Showing posts with label பூவிழி வாசலில். Show all posts
Showing posts with label பூவிழி வாசலில். Show all posts

Friday, October 6, 2017

பூவிழி வாசலில்

பூவிழி வாசலில்

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே

இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது என்னையே
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளம் கிளியே கிளியே

அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது என்னையே

அரும்பான காதல் பூவானது அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது உருகவும் மயங்கவும் ஓடுது

மோகம் வரும் ஒருவேளையில் நாணம் வரும் மறுவேலையில்
இரண்டும் போராடுது.. துடிக்கும் இளமை அடக்கும் பெண்மை

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே

இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது என்னையே

இளமாலை தென்றல் தாலாட்டுது இளமையின் கனவுகள் ஆடுது
மலைவாழை கால்கள் தள்ளாடுது மரகத இலை திரை போடுது

கார்மேகமோ குழலானது ஊர் கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ எனக்கும் உனக்கும் பொருத்தம்தானே

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே

இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது உன்னையே

கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ கலையிது அறிமுகம் வேண்டுமா
அசைந்தாடும் ஊஞ்சல் நாமாகவோ நவரச நினைவுகள் தோன்றுமா

பூமேனியோமலர் மாளிகை பொன்மாலையில் ஒரு நாழிகை
நாளும் நானடாவோ அணைக்கும் துடிக்கும் சிலிர்க்கும் மேனி

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரலாம் தனியே மெல்ல தொடலாம் கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது உன்னையே