Monday, November 15, 2021

இரண்டாம் சற்று ஆர்.பாலகிருஷ்ணன்

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் ஆர்.பாலகிருஷ்ணன்

சிறகுக்குள் வானம் ஆர்.பாலகிருஷ்ணன்

பழமொழிப் புதையல் ப.குணசேகர்

தனக்குத்தானே நன்மை செய்யாதவன் 
அடுத்தவனுக்கு நல்லதாக 
இருப்பான் என்று சொல்ல முடியாது

அடுத்தவர் மீது எலும்பை வீசுபவன்
தன்மீது எலும்பு வீசப்பட்டால் 
கவலை கொள்ளக்கூடாது

செத்தால் உன்உடலைப் புழுக்கள்
தின்னும் கவலை உன்னைத்
தின்னும் வாழும்போது

எந்தக் காரணமும் இன்றி சீற்றம்
கொள்பவன் எந்தக் காரணமும்
இல்லாமல் நட்பாக இருப்பான்

தன்னுடைய குடும்பம் குறித்து
அவமானம் அடைபவன் எப்போதும்
அதிர்ஷ்டக்கட்டையாகவே இருப்பான்

வார்த்தைகளை எடைபோட 
வேண்டும் எண்ணிப் பார்க்கக் 
கூடாது

எல்லாரையும் திருப்தி செய்பவன்
காலம் வருமுன்பே இறந்து 
போவான்

ஏழில் இருந்தது போலவே 
எழுபதிலும் இருப்பான்

எப்படிப் படுக்கையை
அமைக்கிறாயோ அப்படியே
அதன்மீது தூங்குவாய்

உடலுக்கு சோப்புப்போல
உள்ளத்திற்குக் கண்ணீர் 
தோன்றும்

Tuesday, July 27, 2021

நாலு பேர் என்ன எண்ண?

😃முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்😃
😂"கள்ளச்சிரிப்பு " என்றார்கள்

☺கோபங் கொண்டேன்☺
☺" சிடுமூஞ்சி" என்றார்கள்.

👨அதிகம் பேசாமலிருந்தேன்
👨" ஊமையன்" என்றார்கள்.👨

❤சளசளவென்று பேசினேன்❤
❤" ஓட்டவாய் " என்றார்கள்.

💙புதிய தகவல்களை பரிமாறினேன்💙
💙" கருத்து கந்தசாமி " என்றார்கள்.💙

💚அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,💚
💚" ஜால்ரா " என்றார்கள்.💚

💖எல்லா செயல்களிலும் முன் நின்று செய்தேன்....!!
💖முந்திரிக்கொட்டை என்றார்கள்.💖

💛அவர்களைப் பின் தொடர்ந்தேன்💛
💛" நடிப்பு" என்றார்கள்.💛

🍁யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்🍁
🍁" ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.🍁

🌻வணங்குவதை நிறுத்தினேன்🌻
 🌻"தலைக்கனம்" என்றார்கள்.🌻

🌺ஆலோசனை வழங்கினேன்,🌺
🌺" படிச்ச திமிர்" என்றார்கள்🌺

💓சுயமாக முடிவெடுத்தேன்💓
💓" அதிபுத்திசாலி "
என்றார்கள்💓

😥நான் கண்ணீர் விட்டு அழுததால்,😥
 😥"வேஷக்காரன்" என்றார்கள்.😥

💕நான் சிரித்த போதெல்லாம்*💕
 💕மறை கழண்டு போச்சு" என்றார்கள். 💕

💚எதிர்கேள்வி கேட்டால்,💚
💚வில்லங்கம் என்றார்கள்

💖ஒதுங்கி இருந்தால்,💖
💖"பயந்தாங்கொள்ளி"  என்றார்கள்.💖

💛உரிமைக்குப் போராடினால்💛
 💛"கலகக்காரன் " என்றார்கள்.💛

❤எதற்கும் கலங்காமல் இருந்தால்❤
❤"கல் நெஞ்சன்" என்றார்கள்.❤

🌻"நாலு பேர் என்ன நினைப்பார்கள். நாலுபேர் என்ன பேசுவார்கள்? யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன். தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை. அந்த நாலு பேரை கழற்றி விட்டு என்னை அணிந்துக் கொண்டேன். துலங்கத் துவங்கியது எனக்கான வாழ்வின் துளிர். வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக, குறிப்பாக மிக  நிம்மதியாக.❤

படித்ததில் பிடித்தது

Thursday, June 17, 2021

கோமேதகம்-சங்க இலக்கியத்தில் மணிகள் P.L.Samy IAS

 கோமேதகம்

திருமணி

சங்க இலக்கியத்தில் மணிகளைப்பற்றிய பல செய்திகளைக் காணலாம். முன்னோர் முத்தையும் மணிகளில் ஒன்றாகக் கொண்டனர். இலக்கியத்தில் மணிகள் என்று சிறப்பாக அழைக்கப்படுபவை மாணிக்கம், நீலம், புட்பராகம், வைடூரியம், கோமேதகம் ஆகிய ஐந்து மணிகளாகும்.

"ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின்

இலங்குகதிர் விடூஉ நலங்கெழு மணிகளும் '"

- சிலம்பு : ஊர்காண் காதை: 191-192

இந்தக் கற்களையே சங்க நூல்களில் 'இலங்குகதிர்த் திருமணி' என்று அழைத்தனர்.

"இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்

அகன்கண் வைப்பின் நாடு "

-பதிற்றுப் பத்து 6 : 8, 19 -20

சங்க நூல்களில் இந்த ஐந்து இரத்தினக் கற்களையே ‘திருமணி' என்று அழைத்தனர். மணி என்ற பெயர் பெரும்பாலும் மாணிக்கத்திற்கும் நீலத்திற்கும் பெயராக வழங்கியது.

10

தமிழ் நாட்டில் கிடைத்த கற்களில் சிறந்தவை வைடூரியமும் நீலமும் ஆகும்.

ஏற்றுமதி

தமிழ் நாட்டில் விளைந்த மணிக்கற்களைத் தவிரத் தமிழ். நாட்டுத் துறைமுகங்களுக்குப் பலவகை மணிக்கற்கள் கெ

வரப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானதைப் பிறநாட்டார் எழுதியுள்ளனர். தொண்டி, முசிறி துறைமுகங்களிலிருந்து பலவகை மணிகள் ஏற்றுமதி செ பட்டதாகப் 'பெரிபுளூஸ்' என்ற நூல் கூறியுள்ளது. இந்த மணிகளில் பல தமிழ் நாட்டில் கிடைக்கா தவையாகும் இவை பெரும்பாலும் ஈழ நாட்டிலிருந்து கொணரப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டவையாகக் கருதலாம்.

மணிபல்லவம்

ஈழ நாட்டில்தான் சிறந்த மணிகள் நிறையக் கிடைத்தன. மணிகள் கிடைத்த தீவையே மணிமேகலை ‘மணிபல்லவம்” என்று அழைத்துள்ளது.

தமிழ் நாட்டில், கொங்கு மண்டலத்திலேதான் நிறைய மணிகள் கிடைத்தன என்று ஆராய்ச்சியாளர் கண்டுபிடித் துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் பாடியூர் என்ற ஊரில் உயர்ந்த மணிக்கற்கள் கிடைத்ததை உரோமர் கி. பி. முதல் நூற்றாண்டிலேயே குறிப்பிட்டுள்ளனர். இங்கு ஒருவகைக் கோமேதகக் கல் (Beryl) கிடைத்தது என்று தெரிகின்றது.

ஆந்திரத்தில் பட்டிப்புரோலு தூபியில் (Bhattiprolu Stupa)

கோமேதக அணிகள் அகப்பட்டுள்ளன.

பிளினி என்ற மேல்நாட்டு ஆசிரியர் கோமேதகம் இந்தியாவில் கிடைப்பதாக எழுதியுள்ளார்.

யுன்னாடு

இந்தக் கற்கள் கிடைத்த புன்னாடு என்ற ஊரைச் சங்க காலத்தில் நன்னன் வென்றதாகக் கூறப்பட்டுள்ளது.

மைசூருக்கு அருகே உள்ள இந்த நாட்டிலும் ஒருவகைக்

கோமேதகம் கிடைத்துள்ளது. இங்குக் கிடைத்த கோமேதகம்

நீல நிறமுடையதாக இருந்தது.

இந்த நீலக் கற்களை (Acquamarine) சுரங்கத்தில் இருந்து எடுத்ததாகப் பிளினி கூறியுள்ளார்.

Wednesday, June 16, 2021

முன்னுரை-சங்க இலக்கியத்தில் மணிகள் P.L.Samy IAS

உருவாக்கியோர்

பி. எல். சாமி, ஐ.ஏ.எஸ்.

கவிஞர் அமுதோன்

எலிகண்ட் பிராசஸ்

நியூடோன்

சங்கர், ஜெயராமன் தங்கம், கன்னிகா

எஸ். குப்புசாமி வெற்றி அச்சகம்

சோல்டன் பிரஸ்

நடராஜன்

பேராசிரியர்

மா. ரா. இளங்கோவன்

வெள்ளையாம்பட்டு சுந்தரம்

சேகர் பதிப்பகம்

ஆசிரியர்

ஓவியர் - முகப்பு, உட்புறம்

பிளாக்

பிளாக்

அச்சுக் கோப்பு

அச்சகத்தார்

அச்சகத்தார்

கட்டுக்கோப்பு

பிழை திருத்தம்

பதிப்பாளர்

-உட்புறம்

- முகப்பு

-நூல்

- முகப்பு

-

-

நன்றி

படங்கள் :

திரு.வி.எஸ்.வி. இராகவன் அவர்கள்
முன்னுரை

சங்க இலக்கியத்தில் மணிகள் என்ற எனது இந்நூல், சங்க இலக்கிய ஆராய்ச்சி நூல்களின் வரிசையில் வெளிவரும் ஐந்தாவது நூலாகும்.

சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம், சங்க நூல்களில் மீன் ஆகிய நான்கு நூல்களும் உயிரினங்களைப்பற்றி நான் ஆராய்ந்து எழுதிய நூல்களாகும்.

அவைகளில் முற்றிலும் வேறுபட்டதாகும், சங்க நூல்களில் மணிகளைப்பற்றியும் சொல்லியிருப்பார்களோ என்று பலர் ஐயுறுவர். சங்க நூல்களில் மணிகளைப்பற்றிய செய்திகளை ஆராயும்போது, பல அரிய செய்திகள் காணப் படுவதை எண்ணி வியப்படைய வேண்டியுள்ளது.

இந்நூல்

தமிழ் நாட்டில் கிடைத்த சிறந்த கற்களான வைடூரியம்,

முத்து ஆகியவைப் பற்றிய செய்திகள் புதியவை யாகும்.

வைடூரியம்,முத்து என்ற பெயர்கள் தூய தமிழ்ச் சொற்களிலிருந்து

தோன்றின என்பதும் இதில் விளக்கப்பட்டுள்ளது.


சங்க இலக்கியத்தில் காணப்படும் மணிகளைப்பற்றிய செய்திகளை, உரோமர், கிரேக்கர் கூறியுள்ள பண்டைய செய்தி களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து முதல் முறையாக இந்நூலில் விளக்கம் கூறப்பட்டுள்ளது.
சங்க இலக்கியச் செய்திகளும், கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் உரேம ரும் கிரேக்கரும் இந்தியாவுடன் 'கொண்டிருந்த வாணிகத்தைப் பற்றிய செய்திகளும், வகையில் ஒன்றுக்கொன்று சான்று பகர்வனவாகும்.

சங்க நூல்களின் காலத்தை அறுதியிட்டுக் கூறவும் முடிகின்றது. இந்நூலை எழுத, மணிகளைப்பற்றிய அறிவியல் செய்திகள், வரலாற்றுச் செய்திகள், பாரம்பரியச் செய்திகள் முதலிய யாவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்க நூல்களில் காணப்படும் அரிய பெரிய நுணுக்கமான செய்திகளைப் புரிந்து கொள்ள பல்துறை அறிவு இன்றியமையாததாகும்.

சங்க நூல்களில் இயற்கைச் செய்திகள் உள்ளது உள்ளவாறு விளக்கமாகவும் நுணுக்கமாகவும் கூறப்பட்டுள்ளன; அறிவியல் தழுவிய இயற்கைச் செய்திகள் மிகுந்து காணப்படுகின்றன. ஆதலின் சங்க நூல்களில் கூறப்பட்ட இயற்கைச் செய்திகளை நன்கு உணர்வதற்கு வெறும் தமிழ் இலக்கிய அறிவு மட்டும் போதாது; பல்துறை அறிவும் வேண்டும். சங்கப் புலவர்களுக்கு இருந்த இயற்கையைப்பற்றிய பட்டறிவு தற்காலத்தில் இல்லாத தால் அறிவியல் துணை கொண்டு ஆராய வேண்டியுள்ளது.

இந்நூல், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிடும் திங்கள் இதழான ‘செந்தமிழ்ச் செல்வி’யில் தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். அக்கட்டுரைகளில் தேவையான அளவு திருத்தியும் விரித்தும் செப்பமுற நூலாக்கப்பட்டுள்ளது.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பரந்த உள்ளத்தோடு ஒரு சங்கப் புலவன் கூறினான். சங்க காலத்தில், நாகரிக உலகு என்று கருதப்பட்ட உரோம, கிரேக்க நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வாணிகத் தொடர்பு, மணிகளின் ஆராய்ச்சி யிலிருந்து நன்கு விளங்கும். சங்க இலக்கியத்திற்குப் பிறகு மணிகளைப் பற்றியதாகச் சிலப்பதிகாரத்திலும், கல்லாடத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் பல செய்திகள் -நூலிலும் உரையிலும் காணப்படுகின்றன. ஆனால் இச்செய்திகளில் பலவற்றிற்கு இன்று விளக்கம் தர முடியவில்லை.

இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும் கோயில் களுக்கு அளித்த அணிகலன்களில் மிகப் பல, மணிகளை உடையனவாக இருந்தன. மணிகளைப்பற்றிய செய்திகளும் நிறையக் கூறப்பட்டுள்ளன. ஆனால் அவைகளில் பல செய்தி கள் விளங்காமல் உள்ளன.

மணிகளைப் பற்றிய மிகுந்த அறிவுடையவராகத் தமிழர்கள் இருந்துள்ளனர். மணிகளைப் பற்றிய நூல்களும் அக்காலத்தில் இருந்தன. ஆனால் இக்காலத்தில் அந்த அழகு மணிகளைப் பற்றிய அறிவும், நூல்களும் இல்லாதிருப்பது ஒரு குறையே.

சங்க காலத்தில் கூறப்பட்ட மணிகளைப்பற்றி நான் எழுதிய இந்த நூலை, சென்னை சேகர் பதிப்பகத்தார் நல்ல முறையில் அழகாக உருவாக்கி வெளியிடுகிறார்கள். தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்றுப் பயன்பெறுமென்று நம்புகின்றேன்.

புதுவை 4-12-80 }

பி. எல்.சாமி