Sunday, November 12, 2017

காதல் விளையாட


காதல் விளையாட

ஆண்டு:1974 
படம்: "கண்மணி ராஜா"   இசை:மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்    
SPB , p.சுசிலா

காதல் விளையாட கட்டிலிடு கண்ணே
தூயமகனாட தொட்டிலிடு கண்ணே
எண்ணங்களின் இன்ப நடனம்
கன்னங்களின் மீது அன்பு நிலை எழுதும்
காதல் விளையாட கட்டிலிடு கண்ணா
தூயமகனாட தொட்டிலிடு கண்ணா
ஹே ஹே ஹே ஹே
ஆஹா அஹா ஹா ஹா
ஆ ஆ ஹா ஹா
ஒஹோ ஆஹா ம்ஹும்
லா லா ஆஹா ஆ..
ஆஹா ஹாஹ ஹேஹெ ஹேஹெ

செந்தூர சிங்காரம் கொண்டாடும் பெண்ணுக்கு
என் உள்ளம் சொர்க்கம் தரும்
செவ்வாயின் மீது ஊரும் தேனாற்றில் நானாட
பொல்லாத வெட்கம் வரும்

கண்ணோடு கண்னோக்கி பண்பான பெண் கொண்ட
காளைக்கு மோகம் வரும்
அன்பான மாப்பிள்ளை ஒன்றாகும் நேரத்தில்
ஆசைக்குள் அச்சம் வரும்
மண்ணில் வரை தங்கமலர்கள்
பெண் கொண்ட காதல் பெருமை என எழுதும்
செவ்வாணக்கோலங்கள் சீராட்டும் மேகங்கள்
பொன்னூஞ்சல் போடட்டுமே
ஜில்லென்று பூங்காற்று பல்லாண்டு நாம் வாழ
தென்பாங்கு பாடட்டுமே

நீராட்டு தீராமல் தேரோட்டும் புஷ்பங்கள்
பாராட்டி பேசட்டுமே
நேராக கிள்ளைகள் ஆராத்தி தட்டோடு
தாலாட்டு பாடட்டுமே
என்றும் இது நின்று நிலவும்
என் வாழ்க்கை வாணம் இனிமையுடன் திகழும்
காதல் விளையாட கட்டிலிடு கண்ணா
தூயமகனாட தொட்டிலிடு கண்ணா

No comments:

Post a Comment