Showing posts with label காதல் வைபோகமே. Show all posts

Saturday, October 21, 2017

காதல் வைபோகமே

காதல் வைபோகமே

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய்
ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே

கோடை காலத்து தென்றல் குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடை காலத்தில் கூடல் விளையாடல் ஊடல்
வானம் தாலாட்டு பாட மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என்கையில் ஆட சுகம் தேட கூட
பூவில் மேடை அமைத்து பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு இது கல்யாண பரபரப்பு

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய்
ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே

எண்ணம் என் எண்ண வண்ணம் இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம் புது தாகம் தாபம்
மேகலை பாடிடும் ராகம் ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம் சமபோகம் யோகம்
வாழ்ந்தால் உந்தன் மடியில் வளர்ந்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன் ஏழேழு ஜென்மம் எடுப்பேன்