Showing posts with label கூவுற குயிலு. Show all posts
Showing posts with label கூவுற குயிலு. Show all posts

Friday, October 6, 2017

கூவுற குயிலு

கூவுற குயிலு

எஸ்.ஜானகி:
கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு

எஸ்.பி.பாலு: அவ்வளவு தானா? இப்ப பாரு

எஸ்.ஜானகி: சரிதான்

எஸ்.பி.பாலு: ப்ச் மேலபாடு

எஸ்.ஜானகி: நீயும் பதில் சொல்லக்கேட்டு

எஸ்.பி.பாலு: ச்ச்ச்ச் ஒஹோ ஹோ

எஸ்.ஜானகி: ம் பரவயில்லையே

எஸ்.பி.பாலு: ஹே பேச்சமாத்தாதே பாட்டப்படி

எஸ்.ஜானகி: மாமா மயங்கிடலாமா

கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு
நீயும் பதில் சொல்லக்கேட்டு
மாமா மயங்கிடலாமா
என் மாமா மயங்கிடலாமா

கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு
நீயும் பதில் சொல்லக்கேட்டு
மாமா மயங்கிடலாமா
என் மாமா மயங்கிடலாமா

ஏன் மனசு ஒரு ராகத்துலே
தினம் பாடி பாடி மெல்லப்பறக்குது
மா நீ விலகும் அந்த நேரத்துல
உன்னைத்தேடித்தேடி தானே கிறங்குது

எஸ்.பி.பாலு:
அச்சுவெல்லம் பேச்சுல அச்சுவெல்லம்
கிட்டவரும் நேரத்துல அச்சம் வரும்

எஸ்.ஜானகி:
நான் ஓடாத நீரு நீ தானாக சேரும் ஆறு

எஸ்.ஜானகி: மாமா
எஸ்.பி.பாலு: ம்ம்ம்
எஸ்.ஜானகி: மயங்கிடலாமா
எஸ்.பி.பாலு: ம்ஹ்ஹிம்
எஸ்.ஜானகி: அட மாமா மயங்கிடலாமா

ஓஓ.. கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு
நானும் மயங்கினேன் கேட்டு
மானே

எஸ்.ஜானகி:ம்ம்

மனசுக்குள் தேனே

எஸ்.ஜானகி:ம்ம்ஹிஹ்ம்

மானே மனசுக்குள் தேனே

நான் அருகே வரும் நேரத்துல
மண்மேல தானே கோலம் போடுது மானே

எஸ்.ஜானகி:
ஊர் உறங்கும் நடு சாமத்துல
கண் மூடி மூடி தாளம் போடுது மாமா

வத்தாதம்மா ஆசை நதி வத்தாதம்மா

எஸ்.ஜானகி:
குத்தாலாமா நியும் என்னை குத்தாலாமா

நீ ஆடாதா நாத்து நான் ஆலோலம் பாடும் காத்து
மானே

எஸ்.ஜானகி: ம்ம்

மயங்குறேன் நானே

எஸ்.ஜானகி: ம்ஹா

எம்மானே மயங்குறேன் நானே

எஸ்.ஜானகி:
ஓய் கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு
நீயும் பதில் சொல்லக்கேட்டு
மாமா
ம்ஹ்ஹ்ம்

எஸ்.ஜானகி: மாமா மயங்கிடலாமா
என் மாமா மயங்கிடலாமா