Showing posts with label பூமாலையே. Show all posts
Showing posts with label பூமாலையே. Show all posts

Monday, October 16, 2017

பூமாலையே,தோள்

பூமாலையே,தோள்

இசை: இளையராஜா

பாடியவர்கள்:  இளையராஜா ஜானகி      

பூமாலையே,
தோள் சேர வா
பூமாலையே (ஏங்கும் இரு)
தோள் சேர வா (வாசம் வரும்)
பூமாலையே (ஏங்கும் இரு)
தோள் சேர வா

இளைய மனது, இணையும் பொழுது,
பூஜை மணியோசை, பூவை மனதாசை,
புதியதோர் உலகிலே பறந்ததே

நான் உனை நினைக்காத நாள் இல்லையே,
தேனினைத் தீண்டாத பூ இல்லையே
(என்னை உனக்கென்று கொடுத்தேன்)
நான் உனை நினைக்காத நாள் இல்லையே,
தேனினைத் தீண்டாத பூ இல்லையே
(ஏங்கும் இளங்காதல் மயில்)
தேன் துளி பூ வாயில்,
பூவிழி மான் சாயல்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும்,
வந்து தழுவும் ஜென்மம் முழுதும்,
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்
கலையெலாம் பழகுவோம் அனுதினம்

பூமாலையே,
தோள் சேர வா
பூமாலையே (ஏங்கும் இரு)
தோள் சேர வா (வாசம் வரும்)
பூமாலையே (ஏங்கும் இரு)
தோள் சேர வா

கோடையில் வாடாத கோயில் புறா,
காமனைக் காணாமல் காணும் கனா,
(இரவில் தூங்காது ஏங்க)
கோடையில் வாடாத கோயில் புறா,
காமனைக் காணாமல் காணும் கனா,
(நாளும் மனம் போகும் எங்கோ)
விழிகளும் மூடாது, விடிந்திடக் கூடாது,
கன்னி இதயம் என்றும் உதயம், இன்று தெரியும் இன்பம் புரியும்,
காற்று சுதி மீட்ட காலம் ஜதி கூட்ட
கனவுகள் எதிர் வரும் அனுபவம்.

பூமாலையே,
தோள் சேர வா
பூமாலையே (ஏங்கும் இரு)
தோள் சேர வா (வாசம் வரும்)
பூமாலையே (ஏங்கும் இரு)
தோள் சேர வா