தொட்ட இடம் எல்லாம்
படம்--இதயக்கனி.
குரல்--சுசீலா-டி.எம்.எஸ்
இசை-எம்.எஸ்.வி.
வரிகள்-ந.காமராஜன்
நடிப்பு--எம்.ஜி.ஆர்-நிர்மலா-ராதா சலூஜா.
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
தத்தை மொழி சொன்னாள்
பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன் சிவக்க
முத்தம் அவள் தந்தாள்
ஆடை கட்டிவந்து நிற்கும்
மேடு பள்ளமானதொரு பாவை
விழி ஜாடை முத்தம் போடுகின்ற
ஆலவட்டம் மீறுகின்ற போதை
வீணை மட்டும் பேசுகின்ற பாணி பெற்று
தேனை வென்ற வார்த்தை.. இவள்
ஆணை வென்று வீழ்த்துகின்ற
சேனை கொண்ட காதல் தேவன் கோட்டை
காதல் தேவன் கோட்டை
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
தத்தை மொழி சொன்னாள்
பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன் சிவக்க
முத்தம் அவள் தந்தாள்
அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி
இரவை ரசிப்போம் கனவில் உலவி
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
தத்தை மொழி சொன்னாள்
பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன் சிவக்க
முத்தம் அவள் தந்தாள்
தளிர் மேனியில் விரல் பட்டதும் குளிர் போனதே
குளிர் போனதும் மழை கூந்தலின் புகழ் பாடினேன்
புகழ் பாடியே தினந்தோறுமே
முகம் தேடினேன் முகம் கண்டதும்
புது காதலில் நடமாடினேன்
சுகம் எவ்விடம் துயர் அவ்விடம்
சுடர் என்பதே வெறுப்பாகுமோ
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே செய்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம்
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
தத்தை மொழி சொன்னாள்
பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன் சிவக்க
முத்தம் அவள் தந்தாள்
No comments:
Post a Comment