Showing posts with label தேன் சிந்துதே வானம். Show all posts
Showing posts with label தேன் சிந்துதே வானம். Show all posts

Sunday, October 1, 2017

தேன் சிந்துதே வானம்

தேன் சிந்துதே வானம்

படம்: பொண்ணுக்கு தங்க மனசு
இசை: ஜி.கே.வெங்கடேஷ்
குரல்: எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
பாடல்: கண்ணதாசன்

தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாழைக்கால்கள்
பனிமேடை போடும் பால்வண்ண மேனி
பனிமேடை போடும் பால்வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம்…பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தான் வேறேன்ன வேண்டும்
விளையாட வந்தான் வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும்…சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களே இதம் பதம்…காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க