மழை-Rain
தொடங்கும் போது
காதலியைப் போல்
மகிழ்ச்சியாய்
தெரிந்த மழை
தொடர்ந்து கொண்டே
இருப்பதால்
மனைவியைப் போல்
தொல்லையாய்த்
தெரிகிறது
இன்னும் நீடித்தால்
மருமகளைப் போல்
வீட்டுக்குள் புகுந்து
நம்மை வெளியேற்றிவிடுமோ
என்றே தோன்றுகிறது.....
முனைவர்.ஜோதிபாசு
No comments:
Post a Comment