Showing posts with label நீ இல்லாத. Show all posts
Showing posts with label நீ இல்லாத. Show all posts

Tuesday, October 31, 2017

நீ இல்லாத

நீ இல்லாத

படம்  :தெய்வத்தின் தெய்வம்
குரல்:சுசிலா அம்மா

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை

காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை

உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக் காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை

பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னைப் புரிந்த போது சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே இன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே இன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான் என்றும் உன்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை