Showing posts with label சுந்தரி கண்ணால் ஒரு சேதி. Show all posts
Showing posts with label சுந்தரி கண்ணால் ஒரு சேதி. Show all posts

Monday, October 2, 2017

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

என்னைதான் அன்பே மறந்தாயோ.
மறப்பேன் என்றே  நினைத்தாயோ. !

சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
ஆ...ஆ...வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை
வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை
எனைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ

என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே