நான் மலரோடு
படம் : இரு வல்லவர்கள் (1966)
இசை : வேதா
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுஷீலா
ஆ - நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகாராணி உனை கானா ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகாராணி உனை கானா ஓடோடி வந்தேன்
பெ - நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
ஆ - நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகாராணி உனை கானா ஓடோடி வந்தேன்
ஆ - நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வலை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வலை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்
உன் மலர்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
உன் மலர்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
பெ - நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
ஆ - நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகாராணி உனை கானா ஓடோடி வந்தேன்
பெ - பொன் வண்டொடு மலரென்று முகத்தோடு மோத
நான் வலை கொண்ட கையாலே மெதுவாக மூட
பொன் வண்டொடு மலரென்று முகத்தோடு மோத
நான் வலை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேககங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேககங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
ஆ - நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகாராணி உனை கானா ஓடோடி வந்தேன்
No comments:
Post a Comment