Showing posts with label நான் உன் அழகினிலே. Show all posts
Showing posts with label நான் உன் அழகினிலே. Show all posts

Tuesday, October 3, 2017

நான் உன் அழகினிலே

நான் உன் அழகினிலே

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
என்னில் இணைய உன்னை அடைய
என்ன தவங்கள் செய்தேன்
நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து

கொஞ்சும் உலகை காண்போம்
காதல் ஒளியில் கால விழியில்
கால்கள் பதித்து போவோம்
இதுவரை யாரும் கண்டதில்லை
நான் உணர்ந்த காதலை
உயிரே அதையே நீ உணர்ந்ததனால்..

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
வானம் கனவு பூமி கனவு

நீயும் நானும் நிஜம் தானே
பொய்கள் கரையும் உண்மை விரியும்
யாவும் மறைவதேனோ
எந்தன் நினைவை நீயும் குடிக்க
அண்டம் கரைவதேனோ
உலகமே அகசிவப்பில் ஆனதே
உனது நாணம் சிந்தியே
உடனே அதிலே நான் வசிப்பதால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தில் நிறம் பார்த்ததால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்