Showing posts with label புத்தம் புது பூ பூத்ததோ. Show all posts
Showing posts with label புத்தம் புது பூ பூத்ததோ. Show all posts

Sunday, October 1, 2017

புத்தம் புது பூ பூத்ததோ

புத்தம் புது பூ பூத்ததோ

Movie: Thalapathi

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே....
வாய் பேசும் வார்த்தையெல்லாம்
கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையைத்தான்
கண்ணீரும் சொன்னதோ !!.....

பால் நிலா தேய்கின்றதென்று
பகலிரவும் என் நெஞ்சம்
வழி விடுமோ என்றஞ்சும்....
ஆதவன் நீ தந்ததன்றோ
நிலவு மகள் என் வண்ணம்
நினைவுகளில் உன் எண்ணம்....
கருணை கொண்டு நீ தான்
காயம் தன்னை ஆற்ற
 பார்வைக் கொண்டு நீ தான்
பாச தீபம் ஏற்ற...
உயிரென நான் கலந்தேன் !!....

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே....
வாய் பேசும் வார்த்தையெல்லாம்
கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையைத்தான்
கண்ணீரும் சொன்னதோ !!.....

வாழ்வெனும் கோலங்கள் இன்று
வரைந்தது உன் தொண்டுள்ளம்
நெகிழ்ந்தது என் பெண் உள்ளம்
 ஈத்திசை பூபாளம் என்று
எழுந்தது பார் நம் தானம்
விடிந்தது நம் செவ்வானம்....
கூந்தல் மீது பூவாய்
நானும் உன்னை சூட
தோகை உன்னை நான்தான்
தோளில் இன்று வாங்க
 உனக்கென நான் பிறந்தேன் !!!...