Showing posts with label கேட்டால் நான். Show all posts
Showing posts with label கேட்டால் நான். Show all posts

Thursday, November 16, 2017

கேட்டால் நான்

கேட்டால் நான்

படம்: இரு நிலவுகள்
நடிகர்கள்: கமல்ஹாசன், ஜெயசுதா & ரோஜாரமணி
தொடவரவோ தொந்தரவோ
உனது உளமே சம்மதமோ
இடையோ அழகோ
சிறு நூல் அளவோ
ஆஹா அள்ளிடவோ
ஆஆஆஆ
தொடவிடவோ தொடர்ந்திடவோ
உனது உளமே சம்மதமோ
இடையோ இதழோ
இதுவோ அதுவோ

கேட்டால் நான் தரவோஓஓஓஓ
தொடவிடவோ தொடர்ந்திடவோ
உனது உளமே சம்மதமோ
தொடவரவோ தொந்தரவோ
உனது உளமே சம்மதமோ
மலரே நீ என்னை இளமை அரசாள
எதிர் நின்ற யுவராணியோ
மடிமேலே வந்து விழியால் மலர் மாற்ற
இதுதான் பொழுதல்லவோ
நான் தானே கள்ளு அருகேவா அள்ளூ
என்னை வாங்க நீ இல்லையோ
பூஜை செய்யென்று பூவே உன் வண்டு
மடியில் சாய்கின்றதோ
நீயோ என் ஊஞ்சல் நானே பூந்தென்றல்
நெஞ்சில் நின்றாடத்தான்
தொடவிடவோ தொடர்ந்திடவோ
உனது உளமே சம்மதமோ
ஹாஆஆ இடையோ அழகோ
சிறு நூல் அளவோ
ஆஹா அள்ளிடவோ
தொடவரவோ தொந்தரவோ
உனது உளமே சம்மதமோ
தொடவிடவோ தொடர்ந்திடவோ
உனது உளமே சம்மதமோ
குளிரில் நான் வாட தவித்தேன் நீ கூட
அம்மாடி ஆசை வரை
மழையில் பனி வாடை
வசமே மடல் வாழை
நீ வா காதல் மன்னாஆஆ
மலரே என் மேடை அழகே என் வீணை
வாட்டாத என் மோஹினி
விழியால் என் அன்பை
விலை கொண்ட பூவை
இடையோ தேடும் எடை
நீயோ தாலாட்ட ஏதோ தேனூட்ட
நானே துணையாகவோ
தொடவரவோ தொந்தரவோ
உனது உளமே சம்மதமோ
இடையோ இதழோ
இதுவோ அதுவோ

கேட்டால் நான் தரவோஓஓஓஓ
தொடவரவோ தொந்தரவோ
உனது உளமே சம்மதமோ
தொடவரவோ தொந்தரவோ
உனது உளமே சம்மதமோ
தொடவரவோ தொந்தரவோ
உனது உளமே சம்மதமோ