பொதிகை மலை
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
இந்த பாண்டியனார் பைங்கிளியை தீண்டிடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
கார் குழலை நீராட்டி கண்ணிரண்டை தாலாட்டி
கார் குழலை நீராட்டி கண்ணிரண்டை தாலாட்டி
தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல்
வண்ண தேகமெங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றல்
தேகமெங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
வட்டமிட்டு பாதை தேடி மயங்கிடும் தென்றல்
போக வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
வான் பறக்கும் கொடியினிலே
மீன் பறக்கும் மதுரையிலே
வான் பறக்கும் கொடியினிலே
மீன் பறக்கும் மதுரையிலே
தான் பறந்து ஆட்சி செய்யும் தளிர் மணி தென்றல்
அது வான் திறந்த போது வந்த வாலிப தென்றல்
வான் திறந்த போது வந்த வாலிப தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
கன்னியர்கள் மேனியிலே கலந்து வரும் வேளையிலும்
கன்னியர்கள் மேனியிலே கலந்து வரும் வேளையிலும்
தன்னுடலைக் காட்டாத தந்திர தென்றல்
ஆளும் தென்னவர்க்கும் அஞ்சாத சாகச தென்றல்
தென்னவர்க்கும் அஞ்சாத சாகச தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
No comments:
Post a Comment