Showing posts with label தங்கச்சங்கிலி மின்னும். Show all posts

Friday, October 13, 2017

தங்கச்சங்கிலி மின்னும்

தங்கச்சங்கிலி மின்னும்

தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ

மலர் மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூவேலைகள் உன் மேனியில் பூஞ்சோலைகள்
அந்திப்பூவிரியும் அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு தணியும் வரையில் விடியாது திருமகள் இரவுகள்

தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ

ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
லா லா லால லா லா லால லால லா லா
தன்னோடுதான் போராடினாள் வேர்வைகளில் நீராடினாள்
ரா ரா ரரா ரா ரா ரரா ரா ரா ரரா ரா ரா ரரா
அன்பே ஆடைகொடு எனை அனுதினம் அள்ளிச்சூடிவிடு
இதழில் இதழால் கடிதம் எழுது ஒரு பேதை உறங்கிட மடிகொடு

தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
மலர் மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ.....