பூவே உன்னை
பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்
காதல் வேண்டும் யாசித்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை கண்ணே
உள்ளத்தில் ஓசையில்லை
ஊமைக்கு பாஷையில்லை
கண்மணியே மெளனம்தானே தொல்லை ஹா..
நீயா என்னை நேசித்தாய்
பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய்
கோழை போல யாசித்தாய்
என் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது
ஓஹோ ஆஹா உண்மைதானா
ஏழு ஜென்மம் போனாலும் இந்த பந்தம் போகாது
நீயா சொன்னாய் மெய்யே தானா
உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது
பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது
பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
உண்மை சொல்ல யோசித்தாய்
கோழை போல யாசித்தாய்
காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது
கண்ணே உந்தன் எண்ணம் என்ன
கண்ணடித்தால் தீராது காதல் இங்கு வாராது
என்னை தந்தேன் இன்னும் என்ன
பெண்மை என்றால் வீரனுக்கே பாலை தந்துவிடும்
வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்
பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்
காதல் வேண்டும் யாசித்தேன்
என் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
No comments:
Post a Comment