Showing posts with label வா என்றது உருவம். Show all posts
Showing posts with label வா என்றது உருவம். Show all posts

Thursday, November 9, 2017

வா என்றது உருவம்

வா என்றது உருவம்

வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் அவர்
யார் என்றது இதயம்
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் அவர்
யார் என்றது இதயம்

கண் கொண்டது மயக்கம்
இரு கால் கொண்டது தயக்கம்
மனம் கொண்டது கலக்கம்
இனி வருமோ இல்லையோ உறக்கம்

வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் அவர்
யார் என்றது இதயம்

மாலை நிலாவினைக் கேட்டேன்
என் மனதில் வந்தது என்ன
ஆசை என்றது நிலவு
ஆம் அதுதான் என்றது மனது

வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் அவர்
யார் என்றது இதயம்

ஏதோ ஒரு வகை எண்ணம் அதில்
ஏனோ ஒரு வகை இன்பம்
ஒரு நாள் ஒரு முறைக் கண்டேன்
அவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்

வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் அவர்
யார் என்றது இதயம்