Showing posts with label கல்யாண வளையோசை. Show all posts
Showing posts with label கல்யாண வளையோசை. Show all posts

Wednesday, November 8, 2017

கல்யாண வளையோசை

கல்யாண வளையோசை

கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு..
மாமன் … என். மாமன் மாமன் என் மாமன்
கண்சிவக்க? காத்திருக்கு கண்ணிரண்டும் பூத்திருக்கு
வஞ்சி வரும் தேதி சொல்லு
வந்த பின்னால் மீதி சொல்லு
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு

பாய் விரிக்க உன்னை புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
பாய் விரிக்க உன்னை புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
கையோடு நெய்வழிய கண்ணோடு மை வழிய
அத்தானுக்கு முத்தாடத்தான் ஆசையிருக்காதோ… ஆசையிருக்காதோ

கல்யாண வளையோசை கொண்டு
கச்தூரி மான் போல இன்று
வந்தாளே இளம் வாளை தண்டு
வாடாத வெண்முல்லை செண்டு..

ஏர் பிடித்த கைகள் இடை பிடிக்க
ஆ..இடை பிடிக்க
நீர் வயல்போல் நெஞ்சில் நெளிந்திருக்க
பொன்னான நெல்மணிகள் கண்ணே உன் கண்மணிகள்
தண்ணீரிலே செவ்வாழை போல் தாவி சிரிக்காதோ..தாவி சிரிக்காதோ

கல்யாண வளையோசை கொண்டு
கச்தூரி மான் போல இன்று
வந்தாளே இளம் வாளை தண்டு
வாடாத வெண்முல்லை செண்டு