Showing posts with label கீரவாணி. Show all posts
Showing posts with label கீரவாணி. Show all posts

Wednesday, November 1, 2017

கீரவாணி

கீரவாணி

கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை ?....
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி.... வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே !!...

நீ பார்த்ததால் தானடி
சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி
பூ பூத்தது பூங்கொடி !....
தவம் புரியாமலே
ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே
ஒரு இடம் கேட்கிறாய் !....
ஒரு வாய் பெறுவாய் மெதுவாய்....
தலைவனை நினைத்ததும்
தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய் !!....

கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை ?....
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி.... வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே !!...

புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டை தான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்....
இந்த வனமெங்கிலும்
ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும்
அதை தினம் பாடினேன்
மலரில் மலராய் மலர்ந்தேன்....
பறவைகள் இவளது
உறவுகள் என தினம்
கனவுகள் பல வளர்த்தேன் !!!!.....

கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை ?....
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி.... வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே !!...