Showing posts with label ராதைக்கேற்ற கண்ணனோ. Show all posts
Showing posts with label ராதைக்கேற்ற கண்ணனோ. Show all posts

Sunday, October 1, 2017

ராதைக்கேற்ற கண்ணனோ

ராதைக்கேற்ற கண்ணனோ

படம் : சுமை தாங்கி (1962)
இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
பாடகர் : எஸ். ஜானகி

ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ

காதலிப்பவனோ அதில் பேர் எடுப்பவனோ
கண்ணிரண்டில் பெண் இனத்தை கைது செய்பவனோ
ஆதரிப்பவனோ உன்னை அனுசரிப்பவனோ
இல்லை ஆசை தீரும் போது நெஞ்சம் மாறுகின்றவனோ
அஹா…ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ

சிரித்த முகத்தை வருத்தி போக பிறந்து வைத்தானோ
அவன் தேக்கு மரத்தை போல உருண்டு திரண்டு நிற்பானோ
சிரித்த முகத்தை வறுத்தி போக பிறந்து வைத்தானோ
அவன் தேக்கு மரத்தை போல உருண்டு திரண்டு நிற்பானோ
மூக்கும் விழியும் பார்க்க பார்க்க மோகத்தை தருமோ
இல்லை முன்னழகை பார்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ
அஹா…ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ

சரச கலா சாலையிலே பட்டம் பெற்றவனோ
அவன் சாகச கலை கூடத்திலே பாடம் கற்றவனோ
சரச கலா சாலையிலே பட்டம் பெற்றவனோ
அவன் சாகச கலை கூடத்திலே பாடம் கற்றவனோ
இளைய கண்ணி உன்னை எண்ணி ஏங்கி நிற்பவனோ
இல்லை இன்னும் வேறு யாரையேனும் காதலிப்பவனோ
அஹா…ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ