறையினை நாம் பெற்றால்தான் நம்முடைய பாரம்பரியமான மருத்துவத்தை, நாளைய தலைமுறையின் தேவைக்கு ஏற்றதாக நம்மால் சீரமைக்க முடியும் எனக் கருதுகிறேன்
இது நம் பண்பாட்டிலிருந்து நாம்
கற்றுக்கொண்டதாகும். கிடைக்கிற எல்லா புதிய அனுபவங்களையும் கொண்டு தனக்குத்தானே தகவமைத்துக்கொள்வது
நம் பண்பாட்டின் பலம்
15/06/2005 அன்று
Siddha Rest 05 விழாவில் நிகழ்த்திய உரை. சாளரம் இலக்கிய மலர் 2008
No comments:
Post a Comment