Showing posts with label வசந்தம் பாடி வர. Show all posts
Showing posts with label வசந்தம் பாடி வர. Show all posts

Thursday, November 9, 2017

வசந்தம் பாடி வர

வசந்தம் பாடி வர

படம் : ரயில் பயணங்களில்
பாடல் : வசந்தம் பாடி
இசை : டி.ராஜேந்தர்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் , எஸ்.ஜானகி

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா

கரை புரண்டு ஓடும் தேன் கற்கண்டின் சாரம்
உன் குரல் செய்யும் ஜாலம் மாங்குயில் கூட நாணும்..ஹா..ஹாஹா..
சிதம்பர ரகசியம் போல் உந்தன் அதிசய கீதம்
தினம் தினம் கேட்டிட பிறந்திடும் புதுவித ராகம்
பூவதன் வாசத்தில் தென்றலும் மலர்ந்தது
என சொல்லவா என் கள்ளவா

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா

மந்திரங்கள் கமழ இளம் மை விழிகள் சுழல
மயக்கம் வரவழைக்கும் உன் மது சுரக்கும் நாதம் ஹா..ஹா.ஹாஹா.
யாழென குழலென இழைந்திடும் குரலெனில் மோகம்
அமுதுண்ண நினைத்திடும் தேவனும் மயங்கிடும் வேதம்
மனதினில் ஆசைகள் இதழினில் ஓசைகள்
என பாடுதே மனம் நாடுதே

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா