Monday, November 27, 2017

அடி ராக்கோழி கூவும்

அடி ராக்கோழி கூவும்

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு
அந்த ஏற்ககாடு ஊட்டி போல
குளிர் ஏராளம் ஏறிப்போச்சு
குளிர் அடிக்க அடிக்க
கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க
கட்டிப் புடிக்க புடிக்க வா மாமா
அடி ஆத்தி ஆடு
சுதி ஏத்திப் பாடு

அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

தட்டி தட்டி தவுல மெல்ல தட்டி
விடியும் வர கச்சேரி வெக்கலாமா
பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம்
நீ வித்தைகள காட்டாம நிக்கலாமா

கட்டி கட்டி இறுக உன்ன கட்டி
அழகுருக்கும் கொஞ்சாமல் செல்லலாமா
என்ன வேணும் என் எண்ணங்கள நானும்
உங்கிட்ட வந்து காத்தோடு சொல்லலாமா

அடி நீ என்ன கேட்டாலும் தாரேன்
அந்த தோப்போறம் வான்னாலும் வாறேன்

விடிஞ்சாலும் மாமா
விடமாட்டேன் ஆம்மா

அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசா..ங்கம் ஆகிப்போச்சு

கொஞ்சி கொஞ்சி மடியில் உன்னக் கொஞ்சி
கலந்திருக்க வந்தாச்சு திருநாளு
கன்னி தோளு கை தொட்டு கொஞ்சும் ஆளு
என் வள்ளிக்குப்பம் கொண்டாடும் வடிவேலு

சுத்திச்சுத்தி நிதமும் என்ன சுத்தி
புடிச்சுப்புட்டே இந்நேரம் வல வீசி
மெத்தப் போட உன் மந்திரத்திலாட
நான் ஒத்துக்கிட்டேன் வாயேண்டி மகராசி

நிலா எம்மேல தீயாட்டம் காயும்
இப்போ உம்மேல எம்மேனி சாயும்

அடி ஆத்தி ஆடு
சுதி ஏத்திப் பாடு

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

குளிர் அடிக்க அடிக்க
கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க
கட்டிப் புடிக்க புடிக்க வாம்மா வா
அடி ஆத்தி ஆடு
சுதி ஏத்திப் பாடு
அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு...

No comments:

Post a Comment