தண்ணிலவு தேனிறைக்க
படித்தால் மட்டும் போதுமா !
திரைப்படத்தில்
எம் .எஸ் .விஸ்வநாதன் அவர்கள் இசையில்
சுசிலா அம்மா அவர்கள் குரலில் .
தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்
தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்
நெஞ்சமதில் அலை எழும்ப தஞ்சமலர் அடி கலங்க
அஞ்சி அஞ்சி இடை துவழ வந்தாள் அங்கு
அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள் நினைந்து நின்றாள்
தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்
நாணி நின்றாள்
விண்ணளந்த மனம் இருக்க மண்ணளந்து அடி எடுக்க
பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள்
ஒரு பூவளந்த முகத்தை கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்
தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்
பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மனமிருக்க
கட்டிலிற்கு மிக நெருங்கி வந்தாள்
இரு கண் விழியில் கவிதை கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்
தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்.