பால் வண்ணம்
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன் !....
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் !!.....
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன் !....
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா ?...
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ணப் பாடம் சொல்ல
எண்ணம் இல்லையா ?.....
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன் !....
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் !!.....
மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா ?....
நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா ?.....
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன் !....
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் !!.....
பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா ?... நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா ?....
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன் !....
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் !!.....