உருவாக்கியோர்
பி. எல். சாமி, ஐ.ஏ.எஸ்.
கவிஞர் அமுதோன்
எலிகண்ட் பிராசஸ்
நியூடோன்
சங்கர், ஜெயராமன் தங்கம், கன்னிகா
எஸ். குப்புசாமி வெற்றி அச்சகம்
சோல்டன் பிரஸ்
நடராஜன்
பேராசிரியர்
மா. ரா. இளங்கோவன்
வெள்ளையாம்பட்டு சுந்தரம்
சேகர் பதிப்பகம்
ஆசிரியர்
ஓவியர் - முகப்பு, உட்புறம்
பிளாக்
பிளாக்
அச்சுக் கோப்பு
அச்சகத்தார்
அச்சகத்தார்
கட்டுக்கோப்பு
பிழை திருத்தம்
பதிப்பாளர்
-உட்புறம்
- முகப்பு
-நூல்
- முகப்பு
-
-
நன்றி
படங்கள் :
திரு.வி.எஸ்.வி. இராகவன் அவர்கள்
முன்னுரை
சங்க இலக்கியத்தில் மணிகள் என்ற எனது இந்நூல், சங்க இலக்கிய ஆராய்ச்சி நூல்களின் வரிசையில் வெளிவரும் ஐந்தாவது நூலாகும்.
சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம், சங்க நூல்களில் மீன் ஆகிய நான்கு நூல்களும் உயிரினங்களைப்பற்றி நான் ஆராய்ந்து எழுதிய நூல்களாகும்.
அவைகளில் முற்றிலும் வேறுபட்டதாகும், சங்க நூல்களில் மணிகளைப்பற்றியும் சொல்லியிருப்பார்களோ என்று பலர் ஐயுறுவர். சங்க நூல்களில் மணிகளைப்பற்றிய செய்திகளை ஆராயும்போது, பல அரிய செய்திகள் காணப் படுவதை எண்ணி வியப்படைய வேண்டியுள்ளது.
இந்நூல்
தமிழ் நாட்டில் கிடைத்த சிறந்த கற்களான வைடூரியம்,
முத்து ஆகியவைப் பற்றிய செய்திகள் புதியவை யாகும்.
வைடூரியம்,முத்து என்ற பெயர்கள் தூய தமிழ்ச் சொற்களிலிருந்து
தோன்றின என்பதும் இதில் விளக்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கியத்தில் காணப்படும் மணிகளைப்பற்றிய செய்திகளை, உரோமர், கிரேக்கர் கூறியுள்ள பண்டைய செய்தி களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து முதல் முறையாக இந்நூலில் விளக்கம் கூறப்பட்டுள்ளது.
சங்க இலக்கியச் செய்திகளும், கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் உரேம ரும் கிரேக்கரும் இந்தியாவுடன் 'கொண்டிருந்த வாணிகத்தைப் பற்றிய செய்திகளும், வகையில் ஒன்றுக்கொன்று சான்று பகர்வனவாகும்.
சங்க நூல்களின் காலத்தை அறுதியிட்டுக் கூறவும் முடிகின்றது. இந்நூலை எழுத, மணிகளைப்பற்றிய அறிவியல் செய்திகள், வரலாற்றுச் செய்திகள், பாரம்பரியச் செய்திகள் முதலிய யாவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்க நூல்களில் காணப்படும் அரிய பெரிய நுணுக்கமான செய்திகளைப் புரிந்து கொள்ள பல்துறை அறிவு இன்றியமையாததாகும்.
சங்க நூல்களில் இயற்கைச் செய்திகள் உள்ளது உள்ளவாறு விளக்கமாகவும் நுணுக்கமாகவும் கூறப்பட்டுள்ளன; அறிவியல் தழுவிய இயற்கைச் செய்திகள் மிகுந்து காணப்படுகின்றன. ஆதலின் சங்க நூல்களில் கூறப்பட்ட இயற்கைச் செய்திகளை நன்கு உணர்வதற்கு வெறும் தமிழ் இலக்கிய அறிவு மட்டும் போதாது; பல்துறை அறிவும் வேண்டும். சங்கப் புலவர்களுக்கு இருந்த இயற்கையைப்பற்றிய பட்டறிவு தற்காலத்தில் இல்லாத தால் அறிவியல் துணை கொண்டு ஆராய வேண்டியுள்ளது.
இந்நூல், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிடும் திங்கள் இதழான ‘செந்தமிழ்ச் செல்வி’யில் தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். அக்கட்டுரைகளில் தேவையான அளவு திருத்தியும் விரித்தும் செப்பமுற நூலாக்கப்பட்டுள்ளது.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பரந்த உள்ளத்தோடு ஒரு சங்கப் புலவன் கூறினான். சங்க காலத்தில், நாகரிக உலகு என்று கருதப்பட்ட உரோம, கிரேக்க நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வாணிகத் தொடர்பு, மணிகளின் ஆராய்ச்சி யிலிருந்து நன்கு விளங்கும். சங்க இலக்கியத்திற்குப் பிறகு மணிகளைப் பற்றியதாகச் சிலப்பதிகாரத்திலும், கல்லாடத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் பல செய்திகள் -நூலிலும் உரையிலும் காணப்படுகின்றன. ஆனால் இச்செய்திகளில் பலவற்றிற்கு இன்று விளக்கம் தர முடியவில்லை.
இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும் கோயில் களுக்கு அளித்த அணிகலன்களில் மிகப் பல, மணிகளை உடையனவாக இருந்தன. மணிகளைப்பற்றிய செய்திகளும் நிறையக் கூறப்பட்டுள்ளன. ஆனால் அவைகளில் பல செய்தி கள் விளங்காமல் உள்ளன.
மணிகளைப் பற்றிய மிகுந்த அறிவுடையவராகத் தமிழர்கள் இருந்துள்ளனர். மணிகளைப் பற்றிய நூல்களும் அக்காலத்தில் இருந்தன. ஆனால் இக்காலத்தில் அந்த அழகு மணிகளைப் பற்றிய அறிவும், நூல்களும் இல்லாதிருப்பது ஒரு குறையே.
சங்க காலத்தில் கூறப்பட்ட மணிகளைப்பற்றி நான் எழுதிய இந்த நூலை, சென்னை சேகர் பதிப்பகத்தார் நல்ல முறையில் அழகாக உருவாக்கி வெளியிடுகிறார்கள். தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்றுப் பயன்பெறுமென்று நம்புகின்றேன்.
புதுவை 4-12-80 }
பி. எல்.சாமி