Showing posts with label நான் பேச வந்தேன். Show all posts
Showing posts with label நான் பேச வந்தேன். Show all posts

Thursday, October 19, 2017

நான் பேச வந்தேன்

நான் பேச வந்தேன்

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள் !!....
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள் !!....

ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
படபட படபட படவென வரும் பாவங்கள்....
ஆலிலை மீது தழுவிடும் காற்று
சலசல சலசல சலவென வரும் கீதங்கள்....
குலமகள் நாணம் உடன் வரும் போது
மௌனமே இடைதான் தூது
ஒரு கிளி ஊமை…
ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை…ஹா !!....

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள் !!....

கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கலகல கல கலவென வரும் எண்ணங்கள்...
ஓவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பளபள பளபள பளவென வரும் கிண்ணங்கள்....
சொல் என கண்ணும்
நில் என நெஞ்சும்
சொல் என கண்ணும்…
நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை !....
சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால்
அதுதான் ஆனந்த எல்லை !!!....

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள் !!....