Showing posts with label வான் மதியே. Show all posts
Showing posts with label வான் மதியே. Show all posts

Tuesday, October 10, 2017

வான் மதியே

வான் மதியே

பாடகர்கள் பாடகிகள்எஸ்.ஜானகி
இசையமைப்பாளர்இளையராஜா  பாடலாசிரியர்கள்பிறைசூடன் 
இயக்குநர்ராஜ்கிரண்  ராகம்
வெளியானஆண்டு1993 தயாரிப்புரெட் சன் ஆர்ட் கிரியேசன்ஸ்

வான் மதியே.... வான் மதியே....
தூது செல்லு வான் மதியே...

இசைபல்லவி

வான் மதியே ஓ வான் மதியே
தூது செல்லு வான் மதியே
மாளிகை பொன் மாடம் மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம் ஏற்குமோ என் நெஞ்சம்
காதலன் வாசல் வர வேண்டும்
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்

வான் மதியே ஓ வான் மதியே
தூது செல்லு வான் மதியே

இசைசரணம் - 1

வைகை வந்து  கையணைக்க
வெள்ளி அலை மெய்யணைக்க
வாடி நின்ற தென்மதுரை நான் தானோ
தென்றலுக்கு ஆசை இல்லை
தீண்டிடுது வாச முல்லை
அம்மம்மா அன்பு தொல்லை ஏன் தானோ
வண்ணப் பூவும் என்னைக் கண்டு
வாயிதழை மூடிக் கொண்டு
புன்னகைக்க மாட்டேன் என்று போராடுது
அந்தி மாலை வரும் நோய் கொண்டு
தன்னந்தனி நான் என்று
பாவை நிதம் வாடும் விதம் பாராய்

வான் மதியே ஓ வான் மதியே
தூது செல்லு வான் மதியே

இசைசரணம் - 2

நெஞ்சுக்குள்ளே கொட்டி வைத்து
நித்தம் நித்தம் நான் அளக்கும்
என்னுடைய ஆசைகளை கூறாயோ
உன்னைப் போல நானும் மெல்ல
தேய்வதிங்கு ஞாயம் அல்ல
வெண்ணிலவே தூது செல்ல வாராயோ
எத்தனையோ சொல்லி விட்டேன்
எண்ணங்களை அள்ளி விட்டேன்
இன்னும் அந்த மன்னன் மனம் மாறாததேன்
உயிர் காதல் துணை வாராமல்
கண்ணை இமை சேராமல்
பாவை நிதம் வாடும் விதம் பாராய்

வான் மதியே ஓ வான் மதியே
தூது செல்லு வான் மதியே
மாளிகை பொன் மாடம் மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம் ஏற்குமோ என் நெஞ்சம்
காதலன் வாசல் வர வேண்டும்
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்

வான் மதியே ஓ வான் மதியே
தூது செல்லு வான் மதியே