Showing posts with label கோவில் மணி ஓசை. Show all posts
Showing posts with label கோவில் மணி ஓசை. Show all posts

Saturday, October 7, 2017

கோவில் மணி ஓசை

கோவில் மணி ஓசை

ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ..
இங்கு வந்ததாரோ ...
பாஞ்சாலி பாஞ்சாலி

பெ : கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ..
அவர் என்ன பேரோ ...
பரஞ்சோதி ... பரஞ்சோதி ..

ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ...
இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ பிஞ்சு பூவோ ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ ... தூதானதோ ..

பெ : கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ..
அவர் என்ன பேரோ
பாட்டு பாடும் கூட்டத்தாரோ ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு ...

ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ...

ஆ : பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு ...
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே ..
சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை
என்னை வென்றாளம்மா ...

ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ..

பெ : ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்ல கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாலே .. வந்தாலே ..
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா ..
பாடும் வரை பாடு தாளத்தோடு ...
அதை நீயே கேளு ....

பெ : கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ..

ஆ : என் மனது தாமரை பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக ..
பெ : ஊரில் ஒரு பெண்ணா இல்லை.. தேடி பாரு
நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு
ஆ : அது நீதானம்மா

ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ..
இங்கு வந்ததாரோ ...
பெ : பாட்டு பாடும் கூட்டத்தாரோ ..
ஆ : ஏழை குயில் கீதம் தரும் நாதம்
பெ : அது கொண்டாந்ததோ என்னை இங்கு ...
பெ : கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ..