Showing posts with label பூங்காற்றே தீண்டாதே. Show all posts
Showing posts with label பூங்காற்றே தீண்டாதே. Show all posts

Monday, October 9, 2017

பூங்காற்றே தீண்டாதே

பூங்காற்றே தீண்டாதே

பாடல்: பூங்காற்றே தீண்டாதே
திரைப்படம்: குங்குமச்சிமிழ்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவள் நீ தொடும் போதிவள்
போராடும் எண்ணங்கள் தாங்காதே
என் பொன்மேனி கண்மூடி தூங்காதே
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே

வெள்ளிரத மேகமே செல்லுகின்ற போதிலே
என் அருமை மன்னனை கண்டு வருவாய்
கன்னி இளம் பூங்கொடி காதலெனும் வியாதியில்
துன்பப்படும் சேதியை சொல்லிவந்து சேருவாய்
தேகத்தில் மோகத்தீ ஆறாமல்
தேய்ந்திடும் சூடத்தில் தேகத்தின் மாடத்தில்
என் கண்ணன் கைசேர சொல்வாயோ
என் தூதை நீ சொல்ல செல்வாயோ
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே

கண்ணனவன் காலடி கண்டு தினம் சேரடி
என்றும் உந்தன் பாதையில் இன்பங்களடி
கங்கை நதி போலவே மங்கை மனம் ஓடுதே
பொங்கி பல ராகமே இந்த மனம் பாடுதே
பல்லாக்கில் ஊர்கோலம் போகாதோ
மாதிவள் மான் இனம் பூவிதழ் தேன் இனம்
உண்ணாமல் ஏங்காதோ என் உள்ளம்
இனி என்னோடு ஒன்றாகும் உன் உள்ளம்

பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவள் நீ தொடும் போதிவள்
போராடும் எண்ணங்கள் தாங்காதே
என் பொன்மேனி கண்மூடி தூங்காதே
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே