Showing posts with label வா வா அன்பே. Show all posts
Showing posts with label வா வா அன்பே. Show all posts

Wednesday, November 1, 2017

வா வா அன்பே

வா வா அன்பே

Movie Eeramaana Rojaave Music Ilaiyaraaja
Year 1991 Lyrics Vaali
Singers K. J. Yesudas, S. Janaki

வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்

வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

மாலை நேர சூரியன்
மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலி ஓர பூக்களின்
வசந்த கீதம் கேட்கிறான்

அந்தி வெய்யில் வேலைதான்
ஆசை பூக்கும் நேரம்
புல்லின் மீது வாடைதான்
பனியை மெல்ல தூவும்

போதும் போதும் தீர்ந்தது வேதனை

வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை

விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை

பெண் : வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்

வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

நீலம் பூத்த பார்வைகள் நூறு கடிதம் போட்டது
நீயும் நானும் சேர்ந்திட நேரம் பொழுது கேட்டது

மலரை வண்டு மொய்த்திட மாதம் தேதி ஏது
மீன மேஷம் பார்ப்பதோ காதல் தோன்றும் போது

காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன்

கையில் நான் உன்னை வாங்கினேன் வாங்கினேன்

பெண் : நீயும் நீயல்ல நானும் நானல்லா கண்ணா

வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்

வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே